Home
News

பிப்ரவரி 15 முதல் எல்லாமே மாறுது.. SBI வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா.. IMPS கட்டணம் உயர்வு.. இதோ முழு விவரம்..

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்திய பின்னர், ஆன்லைன் ஐஎம்பிஎஸ் (IMPS) கட்டணங்களில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த புதிய நடைமுறை வரும் பிப்ரவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

அதாவது இதுவரை இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் ஆப் மூலம் செய்யப்படும் IMPS பரிமாற்றங்களுக்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாமல் இருந்தது. ஆனால் இனிமேல் பெரிய தொகை அனுப்பும்போது ஒரு சிறிய தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

பிப்ரவரி 15 முதல் எல்லாமே மாறுது.. SBI வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா..

ஆனாலும் சில வாடிக்கையாளர்களுக்கு இந்த மாற்றத்தால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. காரணம் என்னவென்றால் ரூ.25,000 வரை செய்யப்படும் பணப்பரிமாற்றங்களுக்கு எப்போதும் போல எந்தக் கட்டணமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சிறிய அளவிலான தொகையை அனுப்புபவர்கள் எப்போதும் போல தாராளமாகப் பணத்தை அனுப்பலாம். சரி இப்போது ரூ.25000-க்கு மேல் பணம் அனுப்பும் போதும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை இப்போது பார்க்கலாம்.

விரைவில் அமலுக்கு வரும் புதிய கட்டண விவரங்கள்

ரூ.25000 முதல் ரூ.1 லட்சம் வரை: ரூ.2 + ஜிஎஸ்டி செலவாகும்.
ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை: ரூ.6 + ஜிஎஸ்டி செலவாகும்.
ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை: ரூ.10 + ஜிஎஸ்டி செலவாகும்.

குறிப்பாக டிஜிட்டல் சேவைகளைப் பராமரிக்கவும், அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் தான் இந்த சிறிய கட்டண உயர்வு அவசியம் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய மாற்றம் இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் ஆப் மூலம் செய்யப்படும் ஆன்லைன் பரிமாற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் நேரடியாக வங்கி கிளைக்குச் சென்று IMPS செய்தால், பழைய கட்டண முறையே தொடரும் என்பதைக் கவனத்தில் கொள்க. அதேபோல சில நிபுணர்கள் பெரிய தொகையை டிஜிட்டல் முறையில் அனுப்ப வேண்டும் என்றால் IMPS-க்குப் பதிலாக NEFT அல்லது RTGS போன்ற கட்டணமில்லா (அல்லது குறைவான கட்டணம் கொண்ட) சேவைகளைப் பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர்.

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கட்டணம்

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களில் மாற்றங்களைச் செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக எஸ்பிஐ டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் இப்போது மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தும்போது அதிக கட்டணம் வசூலிக்கப்படலாம்.

இந்த மாற்றங்கள் முதன்மையாக எஸ்பிஐ சேமிப்பு கணக்கு, சம்பள கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்களையே பாதிக்கும். ஆனால் கிசான் கிரெடிட் கார்டு (KCC) மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புத்தொகை (BSBD) கணக்குகள் இந்த திருத்தப்பட்ட கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. அதாவது இவை எந்த கூடுதல் கட்டணங்களையும் செலுத்த வேண்டியது இல்லை.

குறிப்பாக எஸ்பிஐ சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகளைப் பெறுவார்கள். ஆனால் இந்த வரம்பைத் தாண்டி பணம் எடுப்பதற்கு இப்போது ரூ.23 மற்றும் ஜிஎஸ்டி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பேலன்ஸ் சரிபார்ப்பு, மினி ஸ்டேட்மென்ட்கள் போன்ற நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.11 மற்றும் ஜிஎஸ்டி செலவாகும்.

பிப்ரவரி 15 முதல் எல்லாமே மாறுது.. SBI வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா..

அதேபோல் எஸ்பிஐ கொண்டுவந்துள்ள இந்த மாற்றம் சம்பளக் கணக்கு வைத்திருக்கும் பயனர்களுக்கு மிகவும் முக்கியமானது. அதாவது முன்பு அவர்கள் மற்ற ஏடிஎம்-களில் வரம்பற்ற இலவச பரிவர்த்தனைகளை அனுபவித்தனர். ஆனால் இப்போது இது மிகவும் குறைவாகவே உள்ளது. அதன்படி சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் இப்போது மாதத்திற்கு 10 இலவச பரிவத்தனைகளை மட்டுமே பெறுவார்கள். அதன்பிறகு பணம் எடுப்பதற்கு ரூ.23 + GST ​​ ​​வசூலிக்கப்படும், மேலும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.11 + GST ​​வசூலிக்கப்படும்.

மேலும் எஸ்பிஐ நடப்புக் கணக்கு (Current Account) வைத்திருக்கும் பயனர்களுக்கு முன்பு எந்த இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளும் கிடைக்கவில்லை, இப்போதும் அவர்களுக்கு கிடைக்காது. எனவே பிற வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க ரூ.23 + ஜிஎஸ்டியும், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.11 + ஜிஎஸ்டியும் செலவாகும். ஆகவே இந்த புதிய விதிகளைப் பின்பற்றி, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பிற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தும் போது இலவச பரிவர்த்தனை வரம்புகளுக்குச் சிறப்புக் கவனம் செலுத்துவது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
SBI increases IMPS transfer charges: What is the reason? When will it come into effect?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X