இன்று முதல் எஸ்பிஐ ஏடிஎம்-ல் ஒடிபி முறையில் பணம் எடுக்கும் முறையில் நேரம் நீட்டிப்பு.! முழுவிவரம்.!

|

எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஏடிஎம்-களில் ஒடிபி அடிப்படையில் பணம் எடுக்கும் முறையில் நேரத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. எனவே இதனால் வாடிக்கையாளர்களுக்கு வெள்ளைக்கிழமை (செப்டம்பர் 18) முதல் இந்த செயல்முறைக்கு

அதிக நேரம் கிடைக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

எஸ்பிஐ பயனர்கள்

சுருக்கமாக இனிமேல் எஸ்பிஐ பயனர்கள் 10,000ருபாய்க்கு மேலான தொகையை ஒடிபி சரிபார்த்தலுக்கு பிறகு, நாள் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் ATM-லிருந்து எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஜனவரி மாத்தில் இரவு 8மணி முதல் காலை 8மணி வரை வங்கி இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு அனுமதித்திருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

பரிவர்த்தனைகளின்

அதாவது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க ஒடிபி- வேலிடேட் ஏடிஎம் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டது என்று ஸ்டேட் பாங்க ஆப் இந்த தெரிவித்துள்ளது.

புதிய கண்டுபிடிப்பு: பயோனிக் கண்.! பார்வை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக உதவும்.!

ஒடிபி அடிப்படையிலான பணத்தை

மேலும் ஒடிபி அடிப்படையிலான பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகமப்படுத்தியதன் மூலம் தனது ஏடிஎம் சேவை மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனையில் எஸ்பிஐ வங்கி மற்றொரு அடுக்கு பாதுகாப்பை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின்

குறிப்பாக வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணில் ஒடிபி பெறப்படும் என்றும், அங்கீகாரத்தின் இந்த கூடுதல் காரணி, எஸ்பிஐ அட்டை வைத்திருப்பவர்களை, அங்கீகரிக்கப்படாத ஏடிஎம் withdrawal-களிலிருந்து பாதுகாக்கிறது

என்பது குறிப்பிடத்தக்கது.

பயனர் மற்ற வங்கி ஏ

ஆனால் நீங்கள் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,எஸ்பிஐ கார்ட் வைத்திருக்கும் பயனர் மற்ற வங்கி ஏடிஎம்-களில் பணம் எடுத்தால், அந்த வித பரிவர்த்தனைகளுக்கு இந்த வசதி பொருந்தாது, ஏனெனில் எஸ்பிஐ-ன் படி இந்த செயல்பாடு தேசிய நிதி சுவிட்ச்-ல் (NFS) உருவாக்கப்படவில்லை. NFS, பலவித வங்கிகளின் நடைமுறைகளை ஒன்றாக்கி இயங்கக்கூடிய

நாட்டின் மிகப்பெரிய ATM நெட்வொர்க்காகும். பின்பு இது வங்கிகளுக்கு இடையிலான உள்நாட்டு ஏடிஎம் பரிவர்த்தனைகளில் 95சதவீதத்திற்கும்

அதிகமானவற்றை நிர்வகிக்கிறது.

டெபிட், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இனி புதிய விதிகள்? செப்.30, முதல் நடைமுறைக்கு வரும் RBI உத்தரவு

ஒடிபி முறையில் பணம் எடுப்பது எப்படி?

ஒடிபி முறையில் பணம் எடுப்பது எப்படி?

பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள், நீங்கள் விரும்பும் தொகையை உள்ளிட்டவுடன், ஏடிஎம் திரையில் ஒடிபி Window காண்பிக்கப்படும். பின்பு வாடிக்கையாளர் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஒடிபி-ஐ இதில் உள்ளிட்டு பரிவர்த்தனையை நிறைவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
SBI Introduces Mandatory OTP-based ATM Cash Withdrawals In India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X