SBI பயனர்களுக்கு எச்சரிக்கை: 'இதை' செய்தால் உங்கள் கணக்கு மொத்தமாக காலியாகிவிடும்.. உடனே விழித்திடுங்கள்..

|

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு உயர் எச்சரிக்கை: நாட்டில் விரைவான டிஜிட்டல் மயமாக்கலுடன், ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் கிரைம் வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த வரிசையில் சில வருடங்களில் மொபைலின் க்யூஆர் குறியீட்டின் மூலம் ஏற்படும் மோசடி வழக்குகள் வேகமாக அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் QR குறியீடு மோசடி வழக்கைக் கருத்தில் கொண்டு, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) அதன் 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு புது எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது.

SBI பயனர்களுக்கு உயர் எச்சரிக்கை

SBI பயனர்களுக்கு உயர் எச்சரிக்கை

சமீபத்தில் வெளியான SBI வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, நாட்டில் உள்ள அனைத்து SBI வங்கி வாடிக்கையாளர்களும் QR ஸ்கேன் மோசடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கும் படி வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, உங்களுக்குத் தெரியாத மூன்றாம் நபர் அல்லது யாரிடமிருந்தும் QR குறியீட்டைப் பெற்றால், தவறுதலாகக் கூட அவற்றை ஸ்கேன் செய்ய வேண்டாம் என்று வங்கி கூறியுள்ளது. இப்படிச் செய்வதன் மூலம், நீங்கள் ஒரு கட்டத்தில் ஏழையாகி, உங்கள் கணக்கில் உள்ள பணம் மொத்தமாகக் கூட காணாமல் போக வாய்ப்புள்ளது என்று வங்கி எச்சரித்துள்ளது.

பணத்தைப் பெற QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டியதில்லையா?

பணத்தைப் பெற QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டியதில்லையா?

எஸ்பிஐ தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை இப்போது ட்வீட் மூலம் எச்சரித்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. வங்கி தனது ட்வீட்டில், 'பணத்தைப் பெற QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு முறையும் நீங்கள் UPI பணம் செலுத்தும் போது பாதுகாப்பு குறிப்புகளை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, ஒரு நபரிடம் இருந்து நீங்கள் பணத்தை பெறுவதற்கு எப்போதும் QR ஸ்கேன் முறையைப் பயன்படுத்த வேண்டியதில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

QR குறியீடு மோசடி எப்படி நிகழ்கிறது?

வங்கி அதிகாரி போல் பேசி, ஆசை வார்த்தைகள் கூறி, உங்களுக்கான பணத்தைப் பெற QR குறியீட்டை ஸ்கேன் செய்யத் தூண்டினாலும் இந்த தவற்றை மட்டும் செய்யாதீர்கள் என்று வங்கி எச்சரித்துள்ளது. QR குறியீடு எப்போதும் பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது, பணம் பெறுவதற்கு அல்ல என்பதை SBI வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று SBI வங்கி தெரிவித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பணம் பெறுதல் என்ற பெயரில் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய மெசேஜ் அல்லது மெயில் வந்தால், தவறுதலாகக் கூட ஸ்கேன் செய்ய வேண்டாம்.

இந்த தவற்றைச் செய்தால் உங்கள் கணக்கு மொத்தமாக காலியாகிவிடுமா?

இந்த தவற்றைச் செய்தால் உங்கள் கணக்கு மொத்தமாக காலியாகிவிடுமா?

இது உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள ஒட்டுமொத்த பணத்தையும் காலி செய்யலாம். அப்படித் தவறுதலாக்க நீங்கள் ஒரு QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது, உங்களுக்குப் பணம் கிடைக்காது. அதற்குப் பதிலாக உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக உங்களுக்குக் குறுஞ்செய்தி மட்டும் வரும் என்றும் வங்கி கூறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், மக்கள் இப்படியான QR ஸ்கேன் முறையில் சிக்கி பணத்தை அதிகமாக இழந்துள்ளனர் என்று வங்கி தெரிவித்துள்ளது.

