எஸ்பிஐ பயனர்களே- இந்த கார்ட் அப்ளை செய்தால் "ஸ்மார்ட்வாட்ச்" இலவசம்: உடனே வங்கிக்கு செல்லுங்கள்!

|

கிரெடிட் கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிரெடிட் கார்ட்டில் பொருள் வாங்கி அதற்கான பணத்தை பின் செலுத்துவதும் என்ற நடைமுறை வழக்கம். பணம் இல்லாத சமயத்தில் ஆபத்தாண்டவனாக கைக் கொடுப்பது இந்த கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டை தான். ஆனால் இந்த கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டை ஆனது அதன் பெயர் குறிப்பிடுவது போல் பலருக்கு விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. வருகிற நவீன காலத்தில் கிரெடிட் கார்டு தேவை அத்தியாவசியமாக மாறி இருக்கிறது. கிரெடிட் சலுகையாக பண்டிகை கால சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

புதிய கிரெடிட் கார்ட் அறிமுகம்

புதிய கிரெடிட் கார்ட் அறிமுகம்

இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான பாரத் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, புதிய கிரெடிட் கார்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்ஸ் எனும் புதிய கிரெடிட் கார்ட்டை அறிமுகப்படுத்துகிறது. இந்த சிறப்பு கிரெடிட் கார்ட் ஆனது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கிரெடிட் கார்ட் வெறும் ரூ.1499 என்ற வருடாந்திர சந்தாவுடன் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி பயனர்கள் மருத்துவப் பலன்கள், விடுமுறை சுற்றுலா மற்றும் உடல்நலக் கவரேஜ் பலன்களை வழங்குகிறது.

பல்ஸ் கிரெடிட் கார்ட்டின் முக்கிய சலுகை

பல்ஸ் கிரெடிட் கார்ட்டின் முக்கிய சலுகை

இந்த கிரெடிட் கார்ட் மூலம் மருத்துவம், சுற்றுலா, எரிபொருள் நிரப்ப உள்ளிட்ட தேவைகளுக்கு இந்த கார்ட் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பல்ஸ் கிரெடிட் கார்ட்டின் முக்கிய சலுகை குறித்து பார்க்கையில், நீங்கள் இந்த பல்ஸ் கிரெடிட் கார்ட்டை ரூ.2 லட்சமோ அல்லது அதற்கு அதிகமாகவோ பயன்படுத்தினால் உங்களுக்கான கிரெடிட் கார்ட் ஆண்டு சந்தா தொகை விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பரிசாக நாய்ஸ் கலர்ஃபிட் ஸ்மாரட் வாட்ச்

பரிசாக நாய்ஸ் கலர்ஃபிட் ஸ்மாரட் வாட்ச்

இந்த பல்ஸ் கிரெடிட் கார்ட் குறிப்பிட்ட சேவைக்கு பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற செலவுகளை குறைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் உடல் நலத் தேவையை மையமாகக் கொண்டு இந்த கிரெடிட் கார்ட் வெளியாகிறது. இந்த கிரெடிட் கார்ட்டின் ஆண்டு சந்தா விலையான ரூ.1499 செலுத்தி வாடிக்கையாளர்களாக மாறுபவர்களுக்கு ரூ.4999 மதிப்புள்ள நாய்ஸ் கலர்ஃபிட் ஸ்மாரட் வாட்ச் பரிசாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகரிக்கும் கிரெடிட் கார்ட் தேவை

அதிகரிக்கும் கிரெடிட் கார்ட் தேவை

கிரெடிட் கார்ட் தேவை ஒருபுறம் இருந்தாலும் ஸ்மார்ட் வாட்ச் தேவை என்பதும் காலப்போக்கில் அதிகரித்து வருகிறது. தங்களின் உடல்நலம், ஆரோக்கியம், பிபி, சுகர், இதய துடிப்பு உள்ளிட்டவைகளை தொடங்கி பல்வேறு கண்காணிப்புகளும் இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக ஸ்மார்ட்வாட்ச்சை வயது வரம்பின்றி அனைவரும் அணிந்து வருகின்றனர். பல்ஸ் கிரெடிட் கார்ட், ஆரோக்கியம் கண்காணிக்கும் ஸ்மார்ட்வாட்ச் என்பது பிரதான தேவையாக காலப்போக்கில் மாறும் என கூறப்படுகிறது.

பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை

பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வங்கி பல்வேறு பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்து வருகிறது. வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்களை குறிவைத்து பல்வேறு மோசடி செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக ஏடிஎம்-களில் பணம் எடுக்கத் தெரியாதவர்கள், முதியவர்களை குறிவைத்து இந்த மோசடி செயல்கள் நடந்து வருகிறது. இதை சரிசெய்வதற்கு வங்கிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மொபைல் எண் மூலம் ஓடிபி

மொபைல் எண் மூலம் ஓடிபி

முன்னதாக வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி அனுப்பப்படும் அது கட்டாயமாக இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் பாதுகப்பானது ஸ்டேட் பேங்க் கார்ட் வைத்திரப்பவர்கள் அங்கீகரிக்கப்படாது ஏடிஎம்களில் பணம் எடுப்பதில் இருந்து பாதுகாக்கும் வகையில் இருக்கிறது. அதேபோல் ஸ்டேட் பேங்க் கார்டு வைத்திருப்பவர் மற்றொரு வங்கியின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போதும் பணப் பரிமாற்றம் செய்யும் போது இந்த வசதி பொருந்தாது.

தனி வரி செலுத்த வேண்டும்

தனி வரி செலுத்த வேண்டும்

எஸ்பிஐ ஏடிஎம்களில் பத்தாயிரத்துக்கு மேல் பணம் எடுக்கும் போது வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி எண் அனுப்பப்படும். அதேபோல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனித்தனியே ஓடிபி எண் அனுப்பப்படும் அதை பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஎஸ் கிரெட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் ரூ.99 தனி வரி செலுத்த வேண்டியிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Best Mobiles in India

English summary
SBI Announced Pulse Credit Card For Special health Coverage Benefits: Bank offers free smartwatch to new users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X