Home
News

புதிய SBI விதிகள் ஜூலை 1 முதல் அமல்.. பேங்க் கஸ்டமர்கள் இது தெரியம இஷ்டத்துக்கு செலவு பண்ணிடாதீங்க!

எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவானது (State Bank of India), ஜூலை 1 ஆம் தேதி முதல் அதன் வாடிக்கையாளர்களுக்கு சில புதிய விதிகள் மற்றும் மாற்றங்களை அமலுக்கு கொண்டு வருகிறது. என்ன மாற்றங்கள்? யாருக்கெல்லாம் இது பொருந்தும்? இதோ விவரங்கள்:

எஸ்பிஐ வங்கியானது தேர்ந்தெடுக்கப்பட்ட போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கான (PhonePe SBI Credit Cards) ரிவார்டு பாயிண்ட் திட்டத்தில் (Reward point programme) மாற்றங்களை அறிவித்துள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த மாற்றங்கள் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

புதிய SBI விதிகள் ஜூலை 1 முதல் அமல்!

எஸ்பிஐ-யின் இந்த திருத்தம் போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டு பர்பிள் (PURPLE) மற்றும் போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டு செலக்ட் பிளாக் (SELECT BLACK) ஆகிய இரண்டு கார்டு வகைகளை வைத்திருப்பவர்களுக்கும் முக்கிய மாற்றங்கள் கொண்டுவருகிறது. ஏனெனில், ரிவார்டு பாயிண்ட்களை பெறுவதற்கான புதிய வரம்புகளும் (New limits), ரிவார்டு பாயிண்ட்களை பெற்று தராத பரிவர்த்தனைகளின் விரிவான பட்டியலும் (List of transactions) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

காப்பீடு, பயன்பாட்டு சேவைகள், கல்வி, நகைகள் வாங்குதல் மற்றும் சுங்க கட்டணம் செலுத்துதல் போன்ற வகைகளுக்கு தங்கள் கார்டுகளை அடிக்கடி பயன்படுத்தும் போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டு பர்பிள் மற்றும் செலக்ட் பிளாக் கார்டு வைத்திருப்பவர்கள், தாங்கள் பெறும் ரிவார்டு பாயிண்ட்களின் அளவில் மாற்றத்தை காண வாய்ப்புள்ளது.

போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டு பர்பிள் அட்டைதாரர்களுக்கான மாற்றங்கள்: எஸ்பிஐ கார்டு ஆனது, ஜூலை 1, 2026 முதல் போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டு பர்பிள் அட்டையில் பல்வேறு செலவின பிரிவுகள் மூலம் பெறப்படும் ரிவார்டு புள்ளிகளுக்கு மாதாந்திர வரம்புகளை அறிமுகப்படுத்தும்.

முன்னதாக, போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டு பர்பிள் அட்டைதாரர்கள் தகுதியான போன்பே செலவினங்களுக்கு மாதம் 1,000 ரிவார்டு புள்ளிகள் வரையிலும், தகுதியான ஆன்லைன் செலவினங்களுக்கு மாதம் 1,000 ரிவார்டு புள்ளிகள் வரையிலும் பெற முடிந்தது. புதிய கட்டமைப்பின் கீழ், தகுதியான போன்பே செலவினங்களுக்கான வரம்பு இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

காப்பீடு தொடர்பான செலவினங்களுக்கு மாதம் அதிகபட்சமாக 250 ரிவார்டு புள்ளிகளும், மற்ற தகுதியான போன்பே பரிவர்த்தனைகளுக்கு மாதம் அதிகபட்சமாக 750 ரிவார்டு புள்ளிகளும் பெறலாம். தகுதியான ஆன்லைன் செலவினங்களுக்கு, மாதாந்திர ரிவார்டு புள்ளிகளின் வரம்பு 1,000- இருந்து 750 ரிவார்டு புள்ளிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், செலவு இந்த வரம்புகளை மீறினாலும், பரிந்துரைக்கப்பட்ட மாதாந்திர உச்சவரம்பு வரை மட்டுமே வெகுமதி புள்ளிகள் சேரும்.

போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டு செலெக்ட் பிளாக் அட்டைதாரர்களுக்கான மாற்றங்கள்: முன்னர், போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டு செலெக்ட் பிளாக் அட்டைதாரர்கள், தகுதியான போன்பே செலவினங்களுக்கு மாதம் 2,000 ரிவார்டு புள்ளிகள் வரையிலும், தகுதியான ஆன்லைன் செலவினங்களுக்கு மாதம் 2,000 ரிவார்டு புள்ளிகள் வரையிலும் பெற முடிந்தது.

புதிய கட்டமைப்பின் கீழ், தகுதியான போன்பே செலவினங்களுக்கான உச்சவரம்பு இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது: காப்பீடு தொடர்பான செலவினங்களுக்கு மாதம் அதிகபட்சமாக 500 ரிவார்டு புள்ளிகளும், மற்ற தகுதியான போன்பே பரிவர்த்தனைகளுக்கு மாதம் அதிகபட்சமாக 1,500 ரிவார்டு புள்ளிகளும் பெறலாம். தகுதியான ஆன்லைன் செலவினங்களுக்கு, மாதாந்திர ரிவார்டு புள்ளிகளின் உச்சவரம்பு 2,000 இலிருந்து 1,000 ரிவார்டு புள்ளிகளாக குறைக்கப்பட்டுள்ளது

இதோடு போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டு செலக்ட் பிளாக் (PhonePe SBI Credit Card SELECT BLACK) வைத்திருப்பவர்களுக்காக, ரிவார்டு பாயிண்ட்ஸ் வழங்கப்படாத பரிவர்த்தனைகளின் பட்டியலை விரிவுபடுத்தி, எஸ்பிஐ கார்டு தனது ரிவார்டு பாயிண்ட்ஸ் திட்டத்தையும் (reward points programme) மாற்றியமைத்துள்ளது. போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டு செலெக்ட் பிளாக் கார்டுக்கான புதிய ரிவார்டு பாயிண்ட் விலக்குகள்: ஏற்கனவே உள்ள விலக்குகளுடன் கூடுதலாக, பின்வரும் வகைகளில் ரிவார்டு பாயிண்ட்கள் வழங்கப்படாது:

- சுங்கக் கட்டணம் மற்றும் இணைப்பு பால கட்டணங்கள்
- பரிசுகள் மற்றும் நினைவு பொருட்கள் வாங்குதல்
- நகைகள் வாங்குதல்
- கல்வி நிறுவனங்களுக்கு செய்யப்படும் கொடுப்பனவுகள்
- போன்பே ஆப்பிற்கு வெளியே செய்யப்படும் பயன்பாட்டு கட்டணங்கள்
- போன்பே ஆப்பிற்கு வெளியே செய்யப்படும் காப்பீட்டு கட்டணங்கள்
- போன்பே ஆப்பிற்கு வெளியே செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகள்

மற்ற நன்மைகள் மாற்றமின்றி உள்ளன: திருத்தப்பட்ட ரிவார்டு பாயிண்ட் வரம்புகள் மற்றும் விலக்குகளை தவிர, போன்பே எஸ்பிஐ கார்டு பர்பிள் மற்றும் போன்பே எஸ்பிஐ கார்டு செலெக்ட் பிளாக் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மற்ற அனைத்து கார்டு அம்சங்களும் மற்றும் ரிவார்டு பாயிண்ட் திரட்டும் வழிமுறைகளும் மாற்றமின்றி இருக்கும் என்று எஸ்பிஐ கார்டு தெளிவுபடுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
SBI Announced New changes For Its Credit Card Users Which Come to Effect from July 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X