SBI முக்கிய அறிவிப்பு: ஏடிஎம் பயன்பாட்டுக்கு இந்த 10 கொள்கை முக்கியம்!

|

SBI வங்கி தங்களது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்ள முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதில் 10 வழிமுறைகள் இடம்பெற்றுள்ளது.

மிகப் பெரிய பொதுத்துறை

மிகப் பெரிய பொதுத்துறை

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட மிகப் பெரிய பொதுத்துறை என்று கூறினால், அது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகும். இந்த வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஹெல்ப் லைன் உள்ளிட்ட பல வசதிகளை செய்திருக்கிறது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது சில பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்

பாதுகாப்பு அம்சம்

பாதுகாப்பு அம்சம் உயர உயர அதை தகர்ப்பதற்கான வழிமுறைகள் அதைவிட வேகமாக உயர்ந்து வருகிறது. ஏடிஎம் கார்ட் மோசடி, ஆன்லைன் பண மோசடி என மோசடி கும்பல் பல்வேறு வகைகளில் மோசடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்ட் விவரங்களை வாங்கி மோசடி

கார்ட் விவரங்களை வாங்கி மோசடி

வங்கியில் இருந்து பேசுவது போல் பேசி கார்ட் விவரங்களை வாங்கி மோசடி செய்வது, ஹேக்கிங் செயல் மூலம் பண மோசடி செய்வது என பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே வருகிறது.

வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

இதையடுத்து ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியா, புது மோசடி உள்ளிட்டவைகள் குறித்து வங்கி வாடிக்கையாளர்களை அடிக்கடி எச்சரிக்கிறது. டெபிட் கார்ட் மோசடிகளை தவிர்க்க தனியுரிமை பாதுகாப்புடன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளுமாறு தங்களது வங்கி வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ரீசார்ஜ் செய்யலயா., கவலை வேணாம்: ஏர்டெல் வழங்கும் இலவச 1 ஜிபி டேட்டா!ரீசார்ஜ் செய்யலயா., கவலை வேணாம்: ஏர்டெல் வழங்கும் இலவச 1 ஜிபி டேட்டா!

சிறந்த வழிமுறைகள்

சிறந்த வழிமுறைகள்

ஏடிஎம் பின் போன்றவற்றை பாதுகாத்து பரிவர்த்தனையை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கு சிறந்த வழிமுறைகளான உதவிக்குறிப்புகளை எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

எஸ்பிஐ ஏடிஎம் செயல்பாடு

எஸ்பிஐ ஏடிஎம் செயல்பாடு

எஸ்பிஐ ஏடிஎம் செயல்பாட்டில் கார்டுகளை பயன்படுத்தும்போது பாஸ்வேர்டை மறைக்க கையை பயன்படுத்தவும்.

ஏடிஎம் கார்டில் பின் நம்பரை எக்காரணம் கொண்டும் எழுதி வைக்க வேண்டாம்.

தங்கள் கடவுச்சொல், காரட் விவரங்களை எக்காரணம் கொண்டும் மற்றவர்களிடம் பகிர வேண்டாம்.

மின்னஞ்சல், எஸ்எம்எஸ்

மின்னஞ்சல், எஸ்எம்எஸ்

பிறருக்கு மின்னஞ்சல், எஸ்எம்எஸ் போன்றவற்றின் மூலம் கார்ட் விவரங்கள் புகைப்படங்கள், கடவுச்சொல் உள்ளிட்டவைகளை பகிர வேண்டாம்.

மேலும் கடவுச்சொல் தங்களது பிறந்தநாள் தேதியோ, தொலைபேசி எண்ணையோ பயன்படுத்தி உபயோகிக்க வேண்டாம்.

ரசீதை அப்புறப்படுத்த வேண்டாம்

அதோடு தங்களது பரிவர்த்தனை முடிந்த பிறகு எக்காரணம் கொண்டும் ரசீதை அப்புறப்படுத்த வேண்டாம்.

ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தும்போது கீபேட் டைப் செய்யும் போது சற்று கவனமாக கையாளுங்கள் (ஸ்கிம்மர் போன்ற ஏணைய நவீன கருவிகள் மோசடிக்கு பயன்படுத்தப்படுகிறது)

அதோடு தங்களது பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கு முன்பு கேமராக்கள் எங்கு இருப்பது என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்ள வழிமுறை

மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்ள வழிமுறை

கணக்கு பரிவர்த்தனைக்கு முன்பும் பின்பும் சைன்-அப், கேன்சல் விவரங்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்

இந்த வழிமுறைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
SBI Announced Some Tips to Keep Your Money Safe & Secured

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X