SBI, இந்தியன் வங்கி, எந்த வங்கியில் கணக்கிருந்தாலும் உஷார்.. மொத்த பணமும் திருடு போகலாம்.. புது ஸ்கேம் அலெர்ட்
இன்றைய டிஜிட்டல் உலகில், இன்டர்நெட் சேவை இன்றியமையாததாகிவிட்டது. பல அன்றாடப் பணிகளை எளிதாக்கியுள்ளது. இருப்பினும், அதன் பரவலான பயன்பாட்டுடன், இணைய மோசடி மற்றும் ஏமாற்று வேலைகள் இப்போது ஆன்லைன் மூலம் அதிகம் நடைபெற துவங்கியுள்ளது. மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மக்களை ஏமாற்ற புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். இதுபோன்ற சமீபத்திய மோசடிகளில் ஒன்று தான் "ஸ்க்ராட்ச் கார்டு ஸ்கேம் (Scratch card scam)" என்பதாகும். இந்த மோசடி இப்போது கேரளா, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல இடங்களில் பெரும்பாலான நிதி மோசடியை செய்து வருகிறது.
உங்களிடம் எஸ்பிஐ (SBI) அல்லது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank Of India), இந்தியன் வங்கி (Indian Bank), கனரா வங்கி (Canara Bank), HDFC, ICICI, Axis பேங்க், என்று எந்த வங்கி கணக்கு வைத்திருந்தாலும் உஷார் மக்களே. உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை நோட்டில் மொத்தமாக சூறையாடும் ஒரு பயங்கரமான மோசடி தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் பலர் சிக்கி பல லட்சங்களில் பணத்தை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SBI, இந்தியன் வங்கி, எந்த வங்கியில் கனக்கிருந்தாலும் உஷார் மக்களே.. புதிதாக பரவும் மோசடி:
இது என்ன வகையான மோசடி? இத்தகைய மோசடியில் சிக்காமல் தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற விபரங்களை இப்போது பார்க்கலாம். சமீபத்தில், ஸ்கிராட்ச் கார்டுகள் மூலம் தனிநபர்களை குறிவைத்து இணைய மோசடி மூலம் பணம் திருடப்படுகிறது. இந்த மோசடிகளில், பாதிக்கப்பட்டவர்கள் கொரியர் லெட்டர் அல்லது பார்சல் சேவை மூலம் அவர்களின் முகவரிக்கு ஒரு ஸ்கிராட்ச் கார்டு கொண்ட கடிதங்களை பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த ஸ்கிராட்ச் கார்டை மக்கள் சுரண்டி பார்க்கும் பொது, அதில் அவர்கள் பல லட்சம் மதிப்பிலான தொகையை வென்றுள்ளதாக அந்த ஸ்கிராட்ச் கார்டு பிரிண்ட் காண்பிக்கிறது. தங்கள் வென்ற பரிசை பெற, கார்டில் வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணை அழைக்குமாறு அந்த ஸ்கிராட்ச் கார்தில் அச்சிடப்பட்டுள்ளது. அந்த எண்ணிற்கு மக்கள் அழைப்பு விடுத்தது, பரிசு தொகையை கேட்கும் பொழுது, தான் இந்த ஸ்கேம் வேலை செய்கிறது.
இங்குதான் இந்த மோசடி தொடங்குகிறது. பரிசுத் தொகையைப் பெற, வெற்றியாளர்கள் முதலில் செயலாக்கக் கட்டணம் மற்றும் வரியைச் செலுத்த வேண்டும் என்று தொலைப்பேசியில் பேசுபவர்கள் கூறுவதை கேட்டு, வெற்றியாளர்கள் நம்பி சில ஆயிரங்களை கட்டணமாக செலுத்துகிறார்கள். இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர் அறியாமல் மோசடி செய்பவருக்கு அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அணுகலை வழங்குகிறார்கள்.
புது ஸ்கிராட்ச் கார்டு ஸ்கேம் அலெர்ட்.. மொத்த பணமும் திருடு போகலாம்:
அவ்வளவு தான் இதற்கு பிறகு, உங்கள் வங்கி கணக்கு எந்த பேங்க்குடன் இருந்தாலும் சரி, சில நிமிடங்களில் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணம் மொத்தமாக சுரண்டி எடுக்கப்படுகிறது. இந்த மோசடியில் கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஸ்கிராட்ச் கார்டு மூலம் 8 லட்சம் வென்றுள்ளதாக கூறி, அட்டையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றிய நபர் வரியை செலுத்திய சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.23 லட்சம் திருடப்பட்டுள்ளது.
இதுபோல் இன்னும் ஏராளமான மக்கள் பல லட்சங்களை இழந்துள்ள சம்பவம் தற்போது பெருகி வருகிறது. இத்தகைய மோசடியில் சிக்காமல் இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது இங்கே.
- உங்களுக்கு தெரியாத இடத்தில் இருந்து பார்சல் வந்தால், அதை வாங்காமல் இருப்பது சிறந்தது.
- அதில் ஸ்கிராட்ச் கார்டு அல்லது லாட்டரி பரிசு போன்ற எந்த விஷங்கள் இருந்தாலும், அது ஒரு மோசடியாக இருக்கலாம்.
- பெரும்பாலான மோசடிகள் உங்கள் ஆசையை தூண்டி, அதிக பணத்தை பரிசாக காட்டி ஈர்க்கிறது என்பதனால் உஷார்.
- லாட்டரி விதிகளை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். பரிசு வழங்குவதற்கு முன்பு வரி பணம் கேட்கப்பட்டால் அது மோசடியாக இருக்கலாம்.
- குறிப்பாக வங்கி தகவலை யாருக்கும் வழங்க வேண்டாம்.
- தெரியாத நபர்களுடன் எந்தவித பரிவர்தனையையும் மேற்கொள்ள வேண்டாம்.


Click it and Unblock the Notifications