SBI வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? "இதை" புதுப்பிக்காவிட்டால் சேவைகள் நிறுத்தப்படும்.! எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு..

|

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) பயனர்கள் அவர்களின் நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் ஆதார் விபரங்களை உடனடியாக இணைக்கப்பட வேண்டும் என்று வங்கி ஆணையிட்டுள்ளது. இந்த இரண்டு முக்கிய அட்டைகளின் விபரங்கள் இணைப்பதற்கு இறுதி நாள் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த குறிப்பிட்ட தேதிக்குள் பான்-ஆதார் அட்டையை இணைப்பது அவசியம் என்றும், இதைச் செய்யத் தவறும் பயனர்களின் எஸ்பிஐ வங்கி சேவைகள் அதிரடியாக நிறுத்தப்படும் என்று SBI எச்சரித்துள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்களே.. இது மிகவும் முக்கியமான அறிவிப்பு

SBI வங்கி வாடிக்கையாளர்களே.. இது மிகவும் முக்கியமான அறிவிப்பு

வங்கி வாடிக்கையாளர்களை இந்த சிரமத்தைத் தவிர்க்கவும் மற்றும் தடையில்லா வங்கி சேவையை அனுபவிக்கவும், இதை உடனடியாக செய்யுமாறு வங்கி வேண்டுகோள்விடுத்துள்ளது. SBI வங்கியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் வழியாக இந்த செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி, SBI பயனர்களின் நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் ஆதார் இணைக்கப்பட வேண்டும் என்றும், செய்யத் தவறும் பட்சத்தில் வங்கி சேவைகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் தொந்தரவைச் சந்திக்க நேரிடும் என்று SBI கூறியுள்ளது.

இறுதி காலக்கெடு நெருங்கிவிட்டது.. தவறாமல் உடனே இதை செய்யுங்கள்

இறுதி காலக்கெடு நெருங்கிவிட்டது.. தவறாமல் உடனே இதை செய்யுங்கள்

வருமான வரித் துறை அறிவிப்பின் படி, செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அனைத்து மக்களும் அவர்களின் பான் அட்டையுடன் ஆதார் அட்டை விபரங்களை இணைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. பான் மற்றும் ஆதார் இணைப்பதற்கான இறுதி காலக்கெடு இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் உடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் பயனற்றவையாகி, காலக்கெடுவுக்குப் பிறகு "செயல்படாதவை" என்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 மணி நேரம் தாமதமாக வந்த ரயில்.. 2035 பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.! IRCTC கொடுத்த இழப்பீடு எவ்வளவு தெரியுமா?2 மணி நேரம் தாமதமாக வந்த ரயில்.. 2035 பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.! IRCTC கொடுத்த இழப்பீடு எவ்வளவு தெரியுமா?

PAN உடன் ஆதாரை இணைப்பது எவ்வளவு முக்கியம்?

PAN உடன் ஆதாரை இணைப்பது எவ்வளவு முக்கியம்?

வருமான வரித் துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, "ஒரு நபர் ஆதார் எண்ணை PAN உடன் இணைக்கத் தவறினால், அத்தகைய நபருக்கு ஒதுக்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு, சட்ட பிரிவு 139AA இன் பிரிவு 41-ன் படி செயல்படாது" என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் என்பது பத்து இலக்க தனித்துவமான எண்ணெழுத்து எண்களாகும்.

SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வேண்டுகோள்

SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வேண்டுகோள்

வரி ஏய்ப்பு மற்றும் மோசடிகளைத் தடுக்க வரி அதிகாரிகளுக்கு பான் உதவுகிறது, ஏனெனில் இது ஒரு தனிநபரால் செய்யப்படும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு முக்கியமான ஆவணத்தின் செயலிழப்பைத் தவிர்க்க, வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பான் மற்றும் ஆதார் விவரங்களை விரைவில் இணைக்குமாறு SBI வங்கி தனது வாடிக்கையாளர்களைக் கேட்கத் தொடங்கியுள்ளது.

இனி பக்கத்து வீட்டில் இருந்தாலும் பரவாயில்லை: வைஃபை-ல் வந்த மிகப்பெரிய மாற்றம்: அதிவேக இணையத்தில் வைஃபை 6இ!இனி பக்கத்து வீட்டில் இருந்தாலும் பரவாயில்லை: வைஃபை-ல் வந்த மிகப்பெரிய மாற்றம்: அதிவேக இணையத்தில் வைஃபை 6இ!

