Home
News

SBI வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.. இனி ATM இல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது எஸ்பி வங்கி ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களில் மாற்றங்களைச் செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக எஸ்பிஐ டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் இப்போது மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தும்போது அதிக கட்டணம் வசூலிக்கப்படலாம்.

அதுவும் வாடிக்கையாளர்கள் தங்கள் மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பை முடித்துவிட்டால் கூடுதல் செலவு வரும். இந்த மாற்றங்கள் முதன்மையாக எஸ்பிஐ சேமிப்பு கணக்கு, சம்பள கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்களையே பாதிக்கும். ஆனால் கிசான் கிரெடிட் கார்டு (KCC) மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புத்தொகை (BSBD) கணக்குகள் இந்த திருத்தப்பட்ட கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. அதாவது இவை எந்த கூடுதல் கட்டணங்களையும் செலுத்த வேண்டியது இல்லை.

SBI பயனர்களே இத கவனிங்க.. இனி ATM இல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம்..

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பயனர்களுக்கு புதிய விதிகள்
எஸ்பிஐ சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகளைப் பெறுவார்கள். ஆனால் இந்த வரம்பைத் தாண்டி பணம் எடுப்பதற்கு இப்போது ரூ.23 மற்றும் ஜிஎஸ்டி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பேலன்ஸ் சரிபார்ப்பு, மினி ஸ்டேட்மென்ட்கள் போன்ற நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.11 மற்றும் ஜிஎஸ்டி செலவாகும்.

சம்பளக் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள்
எஸ்பிஐ கொண்டுவந்துள்ள இந்த மாற்றம் சம்பளக் கணக்கு வைத்திருக்கும் பயனர்களுக்கு மிகவும் முக்கியமானது. அதாவது முன்பு அவர்கள் மற்ற ஏடிஎம்-களில் வரம்பற்ற இலவச பரிவர்த்தனைகளை அனுபவித்தனர். ஆனால் இப்போது இது மிகவும் குறைவாகவே உள்ளது. அதன்படி சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் இப்போது மாதத்திற்கு 10 இலவச பரிவத்தனைகளை மட்டுமே பெறுவார்கள். அதன்பிறகு பணம் எடுப்பதற்கு ரூ.23 + GST ​​ ​​வசூலிக்கப்படும், மேலும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.11 + GST ​​வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எஸ்பிஐ நடப்புக் கணக்கு (Current Account) வைத்திருக்கும் பயனர்களுக்கு முன்பு எந்த இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளும் கிடைக்கவில்லை, இப்போதும் அவர்களுக்கு கிடைக்காது. எனவே பிற வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க ரூ.23 + ஜிஎஸ்டியும், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.11 + ஜிஎஸ்டியும் செலவாகும்.

குறிப்பாக டிசம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வந்த இந்த புதிய விதிகளைப் பின்பற்றி, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பிற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தும் போது இலவச பரிவர்த்தனை வரம்புகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. அதுவும் வரம்பற்ற இலவச பரிவர்த்தனைகளின் சலுகை இப்போது முடிவுக்கு வந்துவிட்டதால், வரம்பை மீறும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் அதிக விலை கொண்டதாக மாறும் என்பதை நினைவில் வைத்து சேமிப்பு கணக்கு மற்றும் சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும்.

SBI பயனர்களே இத கவனிங்க.. இனி ATM இல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம்..

எஸ்பிஐ யோனோ ஆப்
அதேபோல் சமீபத்தில் எஸ்பிஐ யோனோ ஆப் (SBI YONO App) ஆனது ஆதார் கேஒய்சி அப்டேட் (Aadhaar KYC Update)செய்யப்படாமல் இருந்தால் முடக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. குறிப்பான இந்த ஆதார் அப்டேட்டை செய்ய ஏபிகே லிங்குகளை (APK Links) பயன்படுத்துமாறும் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட ஆப்கள் வழியாக செய்திகள் வந்தன. ஆனால் இதை உடனே நம்பி பாரத ஸ்டேட் வங்கியின் கஸ்டமர்கள் அதை கிளிக் செய்துவிட கூடாது. ஏனென்றால், இது முற்றிலும் பொய்யான செய்தியாகும். அதேபோல அந்த லிங்குகளும் போலி என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஐபி பேக்ட் செக் (PIB Fact Check) என்று தெரிவித்துள்ளது.

மேலும் எஸ்பிஐ வங்கி யோனோ ஆப் அப்டேட் செய்யவோ, கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்யவோ லிங்குகளை அனுப்பாது. ஆகவே, இதுபோன்ற லிங்குகளை கிளிக் செய்வது, அந்த லிங்குகளில் இருக்கும் ஆப்களை டவுன்லோட் செய்வது உள்ளிட்டவற்றை கஸ்டமர்கள் தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
SBI hikes ATM transaction charges: Check changes for savings and salary account holders
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X