Samsung பயனர்களுக்கு நிறுவனம் கொடுத்த எச்சரிக்கை.! டேட்டா மீறல் திருட்டால் கவலை.!

|

Samsung பயனர்களுக்கு இப்படி ஒரு மோசமான சிக்கல் உருவாகும் என்று சாம்சங் நிறுவனமே எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர்களின் தகவல்களை பாதுகாக்க வேண்டியது அந்தந்த நிறுவனத்துடைய மிக முக்கியமான வேலையாக இருக்கிறது. ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், தங்கள் பயனர்களுடைய தகவல்களைப் பாதுகாக்கப் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சாம்சங் நிறுவனமும் கூட இது வரை அப்படி தான் செயல்பட்டது.

சாம்சங் பயனர்களின் பர்சனல் தகவல்கள் திருட்டா?

சாம்சங் பயனர்களின் பர்சனல் தகவல்கள் திருட்டா?

ஆனால், இப்போது எதிர்பாராத விதமாக, சாம்சங் அதன் பயனர்களின் பர்சனல் தகவல்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. ஆம், சாம்சங் பயனர்களின் பர்சனல் தகவல்கள் இப்போது அதன் சர்வரில் இருந்து திருட்டு, வெளிப்படையாக டார்க் வெப் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை சாம்சங் நிறுவனம் இப்போது உறுதிப்படத் தெரிவித்துள்ளது. இந்த தகவல் குறித்த சில எச்சரிக்கை தகவலையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கவனமாக இருந்தும் டேட்டா மீறலில் சிக்கிய சாம்சங்

கவனமாக இருந்தும் டேட்டா மீறலில் சிக்கிய சாம்சங்

பிறந்தநாள், காண்டாக்க தகவல், போன்ற தனிப்பட்ட பர்சனல் தகவல்களைத் திருடிய டேட்டா மீறல் அசம்பாவிதம் குறித்து Samsung இப்போது அதன் சில பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலையில் நடந்த டேட்டா மீறலில் அமெரிக்காவில் உள்ள சாம்சங் பயனர்களின் டேட்டாவும் திருடப்பட்டுள்ளது என்று சாம்சங் தெரிவித்துள்ளது. இது உண்மையில் எவ்வளவு மோசமானது என்று பார்க்கலாம்.

உஷார் மக்களே.! Google Chrome எக்ஸ்டென்ஷன் மூலம் தகவல் திருட்டு.! உண்மை அம்பலமானது.!உஷார் மக்களே.! Google Chrome எக்ஸ்டென்ஷன் மூலம் தகவல் திருட்டு.! உண்மை அம்பலமானது.!

சாம்சங் சர்வர்களில் இருந்த பயனர்களின் பர்சனல் தகவல்கள் திருட்டு

சாம்சங் சர்வர்களில் இருந்த பயனர்களின் பர்சனல் தகவல்கள் திருட்டு

சாம்சங் நிறுவனம் ஒரு மின்னஞ்சலில், அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினர் மூலம் சாம்சங்கின் சில அமெரிக்க சர்வர்களில் இருந்த பயனர்களின் பர்சனல் தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளது. ஜூலை 2022 இன் பிற்பகுதியில், அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினர் சாம்சங்கின் சில அமெரிக்க சிஸ்டங்களில் இருந்து தகவல்களைத் திருடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் எல்லாம் திருடப்படவில்லை.. சாம்சங் உறுதி!

இந்த தகவல்கள் எல்லாம் திருடப்படவில்லை.. சாம்சங் உறுதி!

ஆகஸ்ட் 4, 2022, சில பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதிக்கப்பட்டுள்ளதை சாம்சங் விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சர்வர்களை பாதுகாக்க சாம்சங் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது. இருப்பினும், இந்த டேட்டா மீறல், பயனர்களின் சமூகப் பாதுகாப்பு எண்கள் அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண்களை வெளிப்படுத்தவில்லை என்று Samsung உறுதிப்படக் கூறியுள்ளது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

ஒவ்வொரு பயனர்களுக்கு பாதிப்பு வெவ்வேறு மாதிரியாக இருக்குமா?

ஒவ்வொரு பயனர்களுக்கு பாதிப்பு வெவ்வேறு மாதிரியாக இருக்குமா?

குறிப்பாக, இந்த டேட்டா மீறல் மூலம் அமெரிக்காவின் சில பயனர்களின் பெயர், காண்டாக்ட், பிறந்த தேதி மற்றும் தயாரிப்பு பதிவு தகவல் போன்ற தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த தகவல்கள் இப்போது திருடப்பட்டுள்ளதால், ஒவ்வொரு தொடர்புடைய வாடிக்கையாளரையும் பாதிக்கும் விதம் மாறுபடலாம் என்று சாம்சங் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'இதை' மட்டும் செய்யாதீர்கள் என்று எச்சரித்த சாம்சங்

'இதை' மட்டும் செய்யாதீர்கள் என்று எச்சரித்த சாம்சங்

இந்த சம்பவம் மூலம் நுகர்வோர் சாதனங்களை பாதிக்கப்படைய செய்யவில்லை என்பதையும் சாம்சங் விளக்கியுள்ளது. இருப்பினும், பயனர்கள் தங்கள் அக்கௌன்ட்களை பாதுகாப்பாக வைத்திருக்க, அவர்களுடைய பாஸ்வோர்டுகளை மாற்ற வேண்டும் அல்லது தங்கள் சாதனங்களில் குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக, உங்கள் தனிப்பட்ட தகவலை கேட்கும் இணையப் பக்கங்களில் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இனி சர்வர்களில் கூடுதல் பாதுகாப்பா?

இனி சர்வர்களில் கூடுதல் பாதுகாப்பா?

சந்தேகத்திற்கிடமான லிங்க் அல்லது சந்தேகத்திற்குரிய ஈமெயில் மூலம் வரும் லிங்க்-களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சாம்சங் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதில் நிறுவனம் கவனமாக உள்ளதாகக் கூறியுள்ளது. சாம்சங் சர்வர்களை மேலும் பாதுகாப்பானதாக மேம்படுத்த, நிறுவனம் பல உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Warns About Massive Data Breach Users Personal Data Like Phone Number Got Exposed

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X