Home
News

SBI ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணமா? இந்த புது விதி உண்மை தானா?

SBI ATM Rule: தமிழில் என்னதான் பல அற்புதமான வாக்கியங்கள் இருந்தாலும், இந்த வாக்கியத்தை அறிந்திருக்காத நபர்களே இருக்க முடியாது.

"கற்றது கை மண்ணளவு.. கல்லாதது உலகளவு.." என்ற இந்த வாக்கியத்தை நீங்கள் கட்டாயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த வாக்கியத்தைப் பாடியவர் தமிழ் பெண் புலவரான ஔவையார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் வரிகள் என்ன அர்த்தத்தை வழங்குகிறது தெரியுமா?

இந்த சிறிய வரியில் இவ்வளவு ஆழமான அர்த்தமா?

இந்த சிறிய வரியில் இவ்வளவு ஆழமான அர்த்தமா?

நமக்குத் தெரிந்த விஷயங்கள் உள்ளங்கை அளவில் இருந்தாலும் கூட, நமக்குத் தெரியாத விஷயங்கள் கடல் அளவில் இருக்கிறது என்பதே இதற்கான சுருக்கமான அர்த்தம்.

முழுமையான அர்த்தத்தைக் கூற வேண்டும் என்றால், நாம் பல விஷயங்களை கற்று அறிந்து இருக்கலாம். ஆனால், அதற்காக நமக்கு எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் கொள்ளக்கூடாது என்பதைத் தான் இந்த வரிகள் விளக்குகிறது.

பயனுள்ள தகவலை நமது கரங்களில் சேர்க்கும் ஸ்மார்ட்போன்!

பயனுள்ள தகவலை நமது கரங்களில் சேர்க்கும் ஸ்மார்ட்போன்!

புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது, தெரிந்துகொள்வது என்பதெல்லாம் அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அப்பூர்வமானது. ஆனால், இன்றைய காலத்தில், இணையச் சேவையின் உதவியோடு, நமக்குத் தெரியாத பல விஷயங்கள் இப்போது நம் கைகளுக்குள் வந்துவிடுகிறது.

ஆம், ஸ்மார்ட்போன் மூலம் நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவல்கள், நம்மை உடனுக்குடன் இப்போது இணைத்துவிடுகிறது.

எது SBI ATM ஐ இந்த அளவிற்கு மேல் பயன்படுத்தினால் ரூ.173 கட்டணமா?

எது SBI ATM ஐ இந்த அளவிற்கு மேல் பயன்படுத்தினால் ரூ.173 கட்டணமா?

அப்படி சமீபத்தில், SBI வங்கி வாடிக்கையாளர்களை பெரும் பரபரப்பிற்கு உள்ளாக்கிய ஒரு செய்தியைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

சில தினங்களுக்கு முன்னால், SBI ATM விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவியது.

இதன் படி, இனி 4 முறை ATM பரிவர்த்தனை செய்த பிறகு ரூ.173 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

SBI வாடிக்கையாளர்களை டென்ஷன் ஆக்கிய 'அந்த' செய்தி கொடுத்த டிவிஸ்ட்.!

SBI வாடிக்கையாளர்களை டென்ஷன் ஆக்கிய 'அந்த' செய்தி கொடுத்த டிவிஸ்ட்.!

இதைக் கண்ட SBI வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் திகைத்துப் போனார்கள். இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகியது. பல SBI வாடிக்கையாளர்கள் இது நியாயமற்றது என்று குரல் எழுப்பத் துவங்கினர்.

ஆனால், இறுதியில் இந்த செய்திக்கு ஒரு பெரிய டிவிஸ்ட் போடப்பட்டது. புத்திசாலிகள் சிலருக்கு, இந்த தகவல் முதலில் உண்மை தானா என்ற சந்தேகம் எழுந்தது. இதனை ஆராய்ந்த போது உண்மை புலப்பட்டது.

4 முறைக்கு மேல் ATM பயன்படுத்தினால் ரூ.173 வசூலிக்கப்படும்.!

4 முறைக்கு மேல் ATM பயன்படுத்தினால் ரூ.173 வசூலிக்கப்படும்.!

இணையத்தில் பரவும் செய்திகளில் உண்மையான தகவல்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அதேபோல் சில செய்திகளில் பொய்களும் அதிகமாக இருக்கிறது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் 4 முறைக்கு மேல் ATM மூலம் பணம் எடுக்கும் பொழுது, ரூ. 173 அவர்களுடைய அக்கௌன்ட்டில் இருந்து சர்வீஸ் சார்ஜ் ஆக வசூலிக்கப்படும் என்று இணையத்தில் வெளியான தகவல் முற்றிலும் போலியானது என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்கிறோம்.

இந்த SBI ATM விதி உண்மையா? அல்லது பொய்யா?

இந்த SBI ATM விதி உண்மையா? அல்லது பொய்யா?

இணையத்தில் வைரலான செய்தியில், சேமிப்புக் கணக்கில் ஒரு வருடத்தில் 40-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் நடந்தால், பரிவர்த்தனைக்கான வைப்புத் தொகையிலிருந்து ரூ.57.5 கழிக்கப்படும் என்றும், ஏடிஎம்மில் இருந்து 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் மொத்தம் ரூ.173 கழிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கூற்றுத் தவறானது என PIB Fact Check குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி ATM விதிகளில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளதா?

பாரத ஸ்டேட் வங்கி ATM விதிகளில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளதா?

ATM பரிவர்த்தனை தொடர்பான விதிகளில் பாரத ஸ்டேட் வங்கி எந்தவித மாற்றத்தையும் செய்யவில்லை என்பதை SBI உறுதிப்படுத்தியுள்ளது.

PIB Fact Check இந்த தகவலைப் போலியானது என்று கூறியுள்ளது. ஏடிஎம் சம்பந்தமாக அப்படி எந்த விதியும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இணையதளத்தின்படி, உங்கள் வங்கியின் ஏடிஎம்மில் இருந்து ஒவ்வொரு மாதமும் 5 இலவசப் பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.

எந்த வங்கியும் இப்படி ஒரு செயலை செய்யாது! மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்!

எந்த வங்கியும் இப்படி ஒரு செயலை செய்யாது! மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்!

இதற்குப் பிறகு, நடக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.21 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஏதேனும் வரி இருந்தால், அதைத் தனியாகச் செலுத்த வேண்டும் என்பதே இப்போதைக்கு நடைமுறையில் உள்ள ATM விதிகளாகும்.

எந்த வங்கியும் உங்கள் கணக்கில் இருந்து ரூ.173 என்ற தொகையை வசூலிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போலி செய்தியால் பீதியடைந்த பொதுக்கமளிடம் இந்த உண்மை தகவலைத் தெரியப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
SBI ATM Rule Changed Rs 173 Will Be Deducted For Withdrawing Money More Than 4 Transactions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X