Just In
- 5 min ago
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்: அதிக நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது?
- 22 min ago
பிப்.,7 வரைக்கும் எந்த புது போனும், டிவியும் வாங்காதீங்க: ரகரகமா வரும் OnePlus போன், டிவி!
- 24 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 1 day ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
Don't Miss
- Automobiles
இந்தியர்களின் வாயை பிளக்க வைத்த டாடா நெக்ஸான் இவி... 1.38 லட்சம் கிமீ பயணித்து புதிய சாதனை!
- Finance
பெட்ரோல் விலை திடீர் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!
- News
துபாயில் திருக்குறள் ஒப்புவித்தல் திருவிழா.. உலக சாதனை நிகழ்ச்சியாக பதிவு
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Movies
காதலுக்கு வயசெல்லாம் கிடையாது...சின்ன பையனுடன் காதலா என்கிற கேள்விக்கு மாஸ்டர்நாயகியின் க்யூட் பதில்
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க எப்பவும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்தோடு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
இந்த 3 WhatsApp நம்பர் உங்கள் போனில் கட்டாயம் இருக்கனும்.! ஏன் தெரியுமா?
உங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட்டில் (WhatsApp contact) யாருடைய மொபைல் நம்பர் இருக்கிறதோ இல்லையோ.. கட்டாயம் இந்த மூன்று வாட்ஸ்அப் நம்பர்கள் உங்கள் போனில் எப்போதும் இருக்க வேண்டும். இந்த மூன்று வாட்ஸ்அப் நம்பர் (WhatsApp Number) கட்டாயம் உங்கள் போனில் இருந்தால், உங்கள் தினசரி வாழ்க்கை இன்னும் சுலபமாகிவிடும். சரி, அப்படி என்ன வாட்ஸ்அப் நம்பர் இது? இதனால் உங்களுக்கு என்ன நன்மை என்று பார்க்கலாம்.

குறைந்தது ஒரு நாளில் ஒரு முறையாவது உங்கள் வாட்ஸ்அப்-பை ஓபன் செய்கிறீர்களா?
உங்களுடைய தினசரி வாழ்க்கை ஓட்டத்திற்கு மத்தியில், ஒரு நாளுக்குக் குறைந்தது ஒரு முறையாவது உங்கள் போனில் உள்ள வாட்ஸ்அப் அம்சத்தை கிளிக் செய்து ஓபன் செய்யாமல் இருக்க மாட்டீர்கள். எப்படியும் குறைந்தது ஒரு முறையாவது உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஓபன் செய்துவிடுவீர்கள். அந்த அளவிற்கு வாட்ஸ்அப் நம்முடைய வாழ்வில் ஒன்றிவிட்டது.

மற்ற வாட்ஸ்அப் சேவை எண்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்.!
வாட்ஸ்அப் மூலம் இப்போது நீங்கள் மெசேஜ் அனுப்புவது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வது, உங்கள் காண்டாக்ட்டில் இருக்கும் நபர்களுக்குப் பணம் அனுப்புவது என்று பல விஷயங்களை மேற்கொள்ள முடியும். இருப்பினும், இன்னும் பல அம்சங்களை உங்களால் வாட்ஸ்அப் மூலம் அணுக முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் போனில் இருக்க வேண்டிய 3 முக்கியமான வாட்ஸ்அப் எண்கள்
தெரியாதென்றால், இப்போது தெரிந்துகொள்ளுங்கள். வாட்ஸ்அப் உடன் கிடைக்கும் சில அம்சங்கள் போக, மற்ற வாட்ஸ்அப் சேவை எண்கள் மூலம் நீங்கள் பலவிதமான அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி வாட்ஸ்அப் மூலம் சிறப்பான சேவையை வழங்கும் 3 முக்கியமான வாட்ஸ்அப் எண்களைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

உங்கள் முக்கிய ஆவணங்களை வாட்ஸ்அப் இல் பெறலாமா?
நீங்கள் எங்காவது வெளியூர் பயணம் செல்லும் போதோ அல்லது வீட்டை விட்டு வெளியில் திடீரென எங்காவது செல்லும் போதோ, உங்கள் ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், PAN கார்டு போன்ற ஆவணங்களை எப்போதும் கையோடு எடுத்துச் செல்ல மாட்டீர்கள். ஆனால், இதற்கான தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதனால் இந்த எண் உங்கள் போனில் இருப்பது சிறப்பானது.

வாட்ஸ்அப் இல் கூட டிரைவிங் லைசன்ஸை பெறலாமா?
குறிப்பாக, உங்கள் டிரைவிங் லைசென்ஸை எந்த சிக்னலில், எந்த காவல்துறை அதிகாரி சோதிப்பர் என்ற தெரியாத நிலையில், உங்கள் கையில் அசல் டிரைவிங் லைசன்ஸ் இல்லை என்றாலும் கூட, இந்த வாட்ஸ்அப் நம்பர் உங்களிடம் இருந்தால் போதும், சில நொடியில், ஒரு சில மெசேஜ்களில் உங்கள் டிஜி-டிரைவிங் லைசென்ஸை உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கிலே பெற்றுவிடலாம்.

