SBI கணக்கு இருக்கா? உடனே இந்த 2 மொபைல் நம்பரை சேவ் பண்ணுங்க.. மினி ஸ்டேட்மென்ட்டை நொடியில் செக் பண்ணுங்க..
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank Of India) வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவையை எளிமையாக வழங்கும் முயற்ச்சியில் எஸ்பிஐ (SBI) பல புதிய மொபைல் சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. இதில் குறிப்பாக, SBI வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விபரங்களை குட்டி லிஸ்டாக காண்பிக்கும் மினி ஸ்டேட்மென்ட் (SBI mini statement) தகவலை YONO ஆப்ஸ் இல்லாமல் எப்படி மிஸ்டு கால் (missed call), SMS மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் அறிந்துகொள்ளலாம் என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்கப்போகிறோம்.
மினி ஸ்டேட்மென்ட் (Mini statement) என்பது உங்கள் வங்கி கணக்கில் நீங்கள் சமீபத்தில் மேற்கொண்ட பரிவர்தனைகளின் மொத்த தொகுப்பு தகவலாகும். இதை நீங்கள் உங்கள் விறல் நுனியில் 24 மணி நேரமும் கிடைக்கும்படி செய்ய SBI வங்கி பல புதிய வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது. டேட்டா அல்லது இன்டர்நெட் சேவை (check sbi mini statement without internet) இல்லாத நேரங்களில் கூட, SBI வங்கி வாடிக்கையாளர்கள் மினி ஸ்டேட்மென்ட் சேவையை அணுக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழி செய்துள்ளது.

SBI கணக்கு இருக்கா? அப்போ உடனே இந்த 2 மொபைல் நம்பரை சேவ் பண்ணுங்க:
பொதுவாக SBI வங்கி அதன் அதிகாரப்பூர்வ இன்டர்நெட் பேங்கிங் தளம் மற்றும் YONO மொபைல் ஆப்ஸ் வழியாக மினி ஸ்டேட்மென்ட் மற்றும் இதர வங்கி சேவைகளை அணுக அனுமதிக்கிறது. இதை இயக்க இன்டர்நெட் இணைப்பு இருப்பது மிக முக்கியமானது. இன்டர்நெட் சேவை இல்லாத நேரங்களில் SBI வாடிக்கையாளர்கள் வங்கி தகவல்களை அணுக இப்போது புதிய சேவைகளை வழங்க துவங்கியுள்ளது.
குறிப்பாக, மிஸ்டு கால், எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அறிந்துகொள்ள அனுமதிக்கிறது. சரி இப்போது எப்படி இந்த சேவைகளை பயன்படுத்தி, உங்கள் SBI கணக்கின் மினி ஸ்டேட்மென்ட் தகவலை தெரிந்துகொள்வதென்று பார்க்கலாம் வாங்க.
1. மிஸ்டு கால் மூலம் SBI மினி ஸ்டேட்மென்ட் தகவல்:
உங்கள் SBI கணக்குடன் (SBI account) இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து 9223866666 என்ற எண்ணிற்கு அழைப்பை மேற்கொள்ளுங்கள். இரண்டு ரிங் சென்றவுடன் அழைப்பு தானாக துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில் உங்கள் மொபைலிற்கு SMS மூலம் உங்கள் வங்கி கணக்கின் மினி ஸ்டேட்மென்ட் (SBI account mini statement) தகவல் அனுப்பப்படும்.
2. SMS மூலம் எப்படி SBI மினி ஸ்டேட்மென்ட் தகவலை அறிந்துகொள்வது?
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து MIS(space) Account Number என்று டைப் செய்து மேற்கூறிய அதே 9223866666 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும். சில நொடியில், உங்கள் கணக்கில் இருந்து மேற்கொள்ளப்பட்ட கடைசி 5 டிரான்ஸாக்ஷன் தகவல்கள் SMS மூலம் அனுப்பப்படும். உங்கள் மொபைல் திட்டத்தின் அடிப்படையில் SMS கட்டணம் வசூலிக்கப்படும். தினசரி 100 SMS நன்மை கொண்ட திட்டத்தின் கீழ் இயங்கும் எண்களுக்கு கட்டணம் இல்லை.
3. WhatsApp மூலம் SBI வங்கி மினி ஸ்டேட்மென்ட் தகவலை பெறுவது எப்படி?
இந்த சேவையை பயன்படுத்த முதலில் உங்கள் மொபைலில் 919022390229 என்ற SBI வங்கியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணெய் (SBI WhatsApp Number) நீங்கள் காண்டக்ட்டில் (contact) சேவ் செய்ய வேண்டும். பிறகு, வாட்ஸ்அப் சாட் பாக்ஸ் சென்று இந்த எண்ணிற்கு Mini Statement என்று மெசேஜ் அனுப்பவும். உடனே உங்களுடைய 4 இறுதி பரிவர்த்தனைகளின் (transaction details) தகவல்கள் காண்பிக்கப்படும்.
இந்த இரண்டு மொபைல் எண்களையும் உங்கள் போனில் உடனே சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது இல்லாவிட்டாலும், எப்போதாவது ஒரு அவசர தேவைக்கு இந்த எண்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்த செயல்முறை மட்டுமின்றி Yono ஆப்ஸ் மூலமாகவும் மினி ஸ்டேட்மென்ட் தகவலை அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








