நவம்பர் 30 முதல் நிறுத்தப்படும்.. SBI பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. பணம் அனுப்புவதில் முக்கிய மாற்றம்!
எஸ்பிஐ (SBI) என்கிற ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) ஆனது வருகிற 2025 நவம்பர் 30 ஆம் தேதி முதல், பணம் அனுப்புவது (Money Transfer ) தொடர்பாக அமலுக்கு வரும் முக்கிய மாற்றம் ஒன்றை அறிவித்து உள்ளது.
நவம்பர் 30, 2025 க்கு பிறகு ஆன்லைன் எஸ்பிஐ (OnlineSBI) மற்றும் யோனா லைட் (YONO Lite) வழியாக எம்கேஷ் அனுப்புதல் மற்றும் உரிமை கோரும் வசதியை (mCASH Sending and Claiming Facility) நிறுத்துவதாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்து உள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட ஒரு செய்தியில் "30.11.2025 க்கு பிறகு ஆன்லைன்எஸ்பிஐ மற்றும் யோனா லைட்டில் எம்கேஷ் (அனுப்புதல் மற்றும் உரிமை கோருதல்) வசதி கிடைக்காது. மூன்றாம் தரப்பு பயனாளிகளுக்கு பணத்தை அனுப்ப யுபிஐ (UPI), ஐஎம்பிஎஸ் (IMPS), என்இஎப்டி (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) போன்ற மாற்று பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்தவும்" என்று எஸ்பிஐ கூறியுள்ளது.
எஸ்பிஐ எம்கேஷ் என்றால் என்ன? ஸ்டேட் பேங்க் எம்கேஷ் (State Bank mCASH) என்பது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் இண்டர்நெட் பேங்கிங் அல்லது ஸ்டேட் பேங்க் எனிவேர் மொபைல் ஆப் மூலம் அனுப்பும் நிதியை, ஒரு மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியை மட்டும் பயன்படுத்தி, பெறுவதற்கான எளிய மற்றும் விரைவான வழியாகும்.
இண்டர்நெட் பேங்கிங் வசதி உள்ள எந்தவொரு எஸ்பிஐ வாடிக்கையாளரும், பயனாளியின் பதிவு (Beneficiary Registration) இல்லாமல், வெறுமனே பயனாளியின் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியை உள்ளிட்டு, அவர்களின் மொபைல் காண்டாக்ட் லிஸ்ட்டில் இருந்து தேர்ந்தெடுப்பதன் மூலம் மூன்றாம் தரப்பினருக்கு பணப்பரிமாற்றம் செய்யலாம்.
இந்த வழியில் பணம் பெற பயனாளிக்கு எஸ்பிஐ பேங்க் அக்கவுண்ட் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஏதோவொரு வங்கி கணக்கு இருந்தால் போதும் . அனுப்புநர் தேர்ந்தெடுத்த ஊடகத்தின் அடிப்படையில் பெறுநர் எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சலில் ஒரு இணைப்பை பெறுவார்.
கூடவே 8 இலக்க கடவுக்குறியீடும் (8 digit passcode) வழங்கப்படும். அது - நிதியை பெறுவதற்கு ஆன்லைன் எஸ்பிஐ அல்லது ஸ்டேட் பேங்க் எம்கேஷ் மொபைல் ஆப்பில் (ஆண்ட்ராய்டு பிளாட்ஃபார்ம்) ப்ரீ லாக்-இன் செயல்முறையின் (Pre-login of Online SBI or State Bank mCASH mobile App) போது தேவைப்படும்.
இந்த எம்கேஷ் சேவை ஆனது வருகிற நவம்பர் 30 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுவதால் எஸ்பிஐ வங்கியின் கூற்றுப்படி இனி பணப்பரிமாற்றம் செய்ய இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றங்களை அனுமதிக்கும் நான்கு பொதுவான வழிகளை பயன்படுத்தலாம்: யுபிஐ, ஐஎம்பிஎஸ், என்இஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ்.
இவைகளில் யுபிஐ தான் பணத்தை மாற்றுவதற்கான மிகவும் வேகமான மற்றும் எளிதான முறையாகும், மேலும் இது 24 மணிநேரமும் வாரத்தில் 7 நாட்களும் வேலை செய்யும். இதை பயன்படுத்த, பெறுநரின் யுபிஐ ஐடி, மொபைல் எண் அல்லது க்யூஆர் குறியீட்டுடன் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), பீம் (BHIM) அல்லது எஸ்பிஐ யோனா (SBI YONO) போன்ற யுபிஐ ஆப்கள்வழியாக பணம் அனுப்பலாம்
இதேபோல ஐஎம்பிஎஸ் (IMPS) என்கிற உடனடி பணம் செலுத்தும் சேவை (Immediate Payment Service), என்இஎப்டி (NEFT) என்கிற தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (National Electronic Funds Transfer) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) என்கிற நிகழ்நேர க்ராஸ் செட்டில்மென்ட் (Real-Time Gross Settlement) ஆகிய பணப்பரிமாற்ற முறைகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








