Home
News

UPI பயனர்கள் கொஞ்சம் உஷாரா இருங்க.. SBI வெளியிட்ட புதிய எச்சரிக்கை.. இதோ முழு விவரம்..

இந்தியாவில் முக்கிய நகரங்கள் முதல் துவங்கி உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ (UPI) சேவையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய பெரிய ஹோட்டல்கள் வரை இந்த யுபிஐ சேவை பயனுள்ள வகையில். ஆனால் இந்த யுபிஐ சேவையைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதாவது தினமும் எதாவது ஒரு டிஜிட்டல் மோசடி சம்பவம் நடந்துகொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக ஏதேனும் ஒரு வகையான மோசடி நடைபெற்று பொது மக்கள் விழிப்புணர்வு பெற்று வரும் நிலையில் மற்றொரு புதிய மோசடி வெளிச்சத்திற்கு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதுவகை மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

UPI பயனர்கள் உஷாரா இருங்க.. SBI வெளியிட்ட புதிய எச்சரிக்கை..

அதாவது தற்போது நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி யுபிஐ மூலம் தெரியாத நபர்கள் உங்கள் வங்கி கணக்கு பணம் அனுப்பி அதை திரும்ப பெறுவதற்கான கோரிக்கைகள் வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக சரிபார்ப்பு இல்லாமல் உடனே பணத்தை அனுப்ப UPI கோரிக்கைகளை ஏற்று ஒப்புதல் அளிக்காதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக பல போலி யுபிஐ செயலிகள் ஆப் ஸ்டோரில் கிடைக்கின்றன. இவை உண்மையான யுபிஐ போலவே இருக்கின்றன. சைபர் குற்றவாளிகள் இந்த போலி செயலிகள் மூலம் உங்கள் எண்ணில் பரிவர்த்தனை செய்து அதன் ஸ்கிரீன்ஷாட்டை எடுப்பார்கள். அதன்பின்பு உங்கள் வங்கியின் பெயரில் உங்கள் எண்ணுக்கு யுபிஐ மூலம் பணம் வந்துள்ளதாக ஒரு போலி செய்தியை அனுப்புவார்கள். அடுத்து இந்த குற்றவாளிகள் உங்களை அழைத்து ஸ்கிரீன் ஸ்கிரீன்ஷாட் மற்றும் செய்தியைக் காட்டி யுபிஐ மூலம் உங்கள் எண்ணுக்குத் தவறுதலாகப் பணம் அனுப்பியதாகக் கூறுவார்கள்.

அதன்பின்னர் சைபர் குற்றவாளிகள் தங்கள் UPI எண்ணை உங்களுக்குக் கொடுத்து, பணத்தை விரைவில் திரும்பக் கேட்பார்கள். எனவே இது உங்களுக்கும் நடந்தால், கவனமாக இருக்க வேண்டும். அதாவது இதுபோன்று நிகழும்போது நீங்கள் எந்த அவசர நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடாது. அதுவும் UPI உடன் இணைக்கப்பட்ட உங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்த்து, நீங்கள் உண்மையிலேயே பணத்தைப் பெற்றுள்ளீர்களா இல்லையா என்பதை முதலில் பாருங்கள். ஒருவேளை உங்களுக்குப் பணம் கிடைக்கவில்லை என்றால், நேரடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து புகார் கொடுக்கவும். இதன் மூலம் மோசடியில் இருந்து தப்பிக்க முடியும்.

UPI பயனர்கள் உஷாரா இருங்க.. SBI வெளியிட்ட புதிய எச்சரிக்கை..

ஒருவேளை தெரியாத ஒரு நபரிடம் இருந்து உங்கள் வங்கி கணக்குக்கு பணம் வந்தாலும், 15-20 நிமிடங்களுக்கு பேங்க் பேலன்ஸை செக் செய்யவேண்டாம். இல்லையெனில், அப்படி தொகை வந்த உடனே பின் நம்பர் போடுகிறீர்கள் என்றால் வேண்டுமென்றே தவறான பின்னை பதிவிடுங்கள். இந்த இரண்டில் எதாவது ஒன்றை செய்தால் கூட, பண ரெக்வஸ்ட் ரத்தாகி விடும். இதனால் மோசடியில் எளிதாகத் தப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் இந்த டிஜிட்டல் (digital) யுகத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது அனைவரின் கடமையாகும். கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்போம் அதேபோல் இந்த டிஜிட்டல் யுகத்திலும் இருக்க வேண்டும்.சிறுக சிறுக சேமித்த பணம், உங்கள் முக்கிய புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தும் டிஜிட்டல் மையமாக்கப்பட்டிருக்கின்றன. எனவே டிஜிட்டல் யுகத்தில் நாம் கவனமாக இல்லையெனில் மிகப் பெரிய பாதிப்பு வந்துவிடும்.

source

More from GizBot

Best Mobiles in India

English summary
SBI has issued a new warning to those doing money transactions through UPI: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X