SBI அக்கவுண்ட் இருக்கா.. நவம்பர் 1 முதல் புது ரூல்ஸ்.. ரூ.1000 க்கு மேலான பரிவர்த்தனைக்கு வருது மாற்றம்!
எஸ்பிஐ (SBI) என்கிற ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் (State Bank of India) உங்களுக்கு அக்கவுண்ட்டும், அதோடு கிரெடிட் கார்டும் இருந்தால்.. தயாராக இருக்கவும். வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய விதிகள் (SBI Credit Card New Rules) அமலுக்கு வர உள்ளன
இந்தியாவின் மிகப்பெரிய கிரெடிட் கார்டு வழங்குநர் ஆன எஸ்பிஐ அதன் கட்டண அமைப்பை அப்டேட் செய்துள்ளது. இதன்கீழ் குறிப்பிட்ட சில பேமெண்ட்கள் பாதிக்கப்படாமல் அப்படியே இருக்கின்றன. ஆனால் மற்றவை சில பேமெண்ட்கள் ஆனது நவம்பர் 1 ஆம் தேதி முதல் உங்களுக்கு கூடுதல் செலவை கொடுக்கும்.

எஸ்பிஐ அறிவித்துள்ள இந்த மாற்றங்கள் முக்கியமாக மூன்றாம் தரப்பு செயலிகள் (Third Party Apps) மூலம் பள்ளி அல்லது கல்லூரி கட்டணங்களை செலுத்துதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் டிஜிட்டல் வாலட்களில் பணத்தை லோட் செய்தல் போன்ற பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்களை கொண்டுவருகின்றன.
முதல் மாற்றம் - கல்வி சார்ந்த பேமண்ட்களுக்கான கட்டணத்தில் செய்யப்பட்டு உள்ளது. கிரெட் (CRED), செக் (Cheq) மற்றும் மொபிக்விக் (MobiKwik) போன்ற தேர்ட் பார்ட்டி ஆப்கள் மூலம் செய்யப்படும் எஜுகேஷன் பேமண்ட்களுக்கு பரிவர்த்தனை தொகையில் 1% கட்டணம் பொருந்தும் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.
இருப்பினும், கல்லூரிகள் அல்லது பள்ளிகளுக்கான கட்டணத்தை அந்தந்த கல்லூரி மற்றும் பள்ளியின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது பிஓஎஸ் (POS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாயிண்ட் ஆப் சேல் (Point of sale) இயந்திரங்கள் மூலம் நேரடியாக செய்யப்படும் பேமண்ட்களுக்கு எந்த கட்டணமும் இருக்காது.
இரண்டாவது மற்றம் - வாலட் லோட்க்கான (Wallet load) கட்டணத்தில் செய்யப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் பரிவர்த்தனை தொகையில் 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். இது ரூ.1,000 க்கு மேலாக உள்ள ஒவ்வொரு வாலட் லோட் பரிவர்த்தனைக்கும் (Wallet load transaction) பொருந்தும் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.
இதற்கு முன் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்: இதற்கு முன்பாகவும் எஸ்பிஐ கார்டில் சில மாற்றங்கள் அமலுக்கு வந்தன. கடந்த செப்டம்பர் 16, 2025 முதல், அனைத்து சிபிபி (CPP) வாடிக்கையாளர்களும் அந்தந்த அப்டேடட் காலக்கெடுவின் அடிப்படையில் தானாகவே புதுப்பிக்கப்பட்ட திட்ட வகைகளுக்கு மாற்றப்பட்டனர்.
இதற்கும் முன்பாக கடந்த 2025 செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், டிஜிட்டல் கேமிங் தளங்கள் அல்லது வணிகர்கள் மற்றும் அரசு தொடர்பான பரிவர்த்தனைகளில் செய்யப்படும் செலவுகளுக்கான ரிவார்ட் பாயிண்ட்கள் (Reward points) ஆனது பல வகையான எஸ்பிஐ கார்டுகளில் நிறுத்தப்பட்டது.
எஸ்பிஐ கார்டு எலைட், எஸ்பிஐ கார்டு மைல்ஸ் எலைட் மற்றும் எஸ்பிஐ கார்டு மைல்ஸ் பிரைம் ஆகியவற்றில் வழங்கப்பட்ட ரூ.1 கோடிக்கான இலவச விமான விபத்து காப்பீட்டு தொகை ஆனது கடந்த 2025 ஜூலை 15 அம தேதி முதல் நிறுத்தப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 15 முதல் அமலுக்கு வரும் இன்னொரு முக்கிய மாற்றம்: வருகிற 2025 நவம்பர் 15 ஆம் தேதி முதல் செல்லுபடியாகும் ஃபாஸ்டாக் (FASTag) இல்லாமல் சுங்கச்சாவடிகளுக்குள் நுழையும் வாகனங்கள் - ரொக்கமாக பணம் செலுத்த விரும்பினால் வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது
இருப்பினும் கூகுள்பே, போன்பே மற்றும் பெட்டிமே போன்ற ஆப்களை பயன்படுத்தி, ரொக்கமாக கொடுக்காமல் - யுபிஐ (UPI) என்கிற ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payment Interface) வழியாக பணம் கொடுப்பதை தேர்வு செய்யும் வாகன ஒட்டிகள் 2 மடங்கிற்கு சுங்கக்கட்டணத்திற்கு பதிலாக 1.25 மடங்கு மட்டுமே செலுத்தலாம் என்றும் சிறிய விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








