SBI அக்கவுண்ட் இருக்கா? அக்டோபர் 1 முதல் புது ATM ரூல்ஸ்.. 500 ரூபாயோ.. 1000 ரூபாயோ.. இதை தெரிஞ்சுக்கோங்க..
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 1 முதல் பணம் எடுப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. ஏடிஎம் உள்ளிட்ட வழிகளில் குறிப்பிட்ட இலவச வரம்பைத் தாண்டி பணம் எடுத்தால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே, அடிக்கடி பணம் எடுக்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் புதிய விதிமுறைகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.
குறிப்பாக இந்த புதிய விதிமுறை அனைத்து SBI வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக, வங்கிக் கிளைகள் மூலம் தொடங்கப்பட்ட அடிப்படை சேமிப்புக் கணக்கு (BSBD) வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அக்டோபர் 1 முதல் எஸ்பிஐ வங்கியில் அமலாகும் முக்கிய விதிமுறை மாற்றங்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

BSBD சேமிப்புக் கணக்கு
SBI-யின் அடிப்படை சேமிப்புக் கணக்கு (BSBD) வைத்திருப்பவர்கள் மாதத்திற்கு 4 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம். அக்டோபர் 1 முதல் இந்த வரம்பைத் தாண்டி எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் ரூ.15 + GST கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு முன்பு ரூ.8 கட்டணமாக இருந்த நிலையில், தற்போது கட்டணம் அதிகரிக்கிறது. எனவே, மாதத்திற்கு அடிக்கடி பணம் எடுப்பவர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆதார் மூலம் பணம் பெறும் AePS பரிவர்த்தனைகளும் மாதத்திற்கான இலவச பணம் எடுக்கும் வரம்பில் சேர்க்கப்படும். SBI ஏடிஎம், பிற வங்கி ஏடிஎம், வங்கிக் கிளை மற்றும் AePS மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் இதில் அடங்கும். ஆனால், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எந்த வரம்பும் இல்லாமல் தொடர்ந்து இலவசமாகப் பயன்படுத்தலாம் என SBI தெரிவித்துள்ளது.
BSBD கணக்கு என்பது குறைந்த வருமானம் கொண்ட மக்களின் சேமிப்புத் தேவைக்காக உருவாக்கப்பட்ட அடிப்படை சேமிப்புக் கணக்காகும். இந்தக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் BSBD கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் வேறு சேமிப்பு வங்கிக் கணக்கை வைத்திருக்கக் கூடாது.
SBI சம்பளக் கணக்கு
மேலும் சம்பளம் பெறுவதற்காக எஸ்பிஐ வங்கியில் சிறப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் ஒரு மாற்றம் இருக்கிறது. அதாவது மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தும்போது, இதுவரை ஒரு மாதத்தில் 10 முறை கட்டணம் இல்லாமல் பயன்படுத்த முடிந்தது. ஆனால் இனிமேல் அந்த எண்ணிக்கை 10-லிருந்து 5 முறையாக குறைகிறது.
குறிப்பாக இந்த 5 முறையில் பணம் எடுப்பது மட்டுமல்ல, கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்ப்பது போன்ற ஏடிஎம் சேவைகளும் அடங்கும். அதாவது இந்த 5 ஐந்து இலவச பரிவித்தனைகளுக்கான வரம்பு, நிதி மற்றும் நிதி சார்ந்த பரிவர்த்தனைகள் அடங்கும். இவை அனைத்து மையங்களிலும் பொருந்தும்.
மாதத்திற்கு கிடைக்கும் 5 இலவச ATM பரிவர்த்தனைகள் முடிந்த பிறகு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். பிற வங்கி ATM-களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 + GST கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல், கணக்கு இருப்பை பார்ப்பது போன்ற ATM சேவைகளை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், ஒவ்வொரு முறைக்கும் ரூ.11 + GST கட்டணம் வசூலிக்கப்படும்.

அதேசமயம் SBI-யின் சொந்த ATM-களை பயன்படுத்துவதில் இந்த புதிய மாற்றம் இல்லை. மற்ற வகையான SBI கணக்குகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தாது. SBI ATM மற்றும் ADWM இயந்திரங்களைப் பயன்படுத்தும் எஸ்பிஐ டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான தற்போதைய இலவச பரிவர்த்தனை வரம்பும், அதற்கான கட்டணங்களும் தொடர்ந்து மாற்றமின்றி இருக்கும்.
அக்டோபர் 1 முதல் ATM பயன்படுத்தும்போதும், பணம் எடுக்கும்போதும் SBI வாடிக்கையாளர்கள் புதிய மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கும் புதிய கட்டணங்கள் பொருந்தாது. தங்களது கணக்கு எந்த வகையைச் சேர்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டால், கட்டணம் பொருந்துமா என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
