Home
News

6000 அடி ஆழ்கடலில் புதைந்திருக்கும் பொக்கிஷத்தை சமுத்திரையான் திட்டம் கண்டுபிடிக்குமா?

இந்தியாவின் ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான ஒரு பிரம்மாண்ட திட்டம் தான், சமுத்திராயன் திட்டம் (Samudrayaan Mission). இது ஆழ்கடலில் 6000 அடி ஆழத்தில் நடத்தப்படவுள்ள ஒரு ஆராய்ச்சியாகும். இந்த ஆழ்கடல் ஆராய்ச்சியில் 3 கடல் வீரர்களும் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சுமுத்ராயன் திட்டம் என்பது, இந்திய நாட்டின் முதல் மனிதர்களைக் கொண்ட ஆழ்கடல் ஆய்வு (deep sea research) முயற்சியாகும். இது கடலின் ஆழத்தில் மூழ்கி, ஆழ்கடலில் உள்ள வளங்கள் மற்றும் ஆழ்கடல் பல்லுயிரியலை ஆய்வு செய்யும் ஒரு ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டமாகும். இந்த திட்டத்தை நிறைவேற்ற இந்தியா நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது.

6000 அடி ஆழ்கடலில் புதைந்திருக்கும் பொக்கிஷம்.. சமுத்திரையான் திட்டம்!

இப்போது இந்த திட்டத்தை ஒரு வெற்றிகரமான திட்டமாக மாற்ற தேவையான அணைத்து பணியையும் இந்தியா மிகவும் வேகமாக செய்து வருகிறது. இந்த சமுத்திரையான் திட்டத்தில் 3 ஆழ்கடல் வீரர்களை (3 oceanauts) இந்திய சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute Of Technology Chennai), 6000 அடி ஆழம் வரை அனுப்பவுள்ளது.

இந்த திட்டத்திற்காகவே சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் பிரத்தியேகமான ஒரு மத்ஸ்ய 6000 (Matsya 6000 Submersible) என்ற சப்மர்சிபிள் நீர்முழ்கி கப்பலை உருவாக்கியுள்ளது. இந்த சமுத்திரையான் திட்டத்தின் நோக்கம் மிகவும் பெரிதானது என்று இந்தியா கூறுகிறது. காரணம், சமுத்திரையான் திட்டத்தில் ஆழ்கடலில் மனித குலத்திற்கு இதுவரை எட்டாத பல பொக்கிஷங்கள் ஆழ்கடலில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆழ்கடல் பொக்கிஷங்களை ஆராய்ந்து, கண்டுபிடிப்பதே சமுத்திரையான் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு படி, 6000 அடி ஆழத்தில் கடலுக்குள் பல விலைமதிப்பற்ற உலோகங்கள் இருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. இதில் விலைமதிப்பற்ற உலோகங்களான நிக்கல் (nickel), கோபால்ட் (cobalt), மாங்கனீசு (manganese) போன்ற பொருட்களை கண்டுபிடிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

அதேபோல், ஆழ்கடல் உயிர் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை கணக்கிட முடியும் என்று கூறப்படுகிறது. இந்த சமுத்திரையான் திட்டம் 2021 முதல் 2026 காலகட்டத்திற்குள் நிறைவடையும் என்று நம்பப்படுகிறது. இந்த காலகட்டத்திற்குள் இந்த சமுத்திரையான் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.4,077 கோடி ஆகும்.

6000 அடி ஆழ்கடலில் புதைந்திருக்கும் பொக்கிஷம்.. சமுத்திரையான் திட்டம்!

ஒட்டுமோத்தமாக மதிப்பிடப்பட்ட 4,077 கோடியில் முதற்கட்டமாக இந்த திட்டத்திற்காக ரூ.1,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.405.92 கோடி சமுத்திரையன் திட்டத்திற்கான பணிக்காக வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட இந்த ரூ.405.92 கோடி ரூபாயில் இருந்து ஆராய்ச்சி குழு இதுவரை ரூ.225.35 கோடியை திட்டத்திற்காக பயன்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்திற்காக சில சோதனை ஓட்டங்களை சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் செய்து முடித்துள்ளது. இதில் சமுத்திரையான் திட்டத்தின் மத்ஸ்ய 6000 நீர்முழ்கி நீருக்கு அடியில் நடத்திய சில சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை யூனியன் அமைச்சர் திரு.கிரண் ரிஜ்ஜு அவர்கள் கடந்த செப்டம்பர் 12ம் தேதி வெளியிட்டார்.

சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT - national institute of ocean technology), புவி அறிவியல் அமைச்சகத்தின் (ministry of earth science) கீழ் மத்ஸ்யா 6000 நீர்மூழ்கிக் கருவியை உருவாக்குகிறது. இந்த திட்டத்தின் தலைவர் ஆனந்த் ராமதாஸ் கூறுகையில், சமுத்திரையான் திட்டம் ஆழ்கடல் வழங்கங்களை ஆராய்ந்து அவற்றை உலகிற்கு வெளிப்படுத்துவதாகும் என்று கூறியிருக்கிறார்.

இதுவரை நமக்கு தெரிந்த தகவலின் படி, 1000 அடி ஆழத்தில் ஆழ்கடலில் வாயு ஹைட்ரேட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், இன்னும் ஆழமாக 5000 அடி ஆழம் வரை செல்லும் பொழுது, பல விலைமதிப்பற்ற உலோகங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இன்னும் ஆழமாக 3000 அடி ஆழத்திற்கு செல்லும் பொழுது ஹைட்ரொதெர்மல் ஸல்ஃபைட் (hydrothermal sulphite) போன்றவையும் இருப்பதாக கூறப்படுகிறது.

6000 அடி ஆழத்தில் என்ன பொக்கிஷம் மறைந்துள்ளது என்பதை இந்த சமுத்திரையான் திட்டம் கண்டறியும் என்று ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. சமுத்திரையான் திட்டம் இடைவெளி இல்லாமல் 12 மணி நேரம் ஆழ்கடலில் செயல்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எமெர்ஜென்சி மோடில் மத்ஸ்ய 6000 ஆழ்கடலில் 92 மணி நேரம் வரை 3 ஆழ்கடல் வீரர்களை பத்திரமாக பாதுகாக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samudrayaan Mission To Send With 3 Oceanauts To 6000 Feet Deep Underwater Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X