சாட்டிலைட் கனெக்‌ஷன் ஸ்மார்ட்போன்- Apple க்கு பாடம் சொல்லும் Huawei!

|

Huawei இன் புதிய ஃப்ளாக்ஷிப் போன் மேட் 50 தொடரின் கீழ் செப்டம்பர் 6 ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 செப்டம்பர் 7 ஆம் தேதி (நாளை மறுநாள்) வெளியாக இருக்கிறது. ஐபோன் 14 அறிமுகத்திற்கு ஒரு நாள் முன்பாக Huawei மேட் 50 சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்த இடத்தில் தான் டுவிஸ்ட் ஒன்று இருக்கிறது.

செயற்கைக்கோள் நுட்ப ஆதரவு

செயற்கைக்கோள் நுட்ப ஆதரவு

Huawei நுகர்வோர் வணிக தலைமை நிர்வாக அதிகாரி Yu Chengdong வீடியோ ஒன்றில், ஆப்பிள், சாம்சங் போன்ற போட்டியாளர்களை எதிர்கொள்ள நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை வெளியிடப்போவதாக உறுதிப்படுத்தினார்.

எனவே நாளை அறிமுகமாகும் Huawei மேட் 50 சீரிஸ் ஸ்மார்ட்போனில் செயற்கைக்கோள் நுட்பம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 14 இல் செயற்கைக்கோள் நுட்பம்

ஐபோன் 14 இல் செயற்கைக்கோள் நுட்பம்

அதேசமயத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி ஆப்பிள் அறிமுகம் செய்வதாக கூறப்படும் ஐபோன் 14 இலும் செயற்கைக்கோள் நுட்பம் இடம்பெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

செயற்கைக்கோள் தகவல்தொடர்பு வழிமுறைகள்

செயற்கைக்கோள் தகவல்தொடர்பு வழிமுறைகள்

ஹூவாய் மேட் 50 சீரிஸ் இல் செயற்கைக்கோள் நுட்பம் இடம்பெறும் என்பதற்கு என்ன சான்று என்ற கேள்வி வரலாம்.

சமீபத்தில் "செயற்கைக்கோள் தகவல்தொடர்பு வழிமுறைகள் மற்றும் சாதனங்கள்" என்ற தலைப்பில் Huawei காப்புரிமை பெற்றுள்ளதாக பெய்ஜிங்கில் வெளியிடப்பட்ட Pandaily தெரிவித்துள்ளது.

இதை உறுதி செய்யும் விதமாக Huawei நுகர்வோர் வணிக தலைமை நிர்வாக அதிகாரி செயற்கைக்கோள் ஸ்மார்ட்போன் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தகவல் தொடர்புத் திறன்

தகவல் தொடர்புத் திறன்

ஸ்மார்ட்போனின் ஆற்றல் நுகர்வை குறைக்கும் அதே சமயத்தில், அதன் தகவல் தொடர்புத் திறன்களின் செயல்திறனை மேம்படுத்த நிறுவனம் செயற்கைக்கோள் நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது.

ஸ்மார்ட்போனில் செயற்கைக்கோள் நுட்பங்கள் அறிமுகம் செய்யும் அதேவேளையில் அதற்கான ஆதரவுகளை வழங்க ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்ட்ராய்டு 14 செயற்கைக்கோள் இணைப்பு

ஆண்ட்ராய்டு 14 செயற்கைக்கோள் இணைப்பு

இதை உறுதி செய்யும் விதமாக கூகுளின் தளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் மூத்த துணைத் தலைவர் ஹிரோஷி லாக்ஹெய்மர், 'செயற்கைக்கோள்களுக்காக வடிவமைக்கிறார்கள்' என்ற வாசகத்தை குறிப்பிட்டார்.

அதாவது ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆனது செயற்கைக்கோள் நுட்பத்துக்கான மேம்படுத்தலை பெறும் என்பதை சூசகமாக உறுதிப்படுத்தினார்.

இதன்மூலம் ஆண்ட்ராய்டு 14 செயற்கைக்கோள் இணைப்பை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் வேறுபட்டதாக இருக்கும் செயற்கைக்கோள் இணைப்பு

மிகவும் வேறுபட்டதாக இருக்கும் செயற்கைக்கோள் இணைப்பு

செயற்கைக்கோள் இணைப்பு என்பது செல்லுலார் இணைப்பில் இருந்து மிகவும் வேறுபட்டதாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஐபோன் 14 செயற்கைக்கோள் இணைப்பை கொண்டு வரும் என்று தகவல் வெளியாகும் நேரத்தில் நாளை ஹூவாய் நிறுவனமும் செயற்கைக்கோள் இணைப்பை அறிவிக்கும்ம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்கைக்கோள் மூலமாக தகவலை பரிமாறலாம்

செல்லுலார் சிக்னல்கள் இல்லாத போது செயற்கைக்கோள் மூலமாக தகவலை பரிமாற வழிவகை செய்ய வேண்டும் என ஆப்பிள் மற்றும் ஹூவாய் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான நோக்கங்களை கொண்டிருக்கிறது என்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

இது அனைத்தும் வெளியான தகவல்கள் மட்டுமே, அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு பிறகே விவரங்கள் முழுமையாக தெரியவரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேட் 50 சீரிஸ் விவரங்கள்

மேட் 50 சீரிஸ் விவரங்கள்

ஹூவாய் அறிமுகம் செய்யும் மேட் 50 சீரிஸ் இல் மேட் 50இ, மேட் 50, மேட் 50 ப்ரோ மற்றும் மேட் 50 ஆர் எஸ் என்ற நான்கு மாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 6 ஆம் தேதி மேட் 50 அறிமுகமாக இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு மாடல் மட்டும் ஸ்னாப்டிராகன் 778 SoC உடன் வெளியாகும் எனவும் பிற மூன்று மாடல்கள் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 4ஜி செயலியை பயன்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Satellite Connectivity: Huawei Might announce 1 day before Apple

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X