பூமியை நெருங்கும் சனிக்கோள்: வெறும் கண்களால் வானத்தை பார்த்தாலே தெரியும்- ஏதும் ஆபத்து இருக்கா?

|

ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை பூமியும் சனியும் ஒருவருக்கொருவர் நெருங்கி வருகிறார்கள். இரண்டு கிரகமும் அதன் சுற்றுப்பாதையில் சுழலும் 1 வருடம் மற்றும் 13 நாட்களில் ஒருவருக்கொருவர் நெருங்கி வருகிறது. இதற்கு முன்பாக ஜூலை 20, 2020 அன்று நெருங்கி வந்தன. அதேபோல் இந்த நிகழ்வு இதற்கு அடுத்ததாக ஆகஸ்ட் 14 2022 அன்று மீண்டும் வரும் என தெரிவிக்கப்பட்டது.

தெளிவான மற்றும் பிரகாசமான பார்வை

தெளிவான மற்றும் பிரகாசமான பார்வை

உலகின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் தெளிவான மற்றும் பிரகாசமான பார்வையை பெறுவார்கள் என கூறப்படுகிறது. காரணம், அது அவர்களுக்கு இரவு நேரமாக இருக்கும் என்பதுதான். சூரியன் மறைந்தபிறகு வீனஸ் அடிவானத்திற்கு கீழ் மூழ்கியவுடன் வியாழன் வானத்தில் பிரகாசமான பொருளாக இருக்கும் என எர்த்ஸ்கை தெரிவித்துள்ளது.

சனி கிரகத்தை வெறும் கண்களால் காண முடியும்

சனி கிரகத்தை வெறும் கண்களால் காண முடியும்

பூமி சூரியனைச் சுற்றி வர 365 நாட்கள் ஆகும். அப்போது சனி கிரகத்தை வெறும் கண்களால் காண முடியும். ஆகஸ்ட் மாதம் முழுவதும் இரவு நேரங்களில் பார்க்கலாம். அதேபோல் தொலைநோக்கிப் பயன்படுத்தியும் இதை பார்க்க முடியும். ரிங் கிரகமான சனி மற்றும் பூமி இன்று காலை 11:30 மணிக்கு எதிரெதிரே இருக்கும்.

அனைத்து பகுதிகளில் இருந்தும் பார்க்கலாம்

அனைத்து பகுதிகளில் இருந்தும் பார்க்கலாம்

இந்த நிகழ்வு இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பார்க்கலாம். சனி, பூமிக்கு ஒப்பீட்டளவில் நெருக்கமாகவும் பிரகாசமாகவும் உள்ளது. இந்த கோள்களைவிட பூமி வேகமாகச் சுழலும் போது சூரிய மண்டலத்தில் தொலைவில் அமைந்துள்ள கோள்களுடன் பூமியுடன் ஒரு எதிர்ப்பு ஏற்படுகிறது.

சனிக்கோளை நன்றாக பார்க்கலாம்

சனிக்கோளை நன்றாக பார்க்கலாம்

சூரியக் குடும்பத்தில் ஒன்றாக இருக்கிறது சனிக்கோள். இந்த கோளானது பூமிக்கு அருகில் வர இருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இந்த நிகழ்வில் சனிக்கோளை நன்றாக பார்க்க முடிகிறது. இந்த கோளானது ஒளிரும் வகையில் இருக்கிறது. சனிக்கோளை பொதுமக்கள் பைனாக்குலர் மூலம் எங்கிருந்தும் பார்க்கலாம். அதுமட்டுமின்றி தொலைநோக்கியை பயன்படுத்தும் போது வளையத்துக்கும் கோளுக்கும் இடையே உள்ள இடைவெளியையும் பார்க்க முடியும் என கூறப்படுகிறது.

சனிக்கோளானது விண்மீன் போல் ஒளிரும்

சனிக்கோளானது விண்மீன் போல் ஒளிரும்

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இந்த நிகழ்வை எந்த சாதனமும் இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கலாம். அப்படி பார்க்கும் பட்சத்தில் சனிக்கோளானது விண்மீன் போல் தெரியும். மின்மினுக்காமல் தொடர்ந்து ஒளிர்வதை வைத்து இந்த சனிக்கோளை உறுதி செய்யலாம் என கூறப்படுகிறது.

வீனஸ் (வெள்ளி), மார்ஸ் (செவ்வாய்) மற்றும் மூன் (சந்திரன்)

வீனஸ் (வெள்ளி), மார்ஸ் (செவ்வாய்) மற்றும் மூன் (சந்திரன்)

அதேபோல் இந்தாண்டு ஜூலை மாதம் வீனஸ் (வெள்ளி), மார்ஸ் (செவ்வாய்) மற்றும் மூன் (சந்திரன்) ஆகிய மூன்றும் இரவு நேரங்களில் வானத்தில் மிக அருகில் ஒரே நேர்கோட்டில் அமைந்து காட்சியளித்தது. இந்த திகைப்பூட்டும் காட்சியை நீங்கள் வெறும் கண்களால் பார்க்க முடிந்தது. ஆண்டு தோறும் சூரிய கிரகண நிகழ்வுகளும், சந்திரன் சார்த்த பிங்க் மூன், ரெட் மூன் போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துகொண்டே தான் இருக்கின்றன, அப்படி வானில் ஏராளமான அதிசயங்கள் நமது கண்களுக்குத் தென்படாமல் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இதில் சில நிகழ்வுகளை மட்டும் நம்மால் வெறும் கண்களால் பார்த்து ரசிக்க முடியும். அப்படியான ஒரு திகைப்பூட்டும் நிகழ்வு ரசிக்கப் பட்டது.

செவ்வாய் கோளும் வெள்ளி கோளும் ஒன்றை ஒன்று நெருங்கியது

செவ்வாய் கோளும் வெள்ளி கோளும் ஒன்றை ஒன்று நெருங்கியது

செவ்வாய் கோளும் வெள்ளி கோளும் ஒன்றை ஒன்று நெருங்கி சந்திரனுக்குக் கைகுலுக்குவது போலக் காட்சி அளிக்கும் இந்த நிகழ்வு வெறும் கண்களால் காண முடிந்தது. அரிய வானியல் நிகழ்வை இன்று நீங்கள் மேற்கு வானில் பார்வையிட முடிந்தது. இந்த அற்புதக் காட்சியை மேகங்களின் இடையூறு இல்லாத இடங்களில் மக்கள் கண்டுகளிக்கலாம் என்று விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.

File Images

Best Mobiles in India

English summary
Saturn and Earth will be Closest in Eachother: Saturn Brightly Glow in Sky

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X