அடுத்த சிக்கல்: எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்?- இனி இந்த பிரச்சனை!

|

எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அடுத்து வரும் நாட்களில் ஓடிபி பெறுவதில் சிரமங்களை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி

எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி

எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அடுத்து வரும் நாட்களில் ஓடிபி பெறுவதில் சிரமங்களை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மறுபுறம் ஏப்ரல் 4 வரை ஐந்து நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று. இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் எஸ்எம்எஸ் விதிகளை பின்பற்றாத வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட எஸ்எம்எஸ் விதிகளை பின்பற்றாத வங்கிகளின் பெயர்களில் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோட்டக் உள்ளிட்ட வங்கிகளின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து டிராய் கடுமையான அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஏப்ரல் 1,2021-க்குள் விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும் இல்லாதபட்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பதிவு செய்த மொபைல் எண் அல்லது வங்கியின் மின்னஞ்சல் ஐடியில் ஓடிபி பெறுவதில் சிக்கலை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டது.

ஆன்லைன் மோசடி உள்ளிட்ட புகார்கள்

ஆன்லைன் மோசடி உள்ளிட்ட புகார்கள்

ஆன்லைன் மோசடி உள்ளிட்ட புகார்களை தடுக்க ஆணையம் ஒரு ஒழுங்குமுறை நடவடிக்கையை எடுத்தது. இதை பல வங்கிகள் ஏற்க மறுத்தது, மேலும் சில வங்கிகள் சில செயல்படுத்த காலஅவகாசம் கோரியது, அதேபோல் சில வங்கிகள் கண்டு கொள்ளாமல் இருந்ததையடுத்து. ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்றாத 40 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோட்டக் உள்ளிட்ட வங்கிகளின் பெயர்களும் அடங்கும்.

வங்கிகள் ஆணையத்தின் வழிமுறைகள்

வங்கிகள் ஆணையத்தின் வழிமுறைகள்

வங்கிகள் ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்றாத பட்சத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதிமுதல் தங்களின் வாடிக்கையாளர்கள் ஓடிபி பெறுவதில் சிக்கலை சந்திக்க நேரிடும் என தெரிவித்திருந்தது. எனவே ஆணையம் குறிப்பிட்டுள்ள வங்கியின் வாடிக்கையாளர்கள் சிக்கலை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.

புதிய தொலைத் தொடர்பு வர்த்தக முன்னிரிமை

புதிய தொலைத் தொடர்பு வர்த்தக முன்னிரிமை

இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தில்லி உயர்நீதிமன்றம் டிராயிடம் புதிய தொலைத் தொடர்பு வர்த்தக வாடிக்கையாளர்கள் முன்னுரிமை ஒழுங்குமுறையை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அனைத்து மெசேஜ்களும் சரிபார்க்க வேண்டும் என்றும் அனைத்தும் டிராய் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் டிஎல்டி தளத்திற்கு பதிவு செய்யப்பட்டுன என்றும் டிராய் கூறியது. இவை சரிபார்ப்பு குறியீடு மற்றும் அனைத்து வகையான ஓடிபி எண்ணுக்கு உள்ளடக்கத்தியது எனவும் தெரிவித்தது.

சரிபார்ப்பு குறியீடு மற்றும் ஓடிபி தகவல்

சரிபார்ப்பு குறியீடு மற்றும் ஓடிபி தகவல்

வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அனைத்து செய்திகளையும் சரிபார்க்க வேண்டும் என்றும், குறுஞ்செய்திகள் அனுப்பும் நிறுவனங்கள் என்ன வகையான குறுஞ்செய்திகளை அனுப்பும் என்பது குறித்த தகவலை பதிவு செய்ய வேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும் எனவும் இது அறிவிப்புகள், சரிபார்ப்புக் குறியீடு மற்றும் அனைத்து வகையான OTP-ஐ உள்ளடக்கியது எனவும் தெரிவிக்கப்பட்டது.

டிராய்-ன் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் டிஎல்டி தளம் என்றால் என்ன?

டிராய்-ன் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் டிஎல்டி தளம் என்றால் என்ன?

டிஸ்டிரிப்ட் லெட்ஜர் டெக்னாலஜி (டி.எல்.டி) என்பது ஒரு பிளாக்செயின் அமைப்பாகும், அங்கு டெலிமார்க்கெட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்புவதற்கு முன்பு தங்களை பதிவு செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது. மார்க்கெட்டிங் நிறுவனங்களின் ஸ்பேம் மெசேஜ்களையும் அழைப்புகளையும் கட்டுப்படுத்த இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பங்கேற்பாளர்கள் அனைவராலும் செய்யப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளையும் டி.எல்.டி இயங்குதளம் பதிவு செய்கிறது. வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு செய்தியையும் அனுப்புவதற்கு முன்பு அனைத்து டெலிமார்க்கெட்டர்களும் ஒரே தளத்தில் பதிவு செய்வது முக்கியம் என கட்டுப்பாட்டாளர் கூறினார். டிராய்., வணிக ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பும் நிறுவனங்கள் குறித்த தகவலை உடனடியாக பதிவு செய்யும்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பு அனுப்பியது. அப்படி பதிவு செய்யாத நிறுவனங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை தடை செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறுஞ்செய்தி அனுப்பும் எண் மற்றும் எவ்வகையான குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் போன்ற தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Best Mobiles in India

English summary
SBI, HDFC, ICICI Customers may face Difficulties in Receiving OTP

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X