புது மினிமம் பேலன்ஸ், ATM ரூல்ஸ்.. SBI, Canara, Punjab வங்கி கணக்கு இருக்கா? கவனியுங்க.. இல்லாட்டி அபராதம்..
இந்தியாவில் உள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறைகளுடன் (New rules for bank customers) முக்கியமான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. இன்று முதல் உங்கள் வங்கி கணக்கின் மினிமம் பேலன்ஸ் (minimum balance requirements) மற்றும் ATM வித்ட்ரா லிமிட் கட்டணங்களில் (ATM withdrawal limit charges) மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாற்றங்கள் மூலம், நீங்கள் இனி அதிக கட்டணங்களை செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதனால், உடனே இந்த புதிய விதிமுறைகளை பற்றி அறிந்துகொண்டு செயல்படுவது நல்லது மக்களே.
இந்தியாவின் முக்கியமான வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank Of India), கனரா பேங்க் (Canara Bank) மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் (Punjab National Bank) உள்ளிட்ட வங்கிகளில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கிகள் எப்போதும் அவர்களுடைய கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை புதுப்பித்துக் கொண்டே இருப்பது வழக்கமானது.

புது மினிமம் பேலன்ஸ், ATM ரூல்ஸ்.. SBI, Canara, Punjab National Bank வங்கியில் கணக்கு இருக்கா? கவனியுங்க:
அப்படி, இந்த மாதமும் சில புதிய விதிமுறைகளை இந்தியாவின் மிக முக்கியமான வங்கிகளான SBI, Canara மற்றும் Punjab National Bank போன்ற வங்கிகள் நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்த புதிய விதிமுறைகள் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் பராமரிப்பதற்கும், ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்கும் எண்ணிக்கை வரம்பிற்கு மேலான கட்டணங்கள் எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை பற்றியது.
இந்தப் புதிய ரூல்ஸ்களை பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ளாமல் இருப்பது, உங்களுக்கு நிதிப் பின்னடைவுகளை வழிவகுக்கும் என்பதனால் உடனே இவற்றை தெரிந்துகொள்ளுங்கள். ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்புகள் முதல் குறைந்தபட்ச இருப்புத் தேவைகள் வரை, இந்த புதிய விதிகள் மூலம் என்ன மாற்றங்களை நீங்கள் இன்று முதல் சந்திக்க போகிறீர்கள் என்பது இங்கே.
SBI மற்றும் CANARA வங்கியின் புதிய மினிமம் பேலன்ஸ் விதிமுறை மாற்றம்:
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank Of India) இப்போது அதன் மினிமம் பேலன்ஸ் இருப்பு தொகையை ரூ. 3,000 என்ற கட்டணத்தில் இருந்து ரூ. 5,000 வரை அதிகரித்திருப்பதாக வங்கி அறிவித்துள்ளது. அதேபோல், கனரா பேங்க் (Canara Bank) வாடிக்கையாளர்களின் மினிமம் பேலன்ஸ் தொகை ரூ. 1,000 என்ற தொகையில் இருந்து ரூ. 2500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, பஞ்சாப் நேஷனல் பேங்க் (Punjab National Bank) வாடிக்கையாளர்களின் மினிமம் பேலன்ஸ் தொகை ரூ. 1000-திலிருந்து ரூ. 3500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட மினிமம் பேலன்ஸ் தொகைக்கு கீழ் உங்கள் கணக்கில் குறைந்த இருப்பு இருந்தால், உங்களுக்கு அபராதம் (mini balance limit penalties) விதிக்கப்பட்டும் என்று வங்கிகள் எச்சரித்துள்ளன.
புது ATM வித்ட்ராவல் ரூல்ஸ்:
அதேபோல், இந்த மாத துவக்கத்தில் இருந்து ATM வித்ட்ராவல் விதிமுறைகளிலும் கூட புதிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மெட்ரோ நகரங்களில் இப்போது வரை 3 இலவச ATM பரிவர்த்தனைகளை வங்கிகள் அனுமதிக்கின்றன. இந்த குறிப்பிட்ட இலவச ATM பயன்பாட்டு வரம்பிற்கு பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு இனி ரூ. 25 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த கட்டணம் ரூ. 20 ஆக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
உங்கள் இலவச ATM லிமிட்களை தாண்டிய பிறகு, நீங்கள் வேறு ஏதேனும் வங்கி ATM மையங்களில் இருந்து பணம் எடுத்தால் அல்லது ATM சேவையை பயன்படுத்தினால், இனி நீங்கள் ஒவ்வொரு முறையும் ரூ. 30 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று புதிய ATM விதிமுறைகள் தெரிவிக்கின்றன. மெட்ரோ அல்லாத நகரங்களிலும் இதே கட்டணங்கள் வசூலிக்கப்படும். ஆனால், இலவச ATM பயன்பாட்டு வரம்பு 5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளை சரியாக புரிந்துகொண்டு, உங்கள் வங்கி கணக்கில் சரியான மினிமம் பேலன்ஸ் தொகையை மெயின்டைன் செய்யும்படி அறிவுரைக்கப்படுகிறது. அதேபோல், புதிய ATM ரூல்ஸ் படி, சரியான லிமிட் மற்றும் கூடுதல் கட்டணங்களுக்கான வரம்புகளை அறிந்து ATM சேவையை பயன்படுத்த அறிவுரைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








