SBI ATM- முக்கிய அறிவிப்பு: 8 டூ 8., இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க இது வேணும்!

|

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கூடுதலாக ஒரு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிவிப்பானது வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் ஆகும்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா லட்சக்கணக்கான வாடிக்கையாளற்களை கொண்ட வங்கியாகும். இதன் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பானதாகவும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக உணரும் வகைியல் இருக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு இருப்புத் தொகை கட்டுப்பாடுகள்

வாடிக்கையாளர்களுக்கு இருப்புத் தொகை கட்டுப்பாடுகள்

முன்னதாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்திய தங்களது வாடிக்கையாளர்களுக்கு இருப்புத் தொகை கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்தது. அது நகரங்களில் இருப்பவர்கள் ரூ.3000, நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.2000, கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 வைத்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்தது. அதற்கு குறைவாக வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

எம்சிஎல்ஆர் கட்டணம் உயர்வு

எம்சிஎல்ஆர் கட்டணம் உயர்வு

ஆனால் இது அதன் வாடிக்கையாளர்கள் 44 கோடிக்கும் மேல் உள்ள வாடிக்கையாளர்களை பாதிக்கும் என இந்த அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது. அதோடு எம்சிஎல்ஆர் கட்டணத்தையும் இந்த வங்கி குறைத்து அறிவித்தது அதன் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

எஸ்பிஐ வங்கி புது அறிவிப்பு

எஸ்பிஐ வங்கி புது அறிவிப்பு

இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது இந்த அறிவிப்பானது புதுக்கிப்பட்ட மொபைல் எண் மற்றும மெயில் ஐடியை வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குடன் இணைக்க வேண்டும் என்ற வகையில் இருக்கிறது.

வங்கிக் கணக்குகளில் தங்களது பரிவர்த்தனை

வங்கிக் கணக்குகளில் தங்களது பரிவர்த்தனை

இப்படி செய்வது என்பது வங்கிக் கணக்குகளில் தங்களது பரிவர்த்தனை குறித்து அறிவதற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் வங்கிகளில் இருந்து வேறுயாராவது கணக்கர்களின் அனுமதியின்றி பணம் எடுத்தால் தெரிந்துக் கொள்ளலாம்.

சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

இனி ஸ்டேட் பாங்க் இந்தியா வங்கி ஏடிஎம் பணம் எடுக்கும் முறையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இனி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் போது அனுமதிக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். இந்த ஓடிபி திட்டம் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் செயல்பாட்டில் இருக்கிறது.

ரூ.10,000-த்துக்கு மேல் பணம் எடுக்கும் போது மட்டுமே

ரூ.10,000-த்துக்கு மேல் பணம் எடுக்கும் போது மட்டுமே

இந்த ஓடிபி எண் ஆனது ரூ.10,000-த்துக்கு மேல் பணம் எடுக்கும் போது மட்டுமே அனுப்பபடும். ஓடிபி எண் முறையானது வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனையை பாதுகாக்கும் அம்சமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஓடிபி அனுப்பப்படும்

எஸ்பிஐ வங்கி டெபிட் கார்ட் வைத்திருப்பவர்கள் பிற வங்கி ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுக்கும் போது இந்த வழிமுறை பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ஓடிபி அனுப்பப்படும் மொபைல் எண்ணோடு செல்ல வேண்டும், அதேபோல் ஏடிஎம்களில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே ரூ.10,000-த்துக்கு மேல் பணம் எடுக்க முடியும்.

1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! அம்பானிக்கு தண்ணிகாட்டும் இளைஞர்களின் நிறுவனம்!1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! அம்பானிக்கு தண்ணிகாட்டும் இளைஞர்களின் நிறுவனம்!

கூடுதல் பாதுகாப்பு வசதி

கூடுதல் பாதுகாப்பு வசதி

ஏடிஎம்களுக்கு சென்றவுடன் வழக்கமான பரிவர்த்தனை செய்யவேண்டும், தங்களுக்கு தேவையான தொகையை பதிவு செய்த பிறகு ஓடிபி எண் பதிவிடும் படி கேட்கும், அதில் தங்களுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி எண்ணை பதிவு செய்த பிறகே பணம் எடுக்க முடியும். இந்த முறையானது வாடிக்கையாளர்களின் கூடுதல் பாதுகாப்பை வழங்கவே அறிவிக்கப்படுகிறது.

source: timesnownews.com

Best Mobiles in India

English summary
SBI ATM need OTP for cash withdrawal over Rs 10,000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X