சாம்சங் 'மெகா' கனவு பலிக்குமா?

Posted By: Staff
சாம்சங் 'மெகா' கனவு பலிக்குமா?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் 60 சதவீத பங்களிப்பை பெற சாம்சங் திட்டமிட்டுள்ளது. உலக அளவில் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் சாம்சங் நிறுவனம் கொடிகட்டி பறக்கிறது.

இந்திய மார்க்கெட்டிலும் சாம்சங்கின் ஆதிக்கம் நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது. தற்போது இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் சாம்சங் பங்களிப்பு 45 சதவீதமாக இருக்கிறது.

இதை 60 சதவீதமாக அதிகரிக்க கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளது சாம்சங். இதற்காக, கேலக்ஸி வரிசையில் அடுத்தடுத்து பல புதிய மாடல்களை களமிறக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு மேலும் பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ்-3 என்றும் சொல்லலாம்.

கடந்த ஆண்டு 80 லட்சம் ஸ்மார்ட்போன்களை தயாரித்த சாம்சங் நிறுவனம், இந்த ஆண்டு 1.8 கோடியில் இருந்து 1.9 கோடி வரையில் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சாம்சங் நிறுவனம் தனது மார்கெட் பங்களிப்பை 60 சதவிகிதம் அதிகப்படுத்த முடியும்.

அதிகமான மார்கெட் பங்களிப்பை பெற கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை வைத்து பெரிய திட்டத்தினையே உருவாக்கி வருகிறது சாம்சங் நிறுவனம் என்று கூறலாம். வர்த்தக ரீதியாக, மார்கெட்டில் அதிக வரவேற்பினை பெறுவது அரிய வாய்ப்பு.

ஆனால் அந்த வாய்ப்பினை தக்க வைத்து கொள்வது மிக முக்கியமான ஒன்று. சாம்சங் கேலக்ஸி வரியை ஸ்மார்ட்போன்களின் மூலம் கிடைத்த வரவேற்பினை, இந்நிறுவனம் சிறப்பாக தக்க வைத்து கொண்டு வருகிறது.

இதனால் கேலக்ஸி வரிசையில் இன்னும் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot