அடேங்கப்பா.. சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லாவுக்கு இவ்வளவு சம்பளமா? இதோ முழு விவரம்..
கூகுள் (Google), மைக்ரோசாஃப்ட் (Microsoft) போன்ற பெரிய பெரிய நிறுவனங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தான் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் உள்ளனர். குறிப்பாக இதுபோன்ற பெரிய நிறுவனங்களில் இருக்கும் இந்தியர்கள் தான் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்குக் கொண்டுவரக் காரணங்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா (Satya Nadella) சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் US செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (SEC) வெளியிட்ட தகவலின்படி, சத்யா நாதெல்லா இந்த ஆண்டு 79.106 மில்லியன் அமெரிக்க டாலர் ஊதியம் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இது இந்திய மதிப்புக்கு சுமார் 665.15 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தலைமை நிர்வாக அதிகாரிகள் பொறுப்பில் இருக்கும் இன்னும் சில இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் சம்பளம் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
கூகுள்-சுந்தர் பிச்சை: நவீன தொழில்நுட்ப உலகில் புதிய சாதனங்கள் மற்றும் புதிய அம்சங்களைக் கொண்டு வருகிறது கூகுள் நிறுவனம். தற்போது கூகுள் நிறுவனத்தின் சிஇஒ-வாக இருக்கிறார் தமிழரான சுந்தர் பிச்சை (Sundar Pichai). குறிப்பாக சுந்தர் பிச்சை தற்போது ரூ.1,846 என்ற அதிகபட்ச ஊதியம் பெற்று வருகிறார். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் சத்யா நாதெல்லாவை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குகிறார் சுந்தர் பிச்சை.
அடோப்-சாந்தனு நாராயண்: மிகவும் பிரபலமான அடோப் நிறுவனத்தின் சிஇஒ தான் சாந்தனு நாராயண். குறிப்பாக இவர் ஆப்பிள் மற்றும் சிலிக்கான கிராப்பிக்ஸ் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளர். மேலும் சாந்தனு நாராயண் ஆண்டுக்கு ரூ.300 கோடி சம்பளம் பெறுகிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1998-ஆம் ஆண்டில் அடோப் நிறுவனத்தில் இவர் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்ரான்-சஞ்சய் மெஹ்ரோத்ரா: SanDisk நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர் தான் இந்த சஞ்சய் மெஹ்ரோத்ரா. குறிப்பாக இவர் தற்போது மைக்ரான் தொழில்நுட்பத்தின் (Micron Technology) தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். அதேபோல் இவர் ஆண்டுக்கு ரூ.206 கோடி சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎம்-அரவிந்த் கிருஷ்ணா: ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார் அரவிந்த் கிருஷ்ணா. குறிப்பாக இவர் கடந்த 1990-ம் ஆண்டு அந்த நிறுவனத்தில் சேர்ந்தார் என்றும், பல தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பதவிகளை விகித்த பிறகு 2020-ம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனத்தின் சிஇஒ-வாக ஆனார். தற்போது ரூ.165 கோடி சம்பளம் வாங்குகிறார் அரவிந்த் கிருஷ்ணா.

அதேபோல் சமீபத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வதற்கான தகுதி குறித்தும் CEO சுந்தர் பிச்சை பேசியுள்ளார். அதாவது கூகுள் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் மென்பொறியளர்களை எதிர்பார்க்கிறது என்றும், கூகுள் நிறுவனத்தின் பொறியாளர் குழுவில் சேர விருப்பம் உள்ளவர்கள் கொடுக்கப்படும் புதிய சாவல்களை ஏற்றுக் கொண்டு அதில் பாடம் படித்து முன்னேறுபவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
குறிப்பாக ஆரம்பக் கட்ட தொழில்நுட்ப பணிகளுக்குப் போட்டிகள் கடுமையாக இருக்கிறது, எனவே அந்தப்பணிகளுக்குச் சேர விரும்பும் நபர்கள், தங்களை வேறுபடுத்திக் காட்டுபவர்களாக இருக்க வேண்டும் என்று சுந்தர் பிச்சை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








