இனி வாட்ச் போதும்: எஸ்பிஐ வங்கியின் தரமான வசதி அறிமுகம்.!

|

எஸ்பிஐ என்று அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஆனது தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த வங்கி கொண்டுவரும் புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

பேங்க் ஆப் இந்தியா வங்கி

தற்சமயம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தனியார் துறை வங்கிகளுக்கு இணையாக அதிரடியாக பல சலுகைகளை வழங்கி வருகிறது.
மேலும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றது, அதற்காக பல வசதிகளையும் தொடர்ந்துசெய்து வருகிறது.

டிகாரங்களை

அதன்படி இனிமேல் நீங்கள் ஷாப்பிங் செய்த பிறகு தொகை செலுத்த எந்த டெபிட் கார்டும் அல்லது எந்த மொபைல்போன்களையும் பயன்படுத்த தேவையில்லை. இந்த வேலை இனிமேல் உங்களது மணிக்கட்டு கடிகாரத்துடன் செய்யப்படும். அதாவது மிகவும் பிரபலமான வாட்ச் டைட்டன் (Titan) முதல் முறையாக இந்தியாவில் தொடர்பு இல்லாத (Contactless Payment) கட்டணத்தை ஆதரிக்கும் 5 மணிக்கட்டு கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்திற்காக நிறுவனம் எஸ்பிஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

ATM பரிவர்த்தனை தோல்வியுற்றதா? பணம் வரவில்லையா? எப்படி வங்கியிடம் மீண்டும் பணத்தை கேட்பது?ATM பரிவர்த்தனை தோல்வியுற்றதா? பணம் வரவில்லையா? எப்படி வங்கியிடம் மீண்டும் பணத்தை கேட்பது?

பிறகு நீங்கள் பணம்

குறிப்பாக ஷர்ப்பிங்கிற்கு பிறகு நீங்கள் பணம் செலுத்தும்போது நீங்கள் செய்ய வேண்டியது Pos இயந்திரத்திற்கு சென்று Titan Pay Powered Watch
ஐ தட்டவும். இதை செய்வதன் மூலம் உங்கள் தொடர்பு இல்லாத கட்டணம் முடிக்கப்படும். வழக்கமாக வைஃபை வசதியுடன் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவது போல. மேலும் வுவையn பேமென்ட் வாட்ச் வசதி எஸ்பிஐ அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது.

 டைட்டன் கைக்கடிகாரத்தில்

அதாவது டைட்டன் கைக்கடிகாரத்தில் வழங்கப்பட்ட கட்டண செயல்பாடு ஒரு சிறப்பு பாதுகாப்பான சான்றளிக்கப்பட்ட அருகில்-கள தொடர்பு சிப்(NFC) மூலம்செயல்படுகிறதாக தெரிகிறது, இது கடிகாரத்தின் பட்டையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டைட்டன் பே அம்சம் ONO SBI மூலம் இயக்கப்படுகிறது மற்றும் POS(பாயிண்ட் ஆஃப் சேல்) இயந்திரம் கிடைக்கும் அதே இடங்களில் வேலை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1000 விலைக்குள் கிடைக்கும் அட்டகாசமான சூப்பர் ஸ்மார்ட் கேட்ஜெட்கள்!ரூ.1000 விலைக்குள் கிடைக்கும் அட்டகாசமான சூப்பர் ஸ்மார்ட் கேட்ஜெட்கள்!

நம்பரை உள்ளிட

எஸ்பிஐ வங்கி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே Titan பேமென்ட் வாட்ச் வசதியைப் பெற முடியும். அதன்படி நீங்கள் 2000ரூபாய் வரை செலுத்தினால், கடிகாரத்தைத் தட்டுவதன் மூலம், கட்டணம் செலுத்தப்படும், பின் எதுவும் தேவையில்லை, ஆனால் ரூ.2000-க்கு மேல் செலுத்தும்போது நீங்கள் பின் நம்பரை உள்ளிட வேண்டும். சுருக்கமாக வைஃபை வசதியுடன் டெபிட் கார்டு செலுத்துதல்கள்
போன்றதாகும்.

அதேபோல் பெண்களுக்கான கடிகாரம் ரூ.3,895 மற்றும்

டைட்டன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய தொடர் ஆண்களுக்கு மூன்று வகைகளும், பெண்களுக்கு இரண்டு வகைகளும் என அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஆண்களுக்காக அறிமுகம்செய்யப்பட்ட கைக்கடிகாரத்தின் விலை ரூ.2,995, ரூ.3995 மற்றும் ரூ.5,995-என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பெண்களுக்கான கடிகாரம் ரூ.3,895 மற்றும் ரூ.4,395-என விலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
SBI Introduced New Pay with Watch Facility To Increase Cardless Transactions: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X