ATM பின் நம்பர் மறந்துவிட்டதா? டென்ஷன் ஆகாதீங்க, ஈசியா புது PIN நம்பர் உருவாக்கலாம்..எப்படி தெரியுமா?
மனிதர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரு இயல்பான பெரிய நோய் தான் ஞாபகமறதி. நம் நினைவில் இருக்க வேண்டிய சில மிக முக்கியமான விஷயங்களைச் சரியான நேரத்தில் நமது மூலம் மறந்துவிடும். உதாரணத்திற்கு நமது ஈமெயில் பாஸ்வோர்டு அல்லது ATM அட்டையின் பின் ஐடியை கூறலாம். பணம் எடுப்பதற்காக ATM அறைக்குள் சென்று உங்கள் பாதுகாப்பு பின் ஐடியை மறந்தவர்களில் ஒருவர் என்றால் இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கானது தான். அப்படியெல்லாம் நாம் மறந்ததே இல்லை என்று சொன்னாலும் இது உங்களுக்கு வரும் காலத்தில் தேவைப்படக்கூடிய ஒரு முக்கிய பதிவு தான். ஸ்கிப் செய்யாமல் முழுமையாகப் படியுங்கள்.

ATM பின் நம்பர் மறந்துவிட்டதா?
பணம் எடுப்பதற்காக ATM அறைக்குள் சென்று உங்கள் பாதுகாப்பு பின் ஐடியை மறந்தவர்களில் ஒருவர் என்றால் இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கானது தான். அப்படியெல்லாம் நாம் மறந்ததே இல்லை என்று சொன்னாலும் இது உங்களுக்கு வரும் காலத்தில் தேவைப்படக்கூடிய ஒரு முக்கிய பதிவு தான். ஸ்கிப் செய்யாமல் முழுமையாகப் படியுங்கள்.

புதிய கிரீன் பின் வசதி
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய கிரீன் பின் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கிரீன் பின் வசதி, உங்களுடைய ATM அட்டையின் PIN Number-ஐ நீங்கள் மறக்கும் பொழுது அதை மீட்டெடுக்க உதவுகிறது. இந்த வசதி பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டால், உங்களின் ATM பின் நம்பர் அல்லது பாஸ்வோர்டை மாற்றம் செய்ய நீங்கள் நேரடியாக வங்கிக்குச் செல்ல வேண்டியதே இல்லை.

பழைய ரகசிய எண் அல்லது புதிதாக ஒரு ரகசிய எண் உருவாக்க
இந்த புதிய கிரீன் பின் வசதி மூலம், நீங்கள் உங்களுடைய ஏடிஎம் கார்டின் பழைய ரகசிய எண் அல்லது அந்நேரத்தில் புதிதாக ஒரு ரகசிய எண்ணை உருவாக்கி உங்கள் ATM கார்டை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த வசதியை SBI வங்கி அனைவருக்கும் எளிமையானதாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் உருவாக்கியுள்ளது. இந்த புதிய வசதியை நீங்கள் எஸ்எம்எஸ் வழியாகவும், இணையச் சேவை வழியாகவும், ஏடிஎம் அல்லது வாடிக்கையாளர் சேவை வழியாகவும் இதைச் செய்து முடிக்கலாம். சரி, இதை எப்படிச் செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

SMS மூலம் புதிய PIN நம்பர் உருவாக்குவது எப்படி?
இதைச் சாத்தியமாக்க நீங்கள் உங்கள் SBI வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இதை செய்ய நீங்கள், PIN< உங்கள் ஏடிஎம் அட்டையின் கடைசி 4 இலக்க எண்கள்>< உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி 4 இலக்க எண்கள் > டைப் செய்து 567676 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும்.

