SBI பயனர்கள் உடனே இதை செய்யுங்கள்.. இல்லாவிட்டால் வங்கி சேவையில் சிக்கல்.. இறுதி நாள் மார்ச் 31..

|

பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்களே இந்த தகவல் மிக முக்கியமானது, சமீபத்திய பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பின்படி, இந்த முக்கிய ஆவணங்களை வங்கி கணக்குடன் இணைக்காதவர்களுக்கு வாங்கி சேவையை அனுபவிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் ஆவணங்களை இணைப்பதற்கான இறுதி நாள் கெடுவையும் வங்கி தற்பொழுது வெளியிட்டுள்ளது. உங்கள் வங்கி கணக்குடன் எந்த ஆவணங்களை இணைக்க வேண்டும்? எப்படி இணைக்க வேண்டும் என்பது இங்கே வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் இறுதிக்குள் இந்த ஆவணங்களை SBI பயனர்கள் கட்டாயம் இணைக்க வேண்டுமா?

மார்ச் இறுதிக்குள் இந்த ஆவணங்களை SBI பயனர்கள் கட்டாயம் இணைக்க வேண்டுமா?

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது கணக்கு வைத்திருப்பவர்களை மார்ச் மாத இறுதிக்குள் தங்கள் ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், தடையற்ற வங்கிச் சேவையை அனுபவிப்பதில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று வங்கி மேலும் கூறியுள்ளது. "எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான சிரமத்தையும் தவிர்க்கவும், தடையற்ற வங்கி சேவையைத் தொடர்ந்து அனுபவிக்கவும் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்" என்று எஸ்பிஐ ட்வீட் செய்துள்ளது.

SBI பயனர்கள் இதைச் செய்யத் தவறினால் என்ன நடக்கும்?

SBI பயனர்கள் இதைச் செய்யத் தவறினால் என்ன நடக்கும்?

காலக்கெடுவிற்குள் ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண்கள் செல்லாததாகக் கருதப்படும் என்று கடன் வழங்குபவர் கூறியுள்ளது. அனைத்து SBI வங்கி பயனர்களும் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என்று ட்வீட் மேலும் கூறியுள்ளது. பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால், பான் செயலிழந்துவிடும். மேலும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கோள் காட்ட முடியாது என்பதனால், வங்கி பயனர்கள் இதைக் கவனிக்கத் தவற வேண்டாம் என்று வங்கி வலியுறுத்தியுள்ளது.

பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி?

பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி?

இதுவரை ஆதாருடன் பான் எண்களை இணைக்காத நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையைப் பின்பற்றி உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்துக்கொள்ளலாம். உங்கள் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி?
வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் இணையதளத்திற்குச் செல்லவும்.
இணைப்பு ஆதார் பிரிவில் கிளிக் செய்யவும்.

இந்த தகவலைச் சரியாக உள்ளிடவும்

இந்த தகவலைச் சரியாக உள்ளிடவும்

  • இப்போது உங்கள் பான் எண், ஆதார் எண் மற்றும் பெயரை நிரப்பவும்.
  • இணைப்பு ஆதார்' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • உங்கள் பான் ஆதாரை இணைப்பது நிறைவடையும்.
  • வருமான வரித்துறை உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றை ஆதார் விவரங்களுடன் சரிபார்த்து, அதன் பிறகு இணைக்கப்படும்.
  • தற்போதைய இறுதி காலக்கெடு இது தானா?

    தற்போதைய இறுதி காலக்கெடு இது தானா?

    கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய இறுதி காலக்கெடு வருகின்ற 31 மார்ச் 2022 ஆகும். காலக்கெடுவிற்குப் பிறகு ஆதாருடன் பான் இணைக்கப்பட்டால் பான் செயலிழந்துவிடும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 139AA இன் படி, பான் ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு நபரும், ஆதார் எண்ணைப் பெறத் தகுதியுள்ளவர்களும்,

    இதுவரை எவ்வளவு மக்கள் இதைச் சரியாகச் செய்துள்ளனர்?

    இதுவரை எவ்வளவு மக்கள் இதைச் சரியாகச் செய்துள்ளனர்?

    வருமான வரி அதிகாரிகளிடம் தனது ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், ஆதார் எண் அறிவிக்கப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட தேதி வரை பான் செயலிழக்கச் செய்யும். ஜனவரி 24 ஆம் தேதி நிலவரப்படி 43.34 கோடிக்கும் அதிகமான நிரந்தர கணக்கு எண்கள் (பான்கள்) ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

Best Mobiles in India

English summary
SBI Account Holders Alert Do This To Continue Enjoying Seamless Banking Service : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X