புது கிரெடிட் கார்டு ரூல்ஸ்.. ஜூலை 15 முதல் அமல்.. இனி அதிக கட்டணம்.. வரிசையும் மாறுது.. SBI வங்கி அறிவிப்பு!
எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியானது, வருகிற ஜூலை 15 ஆம் தேதி முதல் அதன் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் (SBI Credit Card) 2 முக்கிய மாற்றங்களையும், ஆகஸ்ட் 11 முதல் இன்னொரு மாற்றத்தையும் அமல்படுத்த உள்ளது. அதென்ன மாற்றங்கள்? வாடிக்கையாளர்கள் இனி என்ன செய்ய வேண்டும்? வாருங்கள் விரிவாக பார்ப்போம்:
1. குறைந்தபட்ச நிலுவைத் தொகை கணக்கீட்டில் திருத்தம் (Revised minimum amount due calculation): 2025 ஜூலை 15 ஆம் தேதி முதல் எம்ஏடி (MAD) என்று சுருக்கமாக அழைக்கப்படும் குறைந்தபட்ச நிலுவைத் தொகை (Minimum amount due) இப்போது மிகவும் கண்டிப்பாக கணக்கிடப்படும்.

இதில் 100% இஎம்ஐக்கள் (EMIs), ஜிஎஸ்டி (GST), ஃபீஸ் / சார்ஜஸ் (Fees / Charges), பைனான்ஷியல் சார்ஜஸ் (Financial Charges) மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையில் (Outstanding balance) 2% ஓவர் லிமிட்கள் (Over Limits) ஆகியவைகள் அடங்கும். இதன் விளைவாக எஸ்பிஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் அதிக குறைந்தபட்ச கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
2. பேமண்ட் செட்டில்மென்ட் ஆர்டரில் புதுப்பிப்பு (Updated Payment Settlement order): 2025 ஜூலை 15 ஆம் தேதி முதல், எஸ்பிஐ கார்டுகள் பணம் செலுத்தும் வரிசையை மாற்றும். முதலில் ஜிஎஸ்டி, அதை தொடர்ந்து இஎம்ஐக்கள், கட்டணங்கள், நிதி கட்டணங்கள், பேலன்ஸ் பரிமாற்றங்கள், ரீடெயில் செலவுகள் மற்றும் இறுதியில் ரொக்க முன்பணங்கள் ஆகியவை செலுத்தப்படும். முந்தைய நிலுவைகள் உடனடியாக செலுத்தப்படாவிட்டால் இந்த நடவடிக்கையின் கீழ் வட்டி கட்டணங்கள் அதிகரிக்கும்.
3. விமான விபத்து காப்பீட்டுத் தொகை நிறுத்தப்பட்டது (Air accident insurance cover discontinued): 2025 ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 2025 எஸ்பிஐ கார்டு, யுசிஓ (UCO) வங்கி, கேவிபி (KVB), பிஎஸ்பி (PSB) போன்ற கூட்டாளர் வங்கிகளுடன் இணைந்து பல இணை பிராண்டட் கார்டுகளில் வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான இலவச விமான விபத்து காப்பீட்டு திரும்ப பெறப்பட உள்ளது.
இனி நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் ஒரு எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், உங்கள் கார்டின் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டணங்களை கவனமாக மதிப்பாய்வு செய்யவும். வட்டி மற்றும் கட்டணங்கள் குவிவதை தவிர்க்க குறைந்தபட்ச தொகையை விட அதிகமாக செலுத்துங்கள்.
நிலுவையில் உள்ள நிலுவை தொகைகள் குறித்த தெளிவான யோசனையை பெற புதிய கட்டண உத்தரவை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் கிரெடிட் கார்டுகளின் தற்போதைய நன்மைகளை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும். அது இனியும் உங்கள் தேவைகளுக்குப் பொருந்தவில்லை என்றால் அப்கிரேட் ஆவதற்கு திட்டமிடவும்.
சமீபத்தில் அமலுக்கு வந்த வங்கிகள் தொடர்பான மற்ற புதிய விதிகளை பொறுத்தவரை கனரா வங்கி, இந்தியன் பேங்க் உட்பட மொத்தம் 5 முக்கிய வங்கிகள் ஆனது தங்கள் வங்கிகளில் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்து உள்ள வாடிக்கையாளர்களுக்கான கட்டாய நடைமுறை (Compulsory Practice) ஒன்றை நீக்கின. அது சேமிப்பு கணக்குகளுக்கான சராசரி மாதாந்திர இருப்பை (Average Monthly Balance - AMB) ஆகும்
எந்தெந்த வங்கிகள் மன்த்லி மினிமம் பேலன்ஸை நீக்கி உள்ளன?
1. பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda)
2. கனரா வங்கி (Canara Bank)
3. இந்தியன் வங்கி (Indian Bank)
4. பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)
5. பேங்க் ஆப் இந்தியா (Bank of India)
எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) வங்கி தான் நடைமுறையை முதன்முதலில் கொண்டு வந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த வங்கி 2020 ஆம் ஆண்டிலேயே குறைந்தபட்ச இருப்பு தேவைகளைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. அதை இப்போது தான் மற்ற வங்கிகள் அறிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications








