வடகொரியாவை 'காட்டிக்கொடுத்த' செயற்கைகோள் புகைப்படம்..!
"மேலே ஒருவன் இருக்கிறான், அவன் நம் அனைவரையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறான்" என்பது உண்மைதான். ஆம், மேலே ஒருவன் இருக்கிறான் தான் - அது செயற்கைகோள்..!
அப்படியான, கண்காணிப்பு செயற்கைகோள் ஒன்று சமீபத்தில் எடுத்த புகைப்படங்களில் இருந்து வட கொரிய நாட்டின் 'ரகசிய' வேலை ஒன்றை அம்பலமாக்கி உள்ளது.

சோதனை :
2006, 2009 மற்றும் 2013-ஆம் ஆண்டு என வடகொரியா இதுவரை மொத்தம் 3 அணு ஆயுத சோதனையை நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பூங்யே-ரி :
அந்த 3 சோதனையும் வடகொரியாவின் வடகிழக்கில் உள்ள பூங்யே-ரி (Punggye-ri) என்ற பகுதியில் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய சுரங்கம் :
சமீபத்தில் வெளியாகி உள்ள செயற்கைகோள் புகைப்படத்தில் மூலம் பூங்யே-ரி பகுதியில் புதிய கட்டுமானப்பணிகளும் மற்றும் புதிய சுரங்க பாதையும் அமைக்கப்பட்டுள்ளது அம்பலாமாகி உள்ளது.

உறுதி :
பூங்யே-ரி பகுதியில் கூடுதலான வெடிப்புகளை நடத்த ஏதுவாக புதிய சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

அமெரிக்க தின்க் டேன்க் :
மேலும் இந்த செயற்கைகோள் புகைப்படமானது கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி எடுக்கப்பட்டது என்பதும், இதை அம்பலப்படுத்தியது அமெரிக்க தின்க் டேன்க் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செயற்கைகோள் புகைப்படங்கள் சார்ந்த செய்திகளுக்கு :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
புகைப்படங்கள் : ஏபி, கூகுள் எர்த், கூகுள்.


Click it and Unblock the Notifications