எது! வெறும் ரூ.2,499 விலையில் குட்டி Fridge வாங்கலாமா? சம்மர் சலுகையில் ஒரு புது டிவைஸ்!
வெயில் காலம் வந்துவிட்டால், மக்களின் நிலைமை மோசமாகிவிடுகிறது. குளிர் சாதன பேட்டி, ஏசி, ஏர் கூலர், என்று குளிர்ச்சியை வழங்கும் சாதனங்களை தேடி-தேடி வாங்க துவங்கிவிடுகின்றனர். பட்ஜெட் இல்லாதவர்கள், அவர்களுக்கான கம்மி விலை சாதனங்களை வாங்கி வெய்யிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கிறார்கள்.
அந்த வரிசையில், பட்ஜெட் என்று கூட பாராமல், மலிவு விலையில் ஒரு குட்டி பிரிட்ஜ் சாதனம் இப்போது இந்தியாவில் வாங்கி கிடைக்கிறது. இது ஒரு போர்ட்டபிள் ரெஃப்ரெஜிரேட்டர் சாதனமாகும். நீங்கள் அடிக்கடி சாலைப் பயணங்களை செய்யும் நபர் என்றாலோ அல்லது உங்கள் காரில் நீண்ட நேரம் செலவழிக்கும் நபர் என்றாலோ அல்லது அடிக்கடி வெயிலில் சுற்றி திரியும் நபர் என்றாலோ கட்டாயம் உங்களிடம் இந்த குட்டி பிரிட்ஜ் இருக்க வேண்டும்.

இப்படி ஒரு குட்டியான போர்ட்டபிள் குளிர்சாதனப் பெட்டியை வைத்திருப்பது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். குறிப்பாக, இந்த குட்டி பிரிட்ஜ் சாதனம் உங்கள் காருக்கு கச்சிதமான குளிர்சாதனப்பெட்டியாக செயல்படுகிறது. தேவைப்பட்டால் இதை வீட்டிலும் வைத்து நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். Sarge 7.5L என்ற இந்த குட்டி பிரிட்ஜ் மாடல், வெயில் காலத்தில் அனைவருக்கும் தேவையான ஒரு பொருளாக உள்ளது.
இந்த Sarge Mini Car Refrigerator மாடலை கண்டுகொள்ளாமல் தாண்டி சென்றுவிடாதீர்கள். இந்த சிறிய வடிவ பிரிட்ஜ் சாதனத்தை நீங்கள் காரணி காரின் டிரங்க் அல்லது பின் இருக்கையில் வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். கோடை காலத்தில், சாலைப் பயணங்களை மிகவும் வசதியாக மாற்றும் வகையில், இப்போது இந்த Sarge Mini Car Refrigerator சாதனத்தின் மீது அமேசான் 58% தள்ளுபடியை வழங்குகிறது.
சார்ஜ் 7.5L மினி கார் குளிர்சாதன பெட்டி உங்கள் உணவு மற்றும் பானங்களை -3°C முதல் 60°C வரையிலான வெப்பநிலையில் கூலாக வைக்க அனுமதிக்கிறது. இது யூசர் பிரெண்ட்லி அம்சத்துடன் வருகிறது. இதில் ஏசி மற்றும் டிசி பவர் கார்டுகளும் உள்ளது. இது அதிகளவு சக்தியை உறிஞ்சாது. இது எவ்வளவு சிறிய அளவு ஆற்றலைப் பயன்படுத்துகிறது என்று உங்களால் உணர முடியாத அளவில் மிகவும் கம்மியான சக்தியை இது எடுத்துக்கொள்கிறது.

அமேசானிலிருந்து சார்ஜ் 7.5 எல் மினி கார் குளிர்சாதனப்பெட்டி போர்ட்டபிள் தெர்மோஎலக்ட்ரிக் கார் காம்பாக்ட் ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரை வாங்குவதன் மூலம் நீங்கள் இனி எங்கு பயணித்தாலும் சாப்பிடவும் குடிக்கவும் சில அருமையான பொருட்களை கையுடன் இந்த குட்டி பிரிட்ஜ்ஜில் வைத்து எடுத்துக்கொள்ளலாம். இந்த Sarge Mini Car Refrigerator போர்ட்டபிள் தெர்மோஎலக்ட்ரிக் கார் காம்பாக்ட் ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரை வாங்க இது தான் மிக சரியான நேரம்.
அமேசானில் இப்போது இந்த Sarge Mini Car Refrigerator மீது 58% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பணத்தை சேமிக்க இது ஒரு நல்ல சான்ஸ். இந்த குட்டி பிரிட்ஜ் இன் அசல் விலை ரூ.5999 ஆகும். ஆனால், இப்போது இதை வெறும் ரூ.2,499 விலையில் வாங்கலாம். இதன் மூலம் உங்களால் ரூ.3,500 சேமிக்க முடிகிறது. உங்கள் காருக்கான பிரீமியம் மினி ஃப்ரிட்ஜில் பெரிய தொகையைச் சேமிப்பதற்கான வாய்ப்பு இதுவாகும்.


Click it and Unblock the Notifications








