Home
News

திடீரென முடங்கிய SBI டிஜிட்டல் சேவைகள்.. யுபிஐ பயனர்கள் பரிதவிப்பு.. எப்போது சரியாகும்?

எஸ்பிஐ (SBI) வங்கியின் டிஜிட்டல் சேவைகள் முடங்கியுள்ளது. நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கியின் மொபைல் பேங்கிங், இண்டெர்நெட் பேங்கிங்,யுபிஐ சேவைகளும் முடங்கியதால் பயனர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

எஸ்பிஐ (SBI) டிஜிட்டல் சேவைகள்

யுபிஐ செயலிகள் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ ஐடிக்கள் திடீரென முடங்கின. குறிப்பாக சர்வர் டவுன் என வந்ததால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். போனில் ரீசார்ஜ் செய்ய முடியாமலும், கடைகளில் பில் பேமண்ட் செய்ய முடியாமலும் பயனர்கள் தவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென முடங்கிய SBI டிஜிட்டல் சேவைகள்.. யுபிஐ பயனர்கள் பரிதவிப்பு.

மேலும் பயனர்கள் இது குறித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறன்றனர். பின்பு எஸ்பிஐ வங்கி இதுகுறித்து கூறுகையில் ஆண்டுக் கணக்கு முடிப்பு நடவடிக்கைகள் காரணமாக இன்று எங்களின் டிஜிட்டல் சேவைகள் பகல் 1 மணியில் இருந்து 4 மணி வரை கிடைக்காது. எனவே யுபிஐ லைட் சேவைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று எஸ்பிஐ தெரிவித்தது.

யுபிஐ
அதேபோல் பேடிஎம் (paytm), போன் பே (PhonePe), கூகுள் பே (Google Pay) போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு இன்று (ஏப்ரல் 1) முதல் புதிய விதிமுறைகள் வருகின்றன. அதன்படி யுபிஐ செயலிகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் குறிப்பிட்ட காலத்திற்குச் செயல்பாட்டில் இல்லையென்றால் அவை வங்கி கணக்கில் இருந்து அகற்றப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.

அதாவது உங்களது வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும். பின்பு கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ மூலம் நீங்கள் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது இது உங்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தும். தற்போது நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் NPCI இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செயலற்ற மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக அவை யுபிஐ அமைப்புகளுக்குள் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர் உங்கள் வங்கி கணக்குடன் இணைந்திருக்கிறதா என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் உங்களது வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலில் இல்லை என்றாலோ அல்லது சிறிது காலமாக ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலோ அந்த நம்பர் உங்களுடைய பெயரில் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா அல்லது எந்த ஆபரேட்டரை பயன்படுத்தியிருக்கிறீர்களோ அவர்களுடைய கஸ்டமர் கேருக்கு தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
SBI digital services are down: Bank asks to use UPI Lite: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X