Home
News

மறுநாளே பல்டி அடிச்ச அமைச்சர்.. கட்டாய Sanchar Saathi ஆப் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. மக்கள் பெருமூச்சு!

இந்தியாவில் விற்கப்படும் அனைத்து புதிய மொபைல் போன்களிலும் இந்திய அரசுக்கு சொந்தமான சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) என்கிற சைபர்-பாதுகாப்பு ஆப்பை கட்டாயமாக முன்கூட்டியே இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்கிற உத்தரவும், அதற்கான 90 நாட்கள் கெடுவும் நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் சஞ்சார் சாத்தி ஆப்பை பயனர்களால் டெலிட் செய்ய முடியும் என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் (Union minister for communications) ஆன ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia) தெளிவுபடுத்தியுள்ளார். ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு இந்திய அரசு பிறப்பித்த இந்த புதிய உத்தரவு, பயனர்களின் தனியுரிமை கவலைகளை தூண்டிய மறுநாளே அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

கட்டாய Sanchar Saathi ஆப் விவகாரத்தில் திடீர் திருப்பம்!

சஞ்சார் சாத்தியை நீங்கள் விரும்பவில்லை என்றால், அதை நீக்கலாம். அது உங்கள் விருப்பம் என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஆன ஜோதிராதித்ய சிந்தியா, ஏஎன்ஐ-யிடம் (ANI) கூறியுள்ளார். மேலும் இந்த ஆப் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது நமது கடமை. ஆனால் இதை அவர்களின் போன்களில் வைத்திருப்பதா இல்லையா என்பது பயனரை பொறுத்தது என்றும் கூறியுள்ளார்.

திருடப்பட்ட மொபைல் போன்கள் மூலம் ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் முயற்சியில், இந்திய அரசாங்கம் அனைத்து ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கும் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இது ஸ்மார்ட்போன் தொடர்பான மோசடி மற்றும் சைபர் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் இந்திய அரசாங்கத்தின் இந்த திடீர் நடவடிக்கை, ஆப்பிள் போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுடன் நேரடி மோதலை உருவாக்கும் என்றும், தனியுரிமமற்ற ஆப்களை முன்கூட்டியே நிறுவுவதை தடைசெய்யும் நிறுவன கொள்கைகளுக்கு எதிராக இருக்குமென்றும் நேற்றே கணிக்கப்பட்டு இருந்தது. தற்போது அது உண்மையாகி விட்டது

சஞ்சார் சாத்தி ஆப் என்ன செய்யும்? சஞ்சார் சாத்தி செயலி என்பது, ஒவ்வொரு ஸ்மார்ட்போனிற்குமான 14 முதல் 17 இலக்க அடையாளங்காட்டியான சர்வதேச மொபைல் உபகரண அடையாள (IMEI) எண்ணை பயன்படுத்தி, நெட்வொர்க் தவறாக பயன்படுத்துதல் மற்றும் மோசடி நடவடிக்கைகளிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சைபர் பாதுகாப்பு டூல் ஆகும்.

கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டதிலிருந்து, இந்த ஆப் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது. இந்த ஆப் என்னென்ன உதவிகளை செய்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன: முதலாவதாக இது கடந்த 2025 அக்டோபரில் மட்டும் 50,000 உட்பட 700,000க்கும் மேற்பட்ட தொலைந்து போன மொபைல் போன்களை மீட்டெடுக்க உதவியுள்ளது

மேலும் திருடப்பட்ட அல்லது தொலைந்து போன 3.7 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் போன்களை பிளாக் செய்துள்ளது. மேலும் 30 மில்லியனுக்கும் அதிகமான மோசடி இணைப்புகளை நிறுத்த உதவியுள்ளது. இந்த ஆப் குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவில் - மோசடிகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் நகல் அல்லது ஏமாற்றப்பட்ட ஐஎம்இஐ எண்களின் "கடுமையான ஆபத்தை" எதிர்த்து போராடுவதற்காக இது மிகவும் அத்தியாவ என்று இந்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க சஞ்சார் சாத்தி பிரச்சினை குறித்து விவாதிக்க மற்ற அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க கோரி காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை தாக்கல் செய்தார். அதற்கு பதிலளித்த ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) எம்.பி. சஷாங்க் மணி திரிபாதி, சஞ்சார் சாத்தி ஆப்பை மொபைல் போன்களில் முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற தொலைத்தொடர்புத் துறையின் (DoT) நடவடிக்கையை ஆதரித்தார், இது பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும் என்றும் கூறி உள்ளார்.

அதற்கு "நான் ஐஐடி-ஐ சேர்ந்தவன், எனவே நடக்கும் சைபர் தாக்குதல்களின் வகைகளை நான் புரிந்துகொள்கிறேன். இந்த தகவல் தொடர்பு ஆப் மக்களின் பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும். எங்கள் டேட்டா லீக் ஆகாது. மேலும் உறுதி செய்யப்பட வேண்டிய குடிமக்கள் பாதுகாப்பின் ஒவ்வொரு அம்சமும் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும். இதை நான் வரவேற்கிறேன்" என்று திரிபாதி கூறியதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sanchar Saathi App is Not Mandatory It Can Be Deleted Minister Jyotiraditya Scindia Has Clarified
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X