விரைவில் அறிமுகமாகும் சாம்சங் Foldable Smartphone.! முழு விவரம்.!
சாம்சங் நிறுவனம் தனது டபிள்யூ 21 5ஜி போல்டபிள் ஸ்மார்ட்போன் ( W21 5G Foldable Phone) மாடலை வரும் நவம்பர் 4-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மாரட்போன் முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 2-க்கு ஒத்ததாக இருக்கிறது.

குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், W21 5G ஆனது 5ஜி இணைப்பிற்காக சீனா டெலிகாம் கேரியருடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் இதுபோன்று சாம்சங் டபிள்யூ 20 5ஜி மாடலை அறிமுகப்படுத்தியது. மேலும் சாம்சங் டபிள்யூ 20 5ஜி என்பது கேலக்ஸி போல்ட் ஸ்மார்ட்போனின் 5ஜி-ரெடி பதிப்பாகும், இது ஸ்னாப்டிராகன் 855 SoC க்கு பதிலாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ SoC மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் சாம்சங் டபிள்யூ 21 5ஜி சமீபத்தில் தரச்சான்றிதழ் தளமான TENAA-வில் காணப்பட்டது மற்றும் அது முக்கிய அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புக் பற்றிய விவரங்களையும் வழங்குகிறது.

வெளிவந்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 4-ம் தேதி சீனாவில் அறிமுகமாகும். இந்த வெளியீட்டு நிகழ்வு உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு) தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விவரங்களில் தெளிவு இல்லை. ஆனாலும் சாம்சங் டபிள்யூ 21 5 ஜி சீனா டெலிகாம் கேரியருடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சாம்சங் டபிள்யூ 21 5ஜி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 2 உடன் ஒத்ததாக இருக்கலாம்.

இந்த சாம்சங் W21 5G ஸ்மார்ட்போனில் அளவிலான (1,768x2,208 பிக்சல்கள்) டிஸ்ப்ளே இடம்பெற வாய்ப்புள்ளது. இதில் 6.23 இன்ச் ((816x2,260 பிக்சல்கள்) கவர் டிஸ்ப்ளேவும் இருக்கலாம். மேலும் இந்த சாதனம் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி வசியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் W21 5G ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் சிப்செட் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சாம்சங் டபிள்யூ 21 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று 12 மெகாபிக்சல் சென்சார்களை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுருக்கலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 12 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

சாம்சங் W21 5G சாதனத்தில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது டூயல் செல் பேட்டரியை (2,090mAh + 2,160mAh)பேக் செய்யலாம். கடைசியாக இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 288 கிராம் எடையுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications