Samsung தரும் ரூ.1150 தள்ளுபடி.. ஃபிலைட், பஸ், மூவீஸ், ஈவென்ட் டிக்கெட் எல்லாம் இனி ஒரே இடத்தில்.. புது சேவை..
சாம்சங் (Samsung) நிறுவனம் இந்தியாவில் புதிதாக சாம்சங் வாலெட் சேவையை (Samsung Wallet) இன்று அறிமுகம் செய்துள்ளது. கூகுள் பே (Google Pay), கூகுள் வாலெட் (Google Wallet), போன்பே (PhonePe), பேடியம் (Paytm), அமேசான் பே (Amazon Pay), சியோமி பே (Xiaomi Pay), வாட்ஸ்அப் பேமென்ட் (WhatsApp Payment) போன்ற பல டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் (Digital Payment) இப்போது இந்தியாவில் பயன்படுத்த கிடைக்கின்றன. இந்த வரிசையில் இப்போது புதிய சேர்ப்பாக சாம்சங் வாலெட் சேவை சேர்க்கப்பட்டுள்ளது.
தென் கொரிய ஜாம்பவான், டெக் உலகின் மகாபிரபு என்று புகழப்படும் சாம்சங் (Samsung) நிறுவனம் இன்று இந்திய சந்தையில் அதன் புதிய சாம்சங் வாலெட் சேவையை (Samsung Wallet Service) அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை எப்படி செயல்படும்? இந்த சேவையின் கீழ் என்னென்ன சேவைகளை எல்லாம் மக்கள் எளிமையாக பயன்படுத்தலாம். இதன் மூலம் நமக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது போன்ற முழு விபரத்தை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் வாலெட் (Samsung Wallet):
சாம்சங் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சேவையின் மூலம், பல வகையான டிக்கெட் புக்கிங் (Ticket booking) எல்லாம் இனி ஒரே இடத்தில் பல சலுகைகளுடன் கிடைக்கப் போகிறது மக்களே. இனி ஃபிலைட் (Flight), பஸ் (Bus), திரைப்பட (Movies) மற்றும் ஈவென்ட்களுக்கான (Events) டிக்கெட் என்று பல சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவுகளை இனி நீங்கள் சாம்சங் வாலெட் மூலம் மேற்கொள்ளலாம்.
இந்த புதிய சேவையை சாம்சங் நிறுவனம் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (One97 Communications Limited) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உருவாக்கியுள்ளது. தெரியாதவர்களுக்கு, இந்த நிறுவனம் பேடியம் (Paytm) சேவைக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் இந்தியாவின் பணம் செலுத்துதல் மற்றும் நிதிச் சேவைத் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்த புதிய சாம்சங் வாலெட் சேவையின் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம். முதலில் இந்த சேவை சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு (Samsung Galaxy Smartphone Users) அணுக கிடைக்குமென்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவை பேடியம் சேவைக்கான நேரடி அணுகலை சாம்சங் வாலெட் வழியாக வழங்குகிறது.
ஃபிலைட், பஸ், மூவீஸ், ஈவென்ட் டிக்கெட் எல்லாம் இனி ஒரே இடத்தில்.. ரூ. 1150 வரை தள்ளுபடி:
இந்த சாம்சங் வாலெட் சேவையை பயன்படுத்தி, சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் பயனர்கள் ஃபிலைட் டிக்கெட், பஸ் டிக்கெட், மூவி டிக்கெட், மற்றும் ஈவென்ட் டிக்கெட்களை பதிவு செய்யலாம். நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு டிக்கெட்டும் சாம்சங் வாலெட் தலத்தில் நேரடியாக சேமித்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் ஏர்போர்ட் (Airport), பேருந்து நிலையம், சினிமா தியேட்டர் (Cinema Theater) அல்லது ஈவென்ட் அரங்களில் ஈஸியாக டிக்கெட்களை காண்பிக்கலாம்.
இந்த புதிய சாம்சங் வாலெட் சேவையை பயன்படுத்தும் பொழுது, முதல் முறை டிக்கெட் முன்பதிவிற்கு ரூ. 1150 வரை தள்ளுபடி கிடைக்குமென்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. சாம்சங் வாலெட் (Samsung Wallet) சேவை மிகவும் பாதுகாப்பான தளமாக உருவாக்கப்பட்டிருப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications