SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பு மாற்றம்- எவ்வளவு தெரியுமா?

|

எஸ்பிஐ வங்கி 45 கோடி வாடிக்கையாளர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கிறது. குறைந்தபட்ச இருப்பு வரம்பை குறைத்து அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரங்கள் வாரியான விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

நாட்டின் மகிப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

நாட்டின் மகிப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

நாட்டின் மகிப்பெரிய வங்கியாக திகழும் அரசு நடத்தும் வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 45 கோடி வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது. எஸ்பிஐ வங்கி மெட்ரோ மற்றும் கிராமப்புறங்களுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பைக் குறைத்திருக்கிறது.

குறைந்தபட்ச இருப்புத் தொகை

குறைந்தபட்ச இருப்புத் தொகை

குறைந்தபட்ச இருப்புத் தொகை குறித்து பார்க்கையில் சராசரி மாத இருப்பு மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களுக்கு ரூ.3000 ஆகவும் கிராமப்புறங்களுக்கு ரூ.1000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிப்பு கட்டண வசூலும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்க்கலாம்.

சுமார் 45 கோடி வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம்

சுமார் 45 கோடி வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம்

இதன்மூலம் எஸ்பிஐ சுமார் 45 கோடி வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்படியான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ குறைந்தபட்ச இருப்பு கட்டணத்தை ஏப்ரல் 2017 முதல் செயல்படுத்தியது என தெரிவிக்கப்படுகிறது. குறைந்தபட்ச நிலுவைத் தொகை பராமரிக்காததற்கு ரூ.5-15 கண்டனமும் தனியாக ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

மெட்ரோ நகரங்களில் இருப்புத் தொகை

மெட்ரோ நகரங்களில் இருப்புத் தொகை

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் இருப்புத் தொகை ரூ.3000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை 50 சதவீதத்திற்குள் இருக்கும் போது ரூ.10 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். பற்றாக்குறை 50 சதவீதம் முதல் 75 சதீவதம் வரை இருக்கும் போது ரூ.12 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். பற்றாக்குறை 75 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும்போது ரூ.15 ப்ளஸ் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

பேங்க்ல இருந்து பேசுறேன் ஒடிபி நம்பர் சொல்லுங்க சார்.! நம்பி சொன்னவருக்கு ரூ.10.30லட்சம் இழப்பு.!பேங்க்ல இருந்து பேசுறேன் ஒடிபி நம்பர் சொல்லுங்க சார்.! நம்பி சொன்னவருக்கு ரூ.10.30லட்சம் இழப்பு.!

புறநகர்கள் பகுதிகளில் இருப்புத் தொகை

புறநகர்கள் பகுதிகளில் இருப்புத் தொகை

புறநகர்கள் பகுதிகளில் இருப்புத் தொகை ரூ.2000 ஆக இருக்கிறது. பற்றாக்குறை 50 சதவீதத்திற்குள் இருக்கும் போது ரூ.7.50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். பற்றாக்குறை 50 சதவீதம் முதல் 75 சதீவதம் வரை இருக்கும் போது ரூ.10 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். பற்றாக்குறை 75 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும்போது ரூ.12 ப்ளஸ் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

கிராமப்புற பகுதிகளில் இருப்புத் தொகை

கிராமப்புற பகுதிகளில் இருப்புத் தொகை ரூ.1000 ஆக இருக்கிறது. பற்றாக்குறை 50 சதவீதத்திற்குள் இருக்கும் போது ரூ.5 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். பற்றாக்குறை 50 சதவீதம் முதல் 75 சதீவதம் வரை இருக்கும் போது ரூ.7.50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். பற்றாக்குறை 75 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும்போது ரூ.10 ப்ளஸ் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன-என்ன வாங்கலாம்

என்ன-என்ன வாங்கலாம்

நெருங்கி வரும் பண்டிகை காலத்தில் அனைவருக்கும் ஏராளமான செலவுகள் காத்திருக்கிறது. வீட்டில் உள்ள அனைவருக்கும் ஷாப்பிங் செய்ய வேண்டும், வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது, என்ன-என்ன வாங்கலாம் என்று பலரும் தங்களின் பட்ஜெட்டை இப்போதிலிருந்தே கணக்கிடத் துவங்கி இருப்பீர்கள். SBI வாடிக்கையாளர்களுக்கு இந்த முறை ஷாப்பிங் பற்றிய கவலை தேவையில்லை.

டெபிட் கார்டுக்கு ஒரு புதிய சிறப்பு வசதி

டெபிட் கார்டுக்கு ஒரு புதிய சிறப்பு வசதி

ஏனெனில், SBI தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய டெபிட் கார்டுக்கு ஒரு புதிய சிறப்பு வசதியை அறிமுகம் செய்துள்ளது. வீட்டு உபகரணங்கள் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய வசதி பெரிதும் பயனளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. SBI வாடிக்கையாளர்களுக்கு இனி டெபிட் கார்டுடன் EMI வசதி கிடைக்கும் என்று வங்கி அறிவித்துள்ளது.

EMI வசதியுடன் ஆன்லைன் ஷாப்பிங்

EMI வசதியுடன் ஆன்லைன் ஷாப்பிங்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த டெபிட் கார்டுகள் இப்பொழுது கூடுதல் சக்திவாய்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது. இனி டெபிட் கார்டுகள் மூலம் பயனர்கள் EMI வசதியுடன் ஆன்லைன் ஷாப்பிங் செய்துகொள்ளலாம். இனி எளிதாக தவணை முறையில் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பி பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

source: pledgetimes.com

Best Mobiles in India

English summary
SBI Reduced the Minimum Balance Limit for Metro and Rural Areas:NewRules Gives Relief to Customers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X