இனிமேல் பணம் எடுக்க OTP அவசியம்: எஸ்.பி.ஐ புதிய அறிவிப்பு.!

|

எஸ்பிஐ என்று அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஆனது தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த வங்கி கொண்டுவரும் புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில்

இருக்கிறது.

 ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தும் பயனர்கள்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தும் பயனர்கள் இனி ஏ.டி.எம்மில் பணம் எடுக்க ஒடிபி கண்டிப்பாக அவசியம் என அந்த வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதுபற்றி முழுவிவரங்களையும் பார்ப்போம்.

மோசடி செய்யும் நபர்களின் வலையில் வீழாமல் இருப்பதற்காக

அதவாது வாடிக்கையாளர்கள் மோசடி செய்யும் நபர்களின் வலையில் வீழாமல் இருப்பதற்காக இந்த புதிய நடைமுறையை

கொண்டுவந்துள்ளோம் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் எஸ்பிஐ டெபிட் கார்டுகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் எஸ்.பி.ஐ ஏடிஎம் மையங்களில் இனி பணம் எடுக்கும் போது அவர்கள் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணக்கு வருகின்றன ஒடிபி-எண்ணை கொடுத்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும்.

த்தாயிரம் மற்றும் அதற்கு மேல்

ஆனால் தற்சமயம் பத்தாயிரம் மற்றும் அதற்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஒடிபி நடை பின்பற்றப்படும். வரும் 18-ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அனைத்து எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் செயல்முறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆப்பிள் வாட்ச் மற்றும் ஐபேட் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

இனிமேல் பணம் எடுக்க ஏ.டி.எம் மையங்களுக்கு

எனவே வாடிக்கையாளர்கள் இனிமேல் பணம் எடுக்க ஏ.டி.எம் மையங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக மொபைல் போனையும் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேசமயம் மொபைல் எண்ணை வங்கி கணக்கோடு இணைக்கதவர்கள் சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை அல்லது ஏ.டி.எம் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

மேலும் தற்சமயம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தனியார் துறை வங்கிகளுக்கு இணையாக அதிரடியாக பல சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றதுஇ அதற்காக பல வசதிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது.

இந்தியாவில் இரண்டு விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி

அன்மையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி ஏடிஎம்களில் பேலன்ஸ் செக் செய்யும் போதோ அல்லது மினி ஸ்டேட்மெண்ட் எடுக்கும்போதோ உங்களுக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வர அலர்ட் செய்யப்படும் வசதி கொண்டுவரப்பட்டது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்

இதன் காரணமாக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மோசடிகளில் இருந்து தப்பிக்கவும் இது வழி வகுக்கும். ஒருவேளை உங்களது ஏடிஎம்களை வைத்து வேறு யாரேனும் பேலன்ஸ் செக்

செய்தாலோ அல்லது மினி ஸ்டேட்மெண்ட் எடுத்தாலோ உடனோ உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வரும். குறிப்பாக இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நடக்க விருக்கும் மோசடிகளை தடுக்க முடியும் என்று கருதி எஸ்பிஐ வங்கி சார்பில் தெரிவிக்ககப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் உங்கள் ஏடிஎம் கார்டு தவறாக பயன்படுத்தப் போவதாக நினைத்தால்,

உடனடியாக ஏடிஎம்களை பிளாக் செய்ய முடியும், அதாவது முடக்க முடியும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
SBI Introduces Mandatory OTP-based ATM Cash Withdrawals In India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X