அக்.11 நள்ளிரவுக்கு பிறகு உஷார்.. UPI வேலை செய்யாது.. பிரபல வங்கி அறிவிப்பு!
அக்டோபர் 11 ஆம் தேதி நள்ளிரவுக்கு பிறகு திட்டமிடப்பட்ட பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக, அதன் சில வங்கி சேவைகள் தற்காலிகமாக கிடைக்காது என்று எஸ்பிஐ (SBI) என்கிற ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) தெரிவித்து உள்ளது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக எஸ்பிஐ யுபிஐ (SBI UPI) சேவைகள் ஆனது ஒரு மணி நேரத்திற்கு கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நள்ளிரவில் வெளியே சென்று எஸ்பிஐ யுபிஐ சேவைகளை பயன்படுத்த முயற்சிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது சிரமமாக இருக்கலாம். இருப்பினும், வங்கியின் இந்த முன் எச்சரிக்கையுடன், எஸ்பிஐ யுபிஐ பயனர்கள் இப்போது முன்கூட்டியே தயாராக இருக்க முடியும், இதனால் எந்த சிரமமும் ஏற்படாது.

எஸ்பிஐ யுபிஐ சேவை உடன் சேர்த்து வேறு என்னென்ன சேவைகள் தற்காலிகமாக கிடைக்காது? எஸ்பிஐ யுபிஐ உடன் சேர்த்து, ஐஎம்பிஎஸ் (IMPS), யோனா (YONO), இண்டர்நெட் பேங்கிங் (Internet Banking), NEFT மற்றும் RTGS உள்ளிட்ட SBI சேவைகள் இன்று நள்ளிரவுக்குப் பிறகு கிடைக்காது.
சரியாக எவ்வளவு காலத்திற்கு (எவ்வளவு மணி நேரத்திற்கு) மேற்கண்ட எஸ்பிஐ வங்கியின் சேவைகள் முடக்கப்படும்? அக்டோபர் 11 ஆம் தேதி அதிகாலை 1:10 மணி முதல் அதிகாலை 2:10 மணி வரை ஆன்லைன் பயனர்களுக்கான எஸ்பிஐ வங்கி சேவைகள் செயலிழந்துவிடும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது
இதுகுறித்த எக்ஸ் தள பதிவில் - திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக, எங்கள் சேவைகள் ஆன யுபிஐ, ஐஎம்பிஎஸ், யோனா, இண்டர்நெட் பேங்கிங், என்இஎப்டி (NEFT) & ஆர்டிஜிஎஸ் (RTGS) ஆகியவை 11.10.2025 அன்று 01:10 மணி முதல் 02:10 மணி வரை (60 நிமிடங்கள்) தற்காலிகமாக கிடைக்காது. இந்த சேவைகள் 11.10.2025 (IST) அன்று 02:10 மணி வரை மீண்டும் தொடங்கும் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.
கூடவே, இந்த 1 மணி நேர செயல் இழப்பின் போது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எங்கள் ஏடிஎம் மற்றும் யுபிஐ லைட் சேவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். சிரமத்திற்கு வருந்துகிறோம், உங்கள் பொறுமைக்கு நன்றி என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தெரிவித்து உள்ளது.
இந்த 1 மணிநேரதத்தில் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? எஸ்பிஐ வங்கியின் ஆன்லைன் சேவைகள் செயலிழந்த இந்த 1 மணி நேர காலத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்யத் திட்டமிடும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் (ATM) மற்றும் யுபிஐ லைட் (UPI Lite) சேவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதாவது யுபிஐ செயலிழந்திருக்கும் போதும் கூட யுபிஐ லைட் செயல்படும். அவசர காலமாக இருந்தால், வாடிக்கையாளர்கள் தங்கள் கையில் பணத்தை ரொக்கமாக எடுத்து செல்லலாம் அல்லது உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கும் பிற வங்கி கணக்குகளைப் பயன்படுத்தி ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்யலாம்.
யுபிஐ தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை, ரேஸர்பே (Razorpay) நிறுவனமானது விரைவில் பயனர்கள் சாட்ஜிபிடி வழியாக மளிகைப் பொருட்கள் மற்றும் பிற தயாரிப்புகளை வாங்க அனுமதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்கீழ் ரேஸர்பே-வின் பேமண்ட் ஸ்டாக்கை (Payment stack) பயன்படுத்தி ஒரே கிளிக்கில் பிக்பாஸ்கட் (BigBasket) போன்ற தளங்களில் பயனர்கள் ஆர்டர் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போன்பே பிஜி (PhonePe PG) என்று சுருக்கமாக அழைக்கப்படும் போன்பே பேமண்ட் கேட்வே (PhonePe Payment Gateway) ஆனது ரூபே (RuPay) மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) உடன் இணைந்து, தொடர்ச்சியான சந்தா கட்டணங்களை எளிதாக்கும் நோக்கத்தின் கீழ், ரூபே கிரெடிட் கார்டுகளால் ஆதரிக்கப்படும் யுபிஐ ஆட்டோபே அம்சத்தை (UPI Autopay Feature) அறிமுகப்படுத்தி உள்ளது.
ரிவார்ட் அடிப்படையிலான பேமண்ட் நெட்வொர்க் (Reward-based payment network) ஆன டிவிட் (TWID) ஆனது டிவிட் யுபிஐ (TWID UPI) என்கிற புதிய மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இது இந்தியா முழுவதும் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் கொள்முதல்களுக்கு ரிவார்ட் பாயிண்ட்களை பயன்படுத்த அனுமதிக்கிறது.
டிவிட் நிறுவனத்தின் கூற்றுப்படி, டிவிட் யுபிஐ ஆப் பயனர்கள் தங்கள் ரிவார்ட் பாயிண்ட்களை யுபிஐ பேமண்ட்களின் செக் அவுட்டில் இணைக்க அனுமதிக்கிறது. அதாவது பாயிண்ட்களை இன்ஸ்டன்ட் சேவிங்ஸ் ஆக மாற்றுகிறது மற்றும் உங்கள் பாக்கெட்டில் இருந்து நேரடியாக வெளியேறும் செலவுகளை குறைக்கிறது.


Click it and Unblock the Notifications