18 ஆண்டு தவம்.. பள்ளியில் தோன்றிய ஐடியா.. கிராமத்திற்காக சொந்த காசில் நீர்மின் நிலையம் அமைத்த கிராமவாசி..18 ஆண்டு தவம்.. பள்ளியில் தோன்றிய ஐடியா.. கிராமத்திற்காக சொந்த காசில் நீர்மின் நிலையம் அமைத்த கிராமவாசி..

SBI வழங்கும் பாதுகாப்பு குறிப்புகளையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

SBI வழங்கும் பாதுகாப்பு குறிப்புகளையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

  • SBI வங்கி வாடிக்கையாளர்கள் இந்த சிக்கலில் சிக்காமல் தப்பிக்க சில பாதுகாப்பு குறிப்புகளையும் வங்கி வெளியிட்டுள்ளது. SBI வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருக்க, இந்த பாதுகாப்பு குறிப்புகளைப் பின்பற்றவும்.
  • பணம் செலுத்தும் முன் UPI ஐடியைச் எப்போதும் சரிபார்க்கவும்.
  • UPI பணம் செலுத்தும் போது சில பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
  • UPI பின்னை தெரியாத நபர்களுடன் பகிர வேண்டாம்

    UPI பின்னை தெரியாத நபர்களுடன் பகிர வேண்டாம்

    • UPI பின் பணப் பரிமாற்றத்திற்கு மட்டுமே தேவை, பணம் பெறுவதற்கு அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
    • பணம் அனுப்பும் முன் மொபைல் எண், பெயர் மற்றும் UPI ஐடி ஆகியவற்றை எப்போதும் சரிபார்க்கவும்.
    • UPI பின்னை யாருடனும் பகிர வேண்டாம்.
    • UPI பின்னைத் தவறுதலாகக் கூட குழப்ப வேண்டாம்.
    • நிதி பரிமாற்றத்திற்கு ஸ்கேனரை சரியாகப் பயன்படுத்தவும்.
    • உங்கள் PAN உடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி சரி பார்ப்பது? இணைக்கவில்லை என்றால் என்னவாகும்?உங்கள் PAN உடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி சரி பார்ப்பது? இணைக்கவில்லை என்றால் என்னவாகும்?

      தொழில்நுட்ப சிக்கல் அல்லது முரண்பாடுகளுக்கு இந்த இணையதளத்தைப் பயன்படுத்தலாமா?

      தொழில்நுட்ப சிக்கல் அல்லது முரண்பாடுகளுக்கு இந்த இணையதளத்தைப் பயன்படுத்தலாமா?

      • எந்த சூழ்நிலையிலும், உத்தியோக பூர்வ ஆதாரங்களைத் தவிர வேறு வழிகளில் தீர்வுகளை நாட வேண்டாம்.
      • ஏதேனும் பணம் செலுத்துதல் அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களுக்குப் பயன்பாட்டின் உதவிப் பிரிவைப் பயன்படுத்தவும்.
      • ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், வங்கியின் குறை தீர்க்கும் போர்டல் https://crcf.sbi.co.in/ccf/ மூலம் தீர்வு காணவும்.
      • கூடுதல் பாதுகாப்பான வங்கி சேவைக்கு Yono ஆப்ஸ் பயன்படுத்துங்கள்

        கூடுதல் பாதுகாப்பான வங்கி சேவைக்கு Yono ஆப்ஸ் பயன்படுத்துங்கள்

        • இது SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள கணக்கு என்பதால், வாடிக்கையாளர்கள் நேரடியாக இந்த தளத்தில் இருந்து உங்கள் புகாரைப் பதிவிடலாம்.
        • கூகிள் மூலம் அவசர உதவி எண் அல்லது புகார் இணையதள விபரங்களைத் தேட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
        • SBI வங்கியின் அதிகாரப்பூர்வ Yono Apps சேவையைப் பயன்படுத்திப் பாதுகாப்பாக இருக்கும் படி SBI வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
SBI Has Given High Alert To The Customers To Not To Scan QR Code For Receiving Money : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X