Samsung "தயவால்" அறிமுகமாகும் iPhone 14 சீரீஸ்; Apple-க்கு வந்த சத்திய சோதனை!

|

ஆயிரம் தான் இருந்தாலும் ஐபோன் போல வருமா? என்னதான் பெரிய பிராண்ட் ஆக இருந்தாலும் ஆப்பிள் கம்பெனிக்கு ஈடாகுமா? இதுபோன்ற பேச்சுகள் சிலருக்கு "பந்தா காட்டுவது" போல.. ஓவர் பில்ட்-அப் செய்வது போல தோன்றலாம்.

ஆனால் நிஜம் என்னவென்றால், உண்மையாகவே ஆப்பிள் ஐபோன்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை தான்!

கிட்டத்தட்ட முக்கால்வாசி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனமும், அதன் ஐபோன் மாடல்களும் தான் - பென்ச்மார்க். "ஐபோன் ரேன்ஞ்சிற்கு ஒரு ஸ்மார்ட்போன் ரெடி பண்ணுறோம்!" என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கும் நிறுவனங்கள் இங்கு பல!

இருந்தாலும் ஆப்பிளுக்கு சாம்சங்கின் 'சப்போர்ட்' ஏன் அவசியம்?

இருந்தாலும் ஆப்பிளுக்கு சாம்சங்கின் 'சப்போர்ட்' ஏன் அவசியம்?

ஆப்பிள் இந்த ஆண்டு செப்டம்பரில் அதன் ஐபோன் 14 சீரீஸை உலகளவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக ஆப்பிள் நிறுவனம், சீனாவின் BOE நிறுவனத்தின் டிஸ்ப்ளே பேனல்களை மதிப்பீடு செய்வதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதாவது ஐபோன் 14 சீரிஸில் பயன்படுத்துவதற்காக ஆப்பிள் நிறுவனம், BOE நிறுவனத்திடம் இருந்து டிஸ்பிளே பேனல்களை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது கிடைத்துள்ள மற்றொரு அறிக்கையின் படி, ஆப்பிள் நிறுவனத்திற்கு சாம்சங் தான் கைகொடுக்க உள்ளது.

இந்தாண்டு சாம்சங் தான் மிகப்பெரிய சப்ளையர்!

இந்தாண்டு சாம்சங் தான் மிகப்பெரிய சப்ளையர்!

வெளியான தகவல், ஐபோன் 14 சீரீஸிற்காக, சாம்சங் நிறுவனம் சுமார் 80 மில்லியன் OLED பேனல்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கவுள்ளது என்று மேற்கோளிட்டுள்ளது.

அதாவது இந்த 2022 ஆம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனத்திற்கு சாம்சங் டிஸ்ப்ளே தான் மிகப்பெரிய ஓஎல்இடி சப்ளையர் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆக, சாம்சங்கின் OLED பேனல்கள் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வெகுஜன உற்பத்தி (mass production) மற்றும் விநியோகத்திற்கு செல்லும் என்றும், இந்த பேனல்கள் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ரெகுலர் மாடல்களில் பயன்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவம் செய்த Samsung! ஜூன்.29 வரை வேற எந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க!சம்பவம் செய்த Samsung! ஜூன்.29 வரை வேற எந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க!

ஐபோன் 14 சீரிஸில் என்னென்ன டிஸ்பிளே சைஸ்-களை எதிர்பார்க்கலாம்?

ஐபோன் 14 சீரிஸில் என்னென்ன டிஸ்பிளே சைஸ்-களை எதிர்பார்க்கலாம்?

இந்த ஆண்டு, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 14 சீரீஸின் கீழ் மொத்தம் நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ரெகுலர் ஐபோன்கள், அதாவது ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 மேக்ஸ் (அல்லது பிளஸ்), மற்ற இரண்டும் ப்ரோ மாடல்களாக இருக்கும், அதாவது ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்.

ரெகுலர் மற்றும் ப்ரோ மாடல்கள் 6.1-இன்ச் மற்றும் 6.7-இன்ச் அளவிலான டிஸ்பிளேவை பெறலாம். இதற்கிடையில் வெளியான ஒரு அறிக்கையின்படி, ரெகுலர் ஐபோன் 14 மாடல்களுக்கு மட்டும் சுமார் 38.17 மில்லியன் OLED பேனல்கள் ஒதுக்கப்படலாம்.

சீனாவின் BOE நிறுவனம்

சீனாவின் BOE நிறுவனம் "கழட்டிவிடப்பட" என்ன காரணம்?

டிசைன் தான் காரணம்! முன்னதாக வெளியான தகவல்கள், ஐபோன் 14 சீரீஸிற்கான பேனல்களை BOE உருவாக்கலாம் என்று வெளிப்படுத்தின, இருப்பினும், வடிவமைப்பு மாற்றத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தன் OLED சப்ளையரை மாற்றிக்கொண்டது போல் தெரிகிறது.

இருப்பினும் ஆப்பிள் இன்னுமும் BOE-இன் பேனல்களை மதிப்பீடு செய்து வருகிறது, மேலும் அந்த OLED பேனல்களை ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 மாடல்களில் பயன்படுத்தலாம்.

அப்போ சாம்சங் தான் கெத்து-ஆ!

அப்போ சாம்சங் தான் கெத்து-ஆ!

இல்லை! சாம்சங் மற்றும் BOE நிறுவனத்தை தவிர்த்து, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 13 மற்றும் சில ஐபோன் 14 / ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்காக எல்ஜி நிறுவனத்திடம் இருந்தும் OLED-களை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்திற்காக, சாம்சங் TFT அடிப்படையிலான குறைந்த வெப்பநிலை பாலிகிரிஸ்டலின் ஆக்சைடு (Low-temperature polycrystalline oxide - LTPO) மற்றும் ஐபோன் 14 சீரீஸிற்கான TFT அடிப்படையிலான குறைந்த வெப்பநிலை பாலிசிலிகான் (Low-temperature polysilicon - LTPS) பேனல்களை தயாரிக்கும். இருப்பினும், எந்தெந்த ஐபோன் மாடல்களுக்கு எந்த பேனல் பயன்படுத்தப்பட உள்ளது என்பதில் தெளிவு இல்லை!

Metaverse: ஓவர் பில்ட்-அப் செய்யப்படுகிறதா? அல்லது உண்மையான தொழில்நுட்ப புரட்சியா?Metaverse: ஓவர் பில்ட்-அப் செய்யப்படுகிறதா? அல்லது உண்மையான தொழில்நுட்ப புரட்சியா?

5 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிள் செய்யப்போகும்

5 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிள் செய்யப்போகும் "அதே" மாற்றம்!

மேலே குறிப்பிட்டபடி, எல்லாம் சரியாக நடந்தால், ஐபோன் 14 சீரீஸ் ஆனது இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமாகும் மற்றும் பெஸ்ட் டிஸ்பிளேக்களை பேக் செய்யும்.

அறியாதவர்களுக்கு, ஐபோன் 14 சீரீஸின் ப்ரோ மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் பஞ்ச்-ஹோல் பேனலை "மீண்டும்" கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம், இந்த வடிவமைப்பு மாற்றம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருகிறது, குறிப்பிட்ட நாட்ச் வடிவமைப்பு முதன்முதலில் ஐபோன் எக்ஸ்-இல் கடந்த 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

Best Mobiles in India

English summary
Samsung will be the largest OLED supplier for Apple in 2022 providing 80 million OLED panels for iPhone 14 Series. Check the Details.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X