நவ.1 முதல் அமல்.. இனி ரூ.1000 க்கு மேல் சென்றால்.. SBI கஸ்டமர்களுக்கு உயர்த்தப்பட்ட கட்டணங்கள்!
நவம்பர் 1 ஆம் தேதி முதல் எஸ்பிஐ (SBI) பேங்க் கஸ்டமர்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அமலுக்கு வந்தன. இதன் கீழ் எஸ்பிஐ கார்டு பயனர்களுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. ஒருவேளை உங்களிடம் எஸ்பிஐ கிரெட்டி கார்டு இருந்தால்.. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இதோ:
2025 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல், எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளில் கல்வி கட்டணங்கள் (education payments), கார்டு ரீப்ளேஸ்மென்ட் (card replacements) மற்றும் வேலட் லோட்ஸ் (wallet loads) உள்ளிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணங்கள் சேர்க்கப்படும்.

தேர்ட் பார்ட்டி ஆப்கள் மூலம் பள்ளி அல்லது கல்லூரி கட்டணம் செலுத்தினால், பயனர்கள் செய்யும் பரிவர்த்தனை தொகையில் 1 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். இருப்பினும் பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்திலோ அல்லது பிஓஎஸ் (POS) இயந்திரத்திலோ பணம் செலுத்தப்பட்டால், எந்த கட்டணமும் பொருந்தாது.
மேலும் பயனர்கள் தங்கள் வேலட்டில் ரூ.1,000 க்கு மேல் லோட் செய்தால் 1 சதவீத கட்டணம் பொருந்தும். தேர்ந்தெடுக்கப்பட்ட வணிகர் குறியீடுகளுக்கு (Merchant codes) இந்த கட்டணம் பொருந்தும். கேஷ் பேமண்ட் (cash payment), செக் கார்டு ரீப்ளேஸ்மென்ட் பேமண்ட் (check card replacement payment) மற்றும் லேட் பேமண்ட்ஸ்-க்கான (late payment) கட்டணங்கள் எதுவும் மாறாமல் பழையபடியே தொடரும்.
கார்டு ரீப்ளேஸ்மென்ட் கட்டணம்: ரூ.100 முதல் ரூ.250 வரை (ஆரம் கார்டு ரூ.1,500).
செக் பேமண்ட் கட்டணம்: ரூ.200.
கேஷ் பேமண்ட் கட்டணம்: ரூ.250.
கேஷ் அட்வான்ஸ் கட்டணம்: பரிவர்த்தனை தொகையில் 2.5 சதவீதம் (குறைந்தபட்சம் ரூ.500).
பண மதிப்பிழப்பு கட்டணம்: கட்டணத் தொகையில் 2 சதவீதம் (குறைந்தபட்சம் ரூ.500)
வெளிநாட்டில் எமர்ஜென்சி கார்டு ரீப்ளேஸ்மென்ட் கட்டணம்: விசா அட்டைகளுக்கு யுஎஸ்டி 175 மற்றும் மாஸ்டர்கார்டுக்கு யுஎஸ்டி 148.
பயனர்கள் குறைந்தபட்ச நிலுவை தொகையை (Minimum Amount Due - MAD) சரியான நேரத்தில் செலுத்தத் தவறினால், எஸ்பிஐ கார்டு பயனர்களிடம் இருந்து பின்வரும் தாமத கட்டணங்களை வசூலிக்கும்:
ரூ.0 - ரூ.500: கட்டணம் இல்லை
ரூ.500 - ரூ.1,000: ரூ.400
ரூ.1,000 - ரூ.10,000: ரூ.750
ரூ.10,000 - ரூ.25,000: ரூ.950
ரூ.25,000 - ரூ.50,000: ரூ.1,100
ரூ.50,000 க்கு மேல்: ரூ.1,300
எஸ்பிஐ வங்கியின் கூற்றுப்படி, இந்த மாற்றங்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதையும், எந்த பரிவர்த்தனைகளுக்கு என்னென்ன கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பது பற்றிய சிறந்த தகவல்களை கார்டு பயனர்களுக்கு வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளன. மேலும் பயனர்கள் தங்கள் கார்டுகளை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. தேவையற்ற கட்டணங்கள் அல்லது வட்டி ஏற்படுவதை தடுக்க அவர்கள் சரியான நேரத்தில் பணம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது
இதேபோல நவம்பர் 1 ஆம் தேதி முதல் பேங்க் அக்கவுண்ட் தொடர்பான 2 முக்கிய மாற்றங்களும் அமலுக்கு வந்தன். இந்த புதிய விதிமுறைகளின் கீழ், அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் பேங்க் அக்கவுண்ட்களுக்கு நான்கு வேட்பாளர்களை (Nominees) நியமிக்கலாம். அவர்கள் ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ நியமிக்கப்படலாம். இந்த மாற்றம் - அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கும், அவர்களின் வேட்பாளர்களுக்கும் உரிமைகோரல்களை செய்யும் போது செயல்முறையை நெறிப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இருப்பினும் வங்கி லாக்கர்களை பொறுத்தவரை, அடுத்தடுத்து பரிந்துரைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதன் பொருள் முதல் வேட்பாளர் கிடைக்கவில்லை என்றால், இரண்டாவது வேட்பாளர் முன்னுரிமை பெறுவார், இது ஒரு மென்மையான மற்றும் தெளிவான உரிமைகோரல் செயல்முறையை உறுதி செய்யும்.
மேலும் நிதி அமைச்சகம் ஆனது ஆக்கபூண்ட் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு வேட்பாளருக்கும் உரிமைகளின் சதவீதத்தை குறிப்பிட வேண்டும் என்றும் நிர்ணயித்துள்ளது. இது மொத்தம் 100% ஆக இருக்க வேண்டும். உதாரணமாக, நான்கு வேட்பாளர்களுடன், விநியோகம் முதல் வேட்பாளருக்கு 40%, இரண்டாவது வேட்பாளருக்கு 30%, மூன்றாவது வேட்பாளருக்கு 20% மற்றும் நான்காவது வேட்பாளருக்கு 10% ஆக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