தடையற்ற வங்கி சேவையைத் தொடர

தடையற்ற வங்கி சேவையைத் தொடர "இதை" உடனே செய்யுங்கள்

"எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு அசவுகரியத்தையும் தவிர்க்கவும், தடையற்ற வங்கி சேவையைத் தொடர்ந்து அனுபவிக்கவும் தங்கள் பான் விபரத்தை ஆதார் உடன் இணைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்" என்று டிவிட்டரில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை நடத்துவதற்கும் இது மிகவும் முக்கியமானது என்று SBI வங்கியால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ரூ. 50,000 க்கு மேல் பணம் வங்கிக்கு சென்றால் PAN கட்டாயமா?

ரூ. 50,000 க்கு மேல் பணம் வங்கிக்கு சென்றால் PAN கட்டாயமா?

வங்கிக் கணக்கைத் திறக்கும்போது, ​​கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, ​​மற்றவற்றுடன் டிமேட் கணக்கைத் தொடங்கும்போது பான் கார்டு அவசியமாகிறது. ஒரு நபர் ஒரு நாளில் ரூ. 50,000 க்கு மேல் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், பான் கட்டாயமாகும். ரூ. 50,000-க்கும் அதிகமான மதிப்புள்ள பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள், பத்திரங்கள் போன்றவற்றை வாங்கும் போதும் PAN அவசியம். இது போல் நிதி தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு PAN கட்டாயமாகும்.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய சிக்கல்: இந்த 8 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்.. கூகிள் வெளியிட்ட அவசர அறிவிப்புஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய சிக்கல்: இந்த 8 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்.. கூகிள் வெளியிட்ட அவசர அறிவிப்பு

பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால் ரூ. 1,000 -திற்கு மேல் அபராதமா?

பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால் ரூ. 1,000 -திற்கு மேல் அபராதமா?

எஸ்.பி.ஐ பயனர்கள் வருமான வரி துரையின் மின்-தாக்கல் போர்ட்டலுக்குச் சென்று பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை இணைத்து "தடையற்ற வங்கி சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்று SBI தெரிவித்துள்ளது. காலக்கெடு முடிந்ததும் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால் ஒரு தனிநபர் ரூ. 1,000 அல்லது அதற்கு மேலாக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பணத்தைத் திரும்பப் பெற பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்

பணத்தைத் திரும்பப் பெற பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்

"ஆதார் உடன் பான் இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், இந்த இணைப்பை முடிந்தவரை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. பான் மற்றும் ஆதார் ஆகியவற்றின் இணைப்பு, பணத்தைத் திரும்பப் பெறுவது போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது" என்று சமீபத்திய அறிக்கை வெளியீடு குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது சோழர் 11 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தியது: தமிழர் பெருமையை எடுத்து சொல்லும் புதிய கண்டுபிடிப்பு.!இது சோழர் 11 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தியது: தமிழர் பெருமையை எடுத்து சொல்லும் புதிய கண்டுபிடிப்பு.!

பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான வழிமுறை என்ன? இதை எப்படிச் செய்வது?

பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான வழிமுறை என்ன? இதை எப்படிச் செய்வது?

  • வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள இ-தாக்கல் சேவை போர்ட்டலுக்குச் செல்லவும்.
  • பின்னர் நீங்கள் இடதுபுறத்தில் உள்ள இணைப்பு ஆதார் பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.
  • நீங்கள் திசைதிருப்பப்பட்ட பிறகு, உங்கள் பான் எண், ஆதார் எண் மற்றும் பெயரை நிரப்ப வேண்டும்.
  • இதை செய்த பிறகு ஆதார் மற்றும் பான் இணைந்துவிடும்

    இதை செய்த பிறகு ஆதார் மற்றும் பான் இணைந்துவிடும்

    • கடைசியாக, கொடுக்கப்பட்ட CAPTCHA குறியீட்டை நீங்கள் நிரப்ப வேண்டும்.
    • ஆதார் இணைப்பு விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
    • உங்கள் பான்-ஆதார் இணைப்பு செயல்முறை முடிந்துவிடும்.
    • உங்கள் ஆதார் விவரங்களை உள்ளிடவும். உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றை வருமான வரித் துறை சரிபார்க்கும், அதன் பிறகு இணைப்பு வெற்றிகரமாக முடியும்.

Best Mobiles in India

English summary
SBI Banking Services Will Be Stopped If These Customer Documents Was Not Updated Before September 30 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X