OTP எண் உடன் அருகில் உள்ள ATM செல்ல வேண்டுமா?
இப்பொழுது உங்களுக்கு ரகசிய எண்கள் கொண்ட ஒரு ஒடிபி மெசேஜ் வந்து சேரும். இந்த OTP எண்களை நீங்கள் இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்திட வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். அடுத்தபடியாக, உங்களுக்கு அருகிலுள்ள எஸ்பிஐ ஏடிஎமிற்கு சென்று கார்டை பயன்படுத்தி இந்த OTP எண்ணை பதிவிட்டு உங்களின் PIN நம்பரை மாற்றிக்கொள்ளலாம். வங்கியுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் இதற்கு கட்டாயம் தேவைப்படும்.

SBI ஏடிஎம் மூலம் புதிய PIN நம்பர் உருவாக்குவது எப்படி?
உங்கள் அருகிலுள்ள SBI ATM சென்று, உங்களின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி பின் ஜெனெரேஷன் (PIN Generation) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள். உங்களின் வங்கியுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் உங்களின் SBI வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிடவும். இப்போது, உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP எஸ்எம்எஸ் வந்துசேரும், அதில் உள்ள எண்களை ATM இயந்திரத்தில் உள்ளிட்டு, உங்களின் புதிய PIN எண்ணை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

இன்டர்நெட் பேங்கிங் மூலம் புதிய PIN நம்பர் உருவாக்குவது எப்படி?
புதிய PIN நம்பரை இணைய வழியில் உருவாக்க, நீங்கள் முதலில் www.onlinesbi.com என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களின் பயனர் எண்ணை (User ID) உள்ளிட்டு அதற்கான பாஸ்வோர்டை உள்ளிடவும். இ-சர்வீசஸ் விருப்பத்தின் கீழ் உள்ள ஏடிஎம் கார்டு சர்வீஸ் விருப்பத்தைத் தேர்வு செய்யவும். இதில் ஏடிஎம் பின் ஜென்ரேஷன் விருப்பத்தைத் தேர்வு செய்து, OTP அல்லது Profile Password என்ற இரண்டு விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.

இதை செய்ய மறக்காதீர்கள்
இப்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை உள்ளிட்டு சேமிப்பு கணக்கைத் தேர்ந்தெடுத்துத் தொடரவும். ஏடிஎம் கார்ட் என்பதை கிளிக் செய்து உங்கள் ரகசிய எண்ணின் முதல் இரண்டு இலக்கு எண்ணை உள்ளிடவும். கடைசி இரண்டு இலக்கங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு SMS மூலம் அனுப்பப்படும். இப்போது அந்த நான்கு இலக்கு ரகசிய எண்ணை உள்ளிட்டு Submit கிளிக் செய்யவும். இப்போது உங்களின் புதிய PIN நம்பர் உருவாக்கப்பட்டது.

வாடிக்கையாளர் சேவை மூலம் எப்படி புதிய PIN நம்பர் உருவாக்குவது?
உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1800 112 211 அல்லது 1800 425 3800 என்ற இலவச வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்குக் வாய்ஸ் கால் செய்யவும். பின்னர், உங்கள் மொழியை தேர்ந்தெடுக்கவும். அடுத்து உங்களின் ஏடிஎம் கார்டு சேவைகளுக்கு எண் 2-ஐ அழுத்தவும். ரகசிய PIN எண்ணை உருவாக்கத்திற்கு எண் 1-ஐ அழுத்தவும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்துதான் அழைக்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய மீண்டும் எண் 1-ஐ அழுத்தவும்.

உங்களுக்குத் எது தோதாக இருக்கிறது?
வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் பேச எண் 2-ஐ அழுத்தவும். பின்பு உங்களுக்குத் தற்காலிக ரகசிய எண் SMS மூலம் அனுப்பப்படும், அதை வைத்து அருகில் உள்ள ATM சென்று உங்களின் PIN நம்பரை மாற்றிக்கொள்ளலாம். இப்படி மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு முறையைப் பின்பற்றி உங்களின் ATM கார்டு பின் நம்பரை நீங்கள் மாற்றி அமைக்கலாம். எந்த செயல்முறை உங்களுக்குத் தோதாக இருக்கிறது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications