Home
News

எஸ்பிஐ பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்.! இனிமேல் அந்த பிரச்சனை இருக்காது.!

எஸ்பிஐ என்று அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஆனது தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த வங்கி கொண்டுவரும் புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

 ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி

தற்சமயம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தனியார் துறை வங்கிகளுக்கு இணையாக அதிரடியாக பல சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றது, அதற்காக பல வசதிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது.

செய்யும் போதோ அல்லது மினி

அந்த வகையில் தற்சமயம் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி ஏடிஎம்களில் பேலன்ஸ் செக் செய்யும் போதோ அல்லது மினிஸ்டேட்மெண்ட் எடுக்கும்போதோ உங்களுக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வர அலர்ட் செய்யப்பட்டுள்ளது.

தான் தற்போது ஸ்டேட்

இந்த புதிய அம்சத்தினை தான் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது, இதன் காரணமாக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மோசடிகளில் இருந்து தப்பிக்கவும் இது வழி வகுக்கும். ஒருவேளை உங்களது ஏடிஎம்களை வைத்துவேறு யாரேனும் பேலன்ஸ் செக் செய்தாலோ அல்லது மினி ஸ்டேட்மெண்ட் எடுத்தாலோ உடனோ உங்களது பதிவு
செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வரும்.

இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நடக்க விருக்கும்

குறிப்பாக இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நடக்க விருக்கும் மோசடிகளை தடுக்க முடியும் என்று கருதி எஸ்பிஐ வங்கி சார்பில் தெரிவிக்ககப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் உங்கள் ஏடிஎம் கார்டு தவறாக பயன்படுத்தப் போவதாக நினைத்தால், உடனடியாக ஏடிஎம்களை பிளாக் செய்ய முடியும், அதாவது முடக்க முடியும்.

வைரஸ் பரவலுக்கு மத்தியில்

பின்பு கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இத்தகைய மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இத்தகைய சேவையை அறிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இத்தகைய எஸ்எம்எஸ்கள் உங்களது மொபைலுக்கு வரும் போது தவிர்க்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது. முன்பு ஏடிஎம்மில் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் போது மட்டும் இந்த அலர்ட் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பேலன்ஸ் பார்ப்பது, ஸ்டேட்மெண்

சுருக்கமாக பேலன்ஸ் பார்ப்பது, ஸ்டேட்மெண்ட் எடுப்பது நடவடிக்கையின் போதே எஸ்எம்எஸ் வந்தால், வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே மோசடிகளை தவிர்க்க முடியும். பின்பு மோசடியாளர்கள் உங்களது வங்கிக் கணக்கில் இருந்து எவ்வளவு பணம் இருக்கிறது என தெரிந்து கொள்ள கூட மினி ஸ்டேட் மெண்ட எடுக்கலாம், எனவே இத்தகைய மோசடிகளுக்கு இடம் கொடுக்கமால் உடனடியாக வங்கியை அணுகி உங்களது ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்யமுடியும். கண்டிப்பாக இது பாதுகாப்பான வசதியாகும்.

 எஸ்பிஐ ஏடிஎம் இல்லாமல் கூட

மேலும் எஸ்பிஐ ஏடிஎம் இல்லாமல் கூட பணத்தினை எடுக்கும் திட்டத்தினை வைத்துள்ளது, இதன் மூலம் டெபிட் கார்டைகொண்டு செல்லும் அவசியம் இருக்காது,இது ஏடிஎம் மோசாடி, குளோனிங் அபாயத்தை குறைக்கிறது. அதனுடன் இரவுஎட்டு மணிக்கு மேல் 10ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்தால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். எனவே பாதுகாப்புடன் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
SBI Introduces New Feature To Counter ATM Frauds: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X