இம்முறை செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டிக்கொடுக்கப்போவது..!?
வழக்கமாக உலக நாடுகள் ரகசியமாக நிகழ்த்தும் திட்ட பணிகள் உளவு பார்க்கும் செயற்கைகோள்கள் மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அம்பலப் படுத்தப்படும். இம்முறை மிக வித்தியாசமாக செயற்கைகோள் உதவியுடன் எடுக்கப்படும் புகைப்படங்கள் வறுமையை கணிக்க உதவ இருக்கிறது.
அதாவது செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இணைக்கப்படும் செயற்கைக்கோள் படங்களை வைத்து உலகம் முழுவதும் உள்ள வறுமை நிறைந்த பகுதிகளை கணிக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

முயற்சி :
வளரும் நாடுகளில் உள்ளூர் வருமானம் மீதான சரியான தரவு இல்லாத காரணத்தினால் வறுமை சார்ந்த பிரச்சினையை சமாளிக்கும் முயற்சிகளில் நடக்கும் ஆய்வுகள் பெரும் தடைகளை சந்திக்கின்றன.

வறிய பகுதி :
அதனை தொடர்ந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று ஐந்து ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெற்ற செயற்கைக்கோள் மற்றும் ஆய்வு தரவுகளில் இருந்து வறிய பகுதிகளை கண்டறிய கணினி பயிற்சி அளிக்கப்பெற்றனர்.

துல்லியமான நடவடிக்கைகள் :
இதுபோன்ற சர்வேக்கள் சில நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகளில் விலையுயர்ந்த இடைக்கிடை கொண்டவைகள் உடன் சில நேரங்களில் ஆயுத மோதலை கூட தூண்டக் கூடியவைகள் எனவே வளரும் நாடுகளில் வீட்டு நுகர்வு மற்றும் வருமானம் சார்ந்த துல்லியமான நடவடிக்கைகள் ஆய்விற்கு தேவைப்படுகிறது.

யோசனை :
இம்முறை கையாளப்படும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் வறுமை மேப்பிங் செய்யப்படும் யோசனை முற்றிலும் புதிய யோசனையாகும்.

செல்வத்தை கணிக்க :
சமீபத்திய ஆய்வுகளின்படி இரவு விளக்குகள் ஒரு குறிப்பிட்ட பகுதியின் செல்வத்தை கணிக்க பயன்படுத்த முடியும் என்று அந்த இடத்தை சார்ந்த தரவு காட்டியுள்ளன.

பகலிலும் :
மின்விளக்குகள் மட்டுமே முழுமையான தரவுகளை கொடுத்து விடாது என்பதால் இரவில் எடுக்கப்படும் செயற்கைகோள் புகைப்படங்கள் மட்டுமின்றி பகலிலும் செயற்கைகோள் தரவுகள் சேகரிக்கப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

முடிவு :
பகல் படங்களை வைத்து சாலைகள், உலோக கூரைகளை ஆராய்ந்து வளரும் நாடுகளின் பொருளாதார நிலை வேறுபாட்டை புரிந்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனா :
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெற்கு சீன கடற்கரையில் உள்ள ஸ்ப்ரட்லீ தீவை சீனா எப்படியெல்லாம் ஆக்கிரமித்தது என்பதை காட்டிக்கொடுத்த, சீனாவின் முகமூடியை கிழித்த செயற்கைகோள் புகைப்படங்களை காண இங்கே கிளிக் செய்யவும்..!

மேலும் படிக்க :
அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளின் கட்டுப்பாட்டில் பெர்முடா முக்கோணம்??
ரஷ்யாவின் ஐஎஸ்ஐஎஸ் : மாஃபியக்கள் வெளியிட்ட பகீர் தகவல்கள்.!!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications