Home
News

எம்டபுள்யூசி 2017-ல் சாம்சங் கேலக்ஸி எஸ்8.!

இம்மாதம் இறுதியில் நடைபெற உள்ள எம்டபுள்யூசி யில் தனது எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் உள்ளிட்ட புதிய மாடல்களை வெளியிடுகிறது சாம்சங்.அதுகுறித்த தகவல்கள் கீழே.!

By Ilamparidi

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தனது புதிய தயாரிப்புகளான எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் ஆகிய மாடல்களை இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் மாநாட்டில் வெளியிடுகிறது.

அதுகுறித்த பலவிதமான உறுதிப்படுத்தாத தகவல்கள் உலாவருகின்றன.இந்நிலையில் அந்த புதிய மடல் ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ள சிறப்பம்சங்கள் அதன் வெளியீட்டு தேதி உள்ளிட்ட தகவல்களை காண்போம்.

சாம்சங்:

சாம்சங்:

பல வகையிலான ஸ்மார்ட்போன்கள் இப்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் சந்தையை நிரைத்துவிட்டாலும் சாம்சங் ஸ்மார்ட்போனாக்களுக்கென்றே தனியான வாடிக்கையாளர்களும்,அதன் ரசிர்களும் எப்போதுமே உண்டு.ஆகையால் தான் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்பல தனது தயாரிப்புகளை வெளியிட்டாலும் அதன் ரசிகர்கள் மற்றும் அந்நிறுவன போன்களை விரும்புபவர்கள் அதற்கு ஆதரவு அளித்துவந்தனர்.

கேலக்ஸி நோட் 7:

கேலக்ஸி நோட் 7:

தனது தயாரிப்புகளால் வாடிக்கையாளர்களை கவர்ந்து வைத்திருந்த சாம்சங் சென்ற ஆண்டின் ஆகத்து மாதத்தில் வெளியிடப்பட்டது.ஆனால் இந்த வகை போன்கள் எதிர்பார்த்த மாதிரியில்லாமல் வெடிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன.இந்த காரணத்தால் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங்கிற்கு சறுக்கல் ஏற்பட்டது.

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்:

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்:

மேற்கூறிய நிகழ்ச்சியின் காரணமாக சாம்சங் தனது புதிய தயாரிப்புகளின் வாயிலாக சந்தையில் தனது இடத்தை தக்கவைக்க வேண்டிய தேவையும்,தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த போன்களை தயாரித்துத்தரவேண்டிய தேவையும் இருக்கிறது.ஆகையால்,தனது புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்புகளான எஸ்8 மற்றும் எஸ் 8 பிளஸ் உள்ளிட்டவற்றை இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் வெளியிடுகிறது.

அம்சங்கள்:

அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ் 8 மற்றும் எஸ் 8 பிளஸ் ஆகிய சாம்சங்கின் புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் வளைவுள்ள கியூஎச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே,குவால்கம் சினாப்ட்ராகன் 835/ஏக்னோசிஸ் 8895 ப்ராசாஸர் மற்றும் 4 ஜிபி,6 ஜிபி உள்ளிட்ட இருவகை ரேம்களைக் கொண்டும் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியீட்டு தேதி:

வெளியீட்டு தேதி:

சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் ஆகிய தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இம்மாதத்தின் இறுதியில் பிப்ரவரி 27 அன்று நடைபெறவுள்ள எம்டபுள்யூசி நிகழ்வில் வெளியிடப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இம்மாதம் மொபைல் வேர்லட் நிகழ்வில் அறிமுகமாகும் சூப்பர் போன்கள்.!

Best Mobiles in India

English summary
Samsung will have something to say about the Galaxy S8 at MWC.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X