இந்த முதல் முக்கியமான எண்ணை உடனே சேவ் செய்யுங்கள்.!
இந்த சேவையை பயன்படுத்த உங்கள் போனில் நீங்கள் " +91 9013151515 " என்ற எண்ணை சேவ் செய்துகொள்ளுங்கள். உங்கள் வாட்ஸ்அப் சென்று 'digilocker' என்று தேடி, அதில் 'Hi' என்று மெசேஜ் டைப் செய்து முன்பதிவு விபரங்களை நிறைவேற்றிய பின், உங்களுக்குத் தேவையான ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு போன்ற ஆவணங்களை டவுன்லோட் செய்ய விருப்பங்கள் காண்பிக்கப்பட்டும்.

இப்படி வாட்ஸ்அப் இல் டிரைவிங் லைசென்ஸை காட்டினால் செல்லுபடியாகுமா?
இதிலிருந்து, உங்களுக்குத் தேவையான ஆவணங்களை டவுன்லோட் செய்து எளிமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். முன்பதிவு முதல் முறை மட்டுமே தேவைப்படும். இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாட்ஸ்அப் எண் சேவை என்பதனால், உங்கள் டிரைவிங் லைஸென்ஸை காவல் அதிகாரி ஏற்றுக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, வாருங்கள் அடுத்த முக்கியமான வாட்ஸ்அப் எண்ணிற்குச் செல்லலாம்.

உங்கள் வாட்ஸ்அப் இல் இருக்க வேண்டிய 2 ஆம் முக்கிய எண்.!
இரண்டாவதாக, உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்க வேண்டிய முக்கியமான வாட்ஸ்அப் எண், இந்த " +91 9881193322 " என்ற எண் தான். இந்த எண் உங்களுக்கு முழுமையான IRCTC சேவைகளை வாட்ஸ்அப் மூலமாக வழங்குகிறது. உங்கள் பதிவு செய்யப்பட்ட PNR நம்பரை டைப் செய்தால், உங்கள் இருக்கை விபரம் முதல் - உங்கள் ரயில் வரும் நேரம், தாமத நேரம் என்று அணைத்து விபரங்களும் காண்பிக்கப்படும்.

உங்கள் போனில் இருக்க வேண்டிய 3வது முக்கியமான வாட்ஸ்அப் எண்.!
இறுதியாக உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கியமான வாட்ஸ்அப் நம்பர் இது தான். உங்கள் போனில் " +91 7977079770 " என்ற இந்த எண்ணை சேவ் செய்துகொள்ளுங்கள். இந்த வாட்ஸ்அப் சேவை எண் உங்களுக்கு JioMart சேவையை வாட்ஸ்அப் மூலம் அணுக அனுமதிக்கிறது. இந்த வாட்ஸ்அப் எண் காண்டாக்ட்டை கிளிக் செய்து மெசேஜ் டைப் செய்தால், ஷாப்பிங் விருப்பம் காண்பிக்கப்படும்.

உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்தையும் வாட்ஸ்அப் இல் இருந்து வாங்கலாமா?
இதிலிருந்து, உங்களுக்குத் தேவையான வீடு உபயோக பொருள் மற்றும் தினசரி காய்கறிகள், பலசரக்கு பொருட்களை வாட்ஸ்அப் மூலமாகவே நீங்கள் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். இப்போது வாட்ஸ்அப் இல் வாட்ஸ்அப் பேமெண்ட் அம்சமும் இருப்பதனால், உங்கள் ஆர்டருக்கான கட்டணத்தை வாட்ஸ்அப் இல் இருந்தபடியே செய்துவிடலாம்.

2500 நகரங்களுக்கு மேல் செயல்பாட்டில் உள்ள JioMart சேவை.!
JioMart இப்போது 2500 நகரங்களுக்கு மேல் செயல்பாட்டில் உள்ளதினால், உங்களுக்கு இந்த வாட்ஸ்அப் நம்பர் மிகவும் பயனுள்ளதாய் அமையும்.
உண்மையைச் சொல்லப் போனால், Swiggy மற்றும் Zomato-வை விட அதிக நகரங்களில் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாட்ஸ்அப் சேவை மூலம் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் உங்களுக்கு 1 நாளில் வீடு தேடி டெலிவரி செய்யப்படும்.
இந்த பயனுள்ள 3 வாட்ஸ்அப் எண்களை எப்போதும் உங்கள் போனில் வைத்துக்கொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470