ரூ.300க்கு Samsung, OPPO பவர் பேங்க்.. ரயிலில் கூவிக்கூவி விற்பனை.. திறந்து உள்ளே பார்த்தா? ஆடிப்போன பயணி..
ரயில் பயணத்தின் போது டீ, காபி, உணவு, தண்ணீர் பாட்டில் போன்ற அத்தியாவசியமான பொருட்களை ரயில் பெட்டிகளுக்குள் சிலர் விற்பனை செய்வது வழக்கம். இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வு தான் என்றாலும், சமீபத்தில் ஓடும் ரயிலில் ஒருவர் சாம்சங், ஒப்போ, விவோ என்று பல தலைசிறந்த பிராண்டுகளின் பவர் பேங்க் சாதனங்களை அடிமட்ட விலைக்கு ரயில் பயணிகளிடம் கூவிக்கூவி விற்பனை செய்த நிகழ்வு சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. இவர் விற்பனை செய்த விதமும், இவர் கொடுத்த பொருளும் இப்போது இணையத்தை உள்ளுக்கியுள்ளது என்று கூட நாம் கூறலாம்.
முன்னொரு காலத்தில் ரயிலில் டீ, காபி, உணவு, தண்ணீர் பாட்டில் போன்ற அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே விற்பனை செய்து வந்தனர். தற்போது இந்த காலம் மாறி, ரயிலில் பவர் பேங்க் (Power bank), மொபைல் கேஸ் (Mobile case), ஸ்மார்ட்போன் கவர் (Smartphone cover), சார்ஜ்ர் கேபிள் (Charger cable), சார்ஜ்ர் ஹெட் (Mobile charger head), என்று பல கைக்கு அடக்கமான கேட்ஜெட் சாதனங்கள் இப்போது ரயில்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ரயிலில் 300 ரூபாய்க்கு கூவிக்கூவி விற்கப்பட்ட Samsung, Vivo பவர் பேங்க் (Power bank):
ரயிலில் உரிய உரிமம் இல்லாமல் பொதுமக்கள் பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் தான் என்றாலும், இந்தியா முழுக்க ஓடும் ரயில்களில் பல விதமான பொருட்களை சிலர் வயிற்று பிழைப்பிற்காக விற்பனை செய்து வருகிறார்கள். இப்படி சமீபத்தில் ரயிலில் உள்ள ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிக்குள் (Sleeper class coach) ஒரு நபர் பவர் பேங்க் (Power bank) வாங்கலையோ, பவர் பேங்க் என்று கூவிக்கூவி விற்பனை செய்திருக்கிறார்.
ஸ்லீப்பர் கோச்சில் அமர்ந்திருந்த நபர் ''இது ஒரிஜினலா (Original) என்ற கேள்வியை எழுப்ப, அந்த பவர் பேங்க் விற்பனை செய்யும் வியாபாரி, ஆமாம், சார் ஒரிஜினல் தான், சும்மா ஒன்னும் இல்லை, இதை நீங்கள் வாங்கினா உங்களுக்கு 1 வருட வாரண்டி (1 year warranty) தருகிறேன். கீழே விழுந்து உடைந்தாலோ அல்லது பழுதானாலோ உடனே ரீபிளேஸ்மென்ட் செய்து தருகிறேன்''. என்று வாய் கூசாமல் பல பொய்களை அடுக்கிக்கொண்டே சென்றிருக்கிறார்.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும், ஸ்லீப்பர் கோச்சில் இருந்த நபர் மேல் பெர்த்தில் அமர்ந்தபடி தனது ஸ்மார்ட்போன் கேமராவில் ரெக்கார்ட் (camera recording) செய்திருக்கிறார். ''உங்களிடம் எந்த கம்பெனி பவர் பேங்க் இருக்கிறதென்று அந்நபர் கேட்க, எங்களிடம் எல்லா பிராண்டும் இருக்கிறது, இதோ சாம்சங் பவர் பேங்க் இருக்கிறது, விவோ பவர் பேங்க் இருக்கிறது'' என்று கூறி ஒவ்வொரு பிராண்டின் பெயர் அச்சிடப்பட்ட டப்பாக்களை அந்த நபர் கையில் தருகிறார் வியாபாரி.
பவர் பேங்க்கை திறந்து பார்த்து ஆடிப்போன பயணி.. உள்ளே என்ன இருந்தது தெரியுமா?
விலை என்ன என்று கேட்டதும், ஒவ்வொரு பவர் பேங்க்கிற்கும் ஒவ்வொரு ரேட் (Power bank price), என்னிடம் ரூ. 500 முதல் ரூ.550 விலை வரையிலான மாடல்கள் மட்டுமே இப்போது இருப்பதாக கூறியிருக்கிறார். சாம்சங் (Samsung) பவர் பேங்க் விலையை குறைக்க சொல்லி அந்த நபர் கேட்டதும், வியாபாரி உடனே சரி என்று கூறி 300 ரூபாய் கொடுங்கள் போதும் என்று கூறி பவர் பேங்க்கை ஒப்படைத்துவிட்டார்.
வியாபாரி எதிர்பார்க்காத நேரத்தில், அந்த நபர் பவர்பேங்க் பாடியை (body) உடனே கைகளால் ஓபன் செய்து பார்த்திவிடுகிறார். பவர் பேங்க் உள்ளே ஒரே ஒரு மட்டமான பேட்டரியும், பவர் பேங்க் எடைக்காக உள்ளே வெறும் மணல்களால் (Mud) நிரப்பட்டிருப்பதை பார்த்து அந்நபர் அதிர்ந்துபோய்விடுகிறார். என்ன இது என்று வியாபாரியிடம் கேள்வி கேட்க, வியாபாரி பதட்டத்தில் இவரிடம் இருக்கும் பவர் பேங்க் மற்றும் இவர் ரெக்கார்ட் செய்த போனை பறிக்க முயற்சித்திருக்கிறார்.
இந்த 2024 ஆம் ஆண்டில் மிகவும் மோசமான மோசடி (Biggest scam on 2024) இது தான் என்று அந்த நபர் ரெக்கார்ட் செய்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் (Social media) பதிவிட்டிருக்கிறார். ரயில்களில் இதேபோல், பலர் ஏமாற்றப்படுவதாக அந்த பதிவில் கமெண்ட் செய்துள்ளனர். இந்த தகவலை பொதுமக்கள் அனைவருக்கும் அனுப்பி, விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். IRCTC ரயிலில் அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் இருந்து எந்த பொருளையும் நம்பி வாங்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.


Click it and Unblock the Notifications