Home
News

புது ரூல்ஸ்.. ஜூலை 1 முதல் அமல்.. பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு 2 அதிரடி மாற்றம்.. என்னென்ன வருது?

எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஆனது, வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இந்த விதிகளால் என்னென்ன மாற இருக்கிறது என்பதை கஸ்டமர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் பொருந்தாது.

போன்பே எஸ்பிஐ கார்டு செலக்ட் பிளாக் (PhonePe SBI Card SELECT BLACK) மற்றும் போன்பே எஸ்பிஐ கார்டு பர்பிள் (PhonePe SBI Card PURPLE) ஆகிய கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். பல்வேறு செலவின பிரிவுகளின் கீழ் பெறக்கூடிய ரிவார்டு பாயின்ட்களுக்கு (Reward Points) மாதாந்திர வரம்புகள் வருகின்றன.

புது ரூல்ஸ்.. ஜூலை 1 முதல் அமல்.. பேங்க் அக்கவுண்ட் இருக்கா?

இனிமேல் ரிவார்டுகளுக்கு தகுதிபெறாத பரிவர்த்தனைகளின் பட்டியல்களும் கொண்டுவரப்படுகின்றன. ஆகவே, ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த வரம்புகள் மற்றும் பட்டியல்களின்படி மட்டுமே ரிவார்டு பாயின்ட்களை பெற முடியும். ஆன்லைன் ஷாப்பிங், இன்சூரன்ஸ் பேமெண்ட்கள், யூடிலிட்டி பில்கள் (utility bills) மற்றும் யுபிஐ பேமெண்ட்களில் மாற்றங்கள் இருக்கும்.

போன்பே எஸ்பிஐ கார்டு செலக்ட் பிளாக் கார்டுகளில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் போன்பே வாயிலாக மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கான ரிவார்டு பாயின்ட்களில் (Reward Points) மாதாந்திர வரம்பு 2000 பாயின்ட்களில் இருந்து 1,000 பாயின்ட்களாக குறைக்கப்படும். போன்பே மூலம் செய்யப்படும் இன்சூரன்ஸ் பேமெண்ட்ளுக்கு இனி 500 ரிவார்டு பாயின்ட்கள் கிடைக்கும்.

இது தனி மாதாந்திர வரம்பாகும். போன்பே மூலம் மேற்கொள்ளப்படும் பிற தகுதியான பரிவர்த்தனைகளுக்கு மாதத்திற்கு 1500 ரிவார்டு பாயின்ட்கள் என்ற வரம்பு நிர்ணயிக்கப்படும். போன்பே எஸ்பிஐ கார்டு பர்பிள் கார்டுகளில் ஆன்லைன் செலவினங்களுக்கான மாதாந்திர ரிவார்டு பாயிண்ட்களின் (reward point) வரம்பு 1,000 பாயிண்ட்களில் இருந்து 750 பாயிண்ட்களாக குறைக்கப்படும்.

புது ரூல்ஸ்.. ஜூலை 1 முதல் அமல்.. பேங்க் அக்கவுண்ட் இருக்கா?

போன்பே வழியாக செய்யப்படும் இன்சூரன்ஸ் (insurance) பேமெண்ட்களுக்கு மாதத்திற்கு அதிகபட்சமாக 250 ரிவார்டு பாயிண்ட்கள் மட்டுமே வழங்கப்படும். தகுதியான பிற போன்பே பரிவர்த்தனைகளுக்கு மாதத்திற்கு 750 ரிவார்டு பாயிண்ட்கள் என்ற வரம்பு நிர்ணயிக்கப்படும். இப்போது, ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்காத பரிவர்த்தனைகளை பார்க்கலாம்.

ஜூலை 1ஆம் தேதி முதல், கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் கட்டணங்களுக்கு ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்காது. டோல் கேட்கள் மற்றும் பாலங்களுக்கான கட்டணங்களுக்கு ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்காது. மேலும், ஆபரணங்கள் வாங்குதல், கிஃப்ட் கார்டுகள் (Gift Cards) மற்றும் கிஃப்ட் வவுச்சர்களை (Gift Voucher) வாங்குதலுக்கும் ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்காது.

இதுபோக போன்பே தளத்திற்கு வெளியே செய்யப்படும் யூடிலிட்டி பில்களுக்கும் (utility bill) ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்காது. அதேபோல போன்பே தளத்துக்கு வெளியே செய்யப்படும் இன்சூரன்ஸ் பிரீமியம் பேமெண்ட்களுக்கும், போன்பே அல்லாத மற்ற யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்காது. இதன்படி ஜூலை 1ஆம் தேதி முதல் பாயிண்ட்கள் கொடுக்கப்படும்.

முன்னதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆனது ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளிலும் புதிய கட்டணங்களை அமலுக்கு கொண்டுவந்தது. இது ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. இந்த கட்டண விதிகளின்படி ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையில் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது. ஆனால், கிளை சேனல் வழியாக செய்யும்போது ரூ.2 கட்டணம் இருக்கிறது.

அதேபோல ரூ.10,000 முதல் ரூ.25,000 வரையிலான ஐஎம்பிஎஸ பரிவர்த்தனைகளில் ஆன்லைன் வழியில் கட்டணம் கிடையாது. கிளை சேனல் வழியாக செய்தால் ரூ.4 கட்டணம் இருக்கிறது. ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளில் ஆன்லைனுக்கு ரூ.2 கட்டணம் கிளை சேனலுக்கு ரூ.4 கட்டணம் இருக்கிறது.

ரூ.1,00,000 முதல் ரூ.2,00,000 வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளில் ஆன்லைனுக்கு ரூ.6 கட்டணம், கிளை சேனலுக்கு ரூ.12 கட்டணம் இருக்கிறது. ரூ.2,00,000 முதல் ரூ.5,00,000 லட்சம் வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளில் ஆன்லைனுக்கு ரூ.10 கட்டணம், கிளை சேனலுக்கு ரூ.20 கட்டணம் இருக்கிறது. கூடவே ஜிஎஸ்டி கட்டணமும் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
SBI New Reward Point Rules From July 1 2026 PhonePe Credit Cards Holders Need To Know This
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X