KYC படிவங்கள் இல்லாமல் ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு திறக்க இதை செய்யுங்கள்!

|

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பயனர்கள் தங்கள் கணக்கில் குறிப்பிட்ட ஒரு குறைந்தபட்ச சேமிப்பு தொகையை வைப்பு வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் தற்பொழுது KYC படிவங்கள் இல்லாமல், குறைந்தபட்ச சேமிப்பு தொகையும் இல்லாமல் ஜீரோ இருப்பு சேமிப்பு கணக்கு திறக்க இயலும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

KYC படிவங்கள் இல்லாமல் வங்கி கணக்கு

KYC படிவங்கள் இல்லாமல் வங்கி கணக்கு

KYC - வாடிக்கையாளர் குறித்த அடையாளங்களை அளிக்கும் இந்த KYC படிவங்கள் இல்லாமல், இனி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பயனர்கள் புதிய கணக்குகளைத் திறக்க முடியும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு திறக்க

ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு திறக்க

குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தற்போது முதல், KYC படிவங்கள் எதுவும் இல்லாமல் உங்களால் ஜீரோ பேலன்ஸ் (Zero Balance) சேமிப்புக் கணக்கு திறக்க இயலும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த தகவல்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. கூடுதல் சந்தேகங்களுக்கு வலைத்தளத்தை அணுகவும்.

அடிதூள்.!- போதும்., போதும்னு சொல்ல வைக்கும் அடிதூள்.!- போதும்., போதும்னு சொல்ல வைக்கும் "ஜியோ": இலவசம் மேல் இலவசம் அறிவிப்பு

பின்பற்ற வேண்டிய வழிமுறை

பின்பற்ற வேண்டிய வழிமுறை

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் புதிய பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கைத் திறக்க வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் மற்றும் சில முக்கிய நிபந்தனைகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

 முன்பதிவு செய்ய

முன்பதிவு செய்ய

  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் சிறிய கணக்கில் அதிகபட்ச இருப்பு தொகையாக ரூ.50,000 வரை வைத்துக்கொள்ளலாம்.
  • சிறிய வங்கி கணக்கில் இருக்கும் தொகை ரூ.50,000-ஐ தாண்டினால் வாடிக்கையாளர் முழு KYC நடைமுறையையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதுவரை அடுத்தகட்ட பரிவர்த்தனை நடக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • ஒரு நிமிடம் தலை சுத்திருச்சு: ஜியோ Newyear பிளான்: 1 போன் ஃப்ரீ, 2020 முழுவதும் கால், நெட் இலவசம்ஒரு நிமிடம் தலை சுத்திருச்சு: ஜியோ Newyear பிளான்: 1 போன் ஃப்ரீ, 2020 முழுவதும் கால், நெட் இலவசம்

    எத்தனை முறை பணம் எடுக்க முடியும்

    எத்தனை முறை பணம் எடுக்க முடியும்

    • அதேபோல் ஒரு வருடத்தில் கணக்கில் மொத்தமாக இருக்கும் இருப்பு தொகை ரூ.1,00,000-ஐ தாண்டினால், வாடிக்கையாளர் தனது முழு KYC நடைமுறையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.
    • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் சிறு கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.
    •  RuPay ATM டெபிட் கார்டு

      RuPay ATM டெபிட் கார்டு

      • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏடிஎம் அல்லது பிற வங்கிகளின் ஏடிஎம்லிருந்து பணத்தைத் எடுக்கலாம், நெஃப்ட், இணையப் பரிவர்த்தனைகள், மாதாந்திர தவணை மற்றும் பல முறைகள் மூலம் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
      • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் சிறு வைப்பு நிதி வங்கி கணக்கு உள்ளவர்களுக்கு அடிப்படை RuPay ATM டெபிட் கார்டு வழங்கப்படும்.
      • அதேபோல் பயனர்கள் எந்தவொரு வருடாந்திர பராமரிப்புக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
SBI Customers Can Open Zero Balance Savings Account Without KYC : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X