எக்ஸ்ட்ரா சார்ஜ் + GST தவிர்ப்பது எப்படி? பிப்.15 முதல் ரூ.25000 லிமிட்.. அமலுக்கு வரும் புது பேங்க் ரூல்ஸ்!
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான எஸ்பிஐ (SBI) என்கிற ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) ஆனது வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் தனது வங்கி சேவைகள் தொடர்பான புதிய விதிகளை (New Bank Rules) அறிவித்துள்ளது.
இதன் கீழ் ஐஎம்பிஎஸ் (IMPS) என்கிற உடனடி கட்டண சேவைக்கான (Immediate Payment Service) கட்டணங்கள், அதாவது ஆன்லைன் வழியாக பணம் அனுப்பும் சேவைக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இதன்படி வருகிற பிப்ரவரி 15, 2026 முதல் ஐஎம்பிஎஸ் கட்டணங்களில் (IMPS Charges) மாற்றங்கள் இருக்கும். இருப்பினும் இந்த சார்ஜை சில அக்கவுண்ட்களால் தவிர்க்க முடியும்.

எஸ்பிஐ அறிவித்துள்ள புதிய விதிகளின்படி டிஜிட்டல் முறையில் செய்யப்படும் ரூ.25,000 வரையிலான ஐஎம்பிஎஸ் பரிமாற்றங்கள் இலவசமாகவே இருக்கும். இலவச ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கான சேனல்களில் இண்டர்நெட் பேங்க், மொபைல் பேங்க் மற்றும் எஸ்பிஐ யோனா (SBI YONO) ஆப் ஆகியவை அடங்கும். இந்த சேனல்களை (தளங்களை) பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் செய்யும் சிறிய மதிப்புள்ள பரிமாற்றங்களில் (ரூ.25,000 என்கிற லிமிட்டில்) எந்த கட்டணமும் இருக்காது.
ஆனால் ரூ.25,000 க்கு மேலான பரிமாற்றங்கள் ஆனது வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் சேவை கட்டணங்களை சந்திக்கும். ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான பரிமாற்றங்களுக்கு, எஸ்பிஐ வங்கி ஆனது ரூ.2 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான கட்டணங்களுக்கு ரூ.6 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான பரிமாற்ற தொகைகளுக்கு ரூ.10 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும்.
சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டி தவிர்ப்பது எப்படி? சில குறிப்பிட்ட வகை வங்கி கணக்குகள் திருத்தப்பட்ட ஐஎம்பிஎஸ் கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. சிறப்பு திட்டங்களின் கீழ் எஸ்பிஐ சம்பள கணக்குகள் மற்றும் சிறப்பு சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இலவச ஐஎம்பிஎஸ் பரிமாற்றங்களை பெறுவார்கள்
இந்த கணக்குகளில் பாதுகாப்பு சம்பள தொகுப்பு (DSP), காவல்துறை மற்றும் துணை ராணுவ சம்பள தொகுப்பு (PMSP), இந்திய கடலோர காவல்படை சம்பள தொகுப்பு (ICSP), மத்திய அரசு சம்பள தொகுப்பு (CGSP), பொதுத்துறை சம்பள தொகுப்பு (PSP) மற்றும் ரயில்வே சம்பள தொகுப்பு (RSP) ஆகிய கணக்குகள் அடங்கும்.
மேலும், ஷௌர்யா குடும்ப ஓய்வூதிய கணக்கு, அதே போல் எஸ்பிஐ ரிஷ்டே குடும்ப சேமிப்பு கணக்கு ஆகிய வங்கி கணக்குகளும் இதில் அடங்கும். பரிவர்த்தனை மதிப்பைப் பொருட்படுத்தாமல், இந்த வகைகளின் கீழ் உள்ள கணக்கு வைத்திருப்பவர்களிடம் ஐஎம்பிஎஸ் பரிமாற்றங்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
மேலும் - பிரான்ச் அடிப்படையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு (branch-based IMPS transactions) புதிய கட்டணங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதை எஸ்பிஐ உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது வழக்கம் போல பரிமாற்றத்தின் அளவை பொறுத்து இவை ரூ.2 முதல் ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி வரை இருக்கும்.
வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்ற முக்கியமான ஐஎம்பிஎஸ் விதிகள்: ஒரு தனிநபர் தினசரி அடிப்படையில் செய்யக்கூடிய ஐஎம்பிஎஸ் பரிமாற்றங்களின் தொகை இன்னும் ரூ.5 லட்சமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐஎம்பிஎஸ் என்பது ஒரு நிகழ்நேர கட்டண முறையாகும், மேலும் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டவுடன், அதை செயல்தவிர்க்க (Undone) முடியாது. பரிவர்த்தனை செய்யப்பட்டவுடன், தவறை சரிசெய்வது சாத்தியமற்றது என்பதால், பரிமாற்றத்தை செய்வதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் பயனாளி விவரங்களை முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்று எஸ்பிஐ பரிந்துரைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








