பழைய Samsung போன் வச்சி இருக்குறவங்களுக்கு அடிச்ச அதிர்ஷ்டம்.. உடனே My Galaxy ஆப்குள்ள போங்க! ஏன்னா?
சாம்சங் (Samsung) நிறுவனம், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக "அப்கிரேட் டு அவேஸம்" லாயல்டி என்கிற புதிய திட்டத்தை (Upgrade to Awesome Loyalty Program) அறிவித்துள்ளது. இது பலதரப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை மலிவு விலையில் வாங்க அனுமதிக்கும் ஒரு திட்டமாகும்.
சாம்சங்கின் இந்த சிறப்பு திட்டத்தின் கீழ், 2020 ஆம் ஆண்டுக்கு முன் வாங்கிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் இருந்து லேட்டஸ்ட் கேலக்ஸி ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு அப்கிரேட் ஆவதற்கான சிறப்பு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் கிடைக்கும். இதன்கீழ் எந்தெந்த மாடல்கள் என்ன விலைக்கு கிடைக்கும்? இந்த திட்டத்தின்கீழ் பழைய மாடல்களுக்கான சலுகையை பெறுவது எப்படி? இதோ விவரங்கள்:

இந்த "அப்கிரேட் டு அவேஸம்" லாயல்டி திட்டத்தின் கீழ் கேலக்ஸி ஏ54 5ஜி, கேலக்ஸி ஏ34 5ஜி, கேலக்ஸி ஏ23 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ14 5ஜி உள்ளிட்ட சாம்சங்கின் பிரபலமான பல ஸ்மார்ட்போன்கள், சலுகை விலையில் வாங்க கிடைக்கும். இந்த அப்கிரேட் திட்டத்தின் கீழ் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் கஸ்டமர்களுக்கு கேஷ்பேக் மற்றும் சாம்சங் கேர்+ ஸ்கிரீன் ப்ரொடெக்ஷன் பேக் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.14,499 க்கு வாங்கலாம்; நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.18,449 ஆகும். இந்த மாடலுக்கான இஎம்ஐ விருப்பங்கள் ரூ.973 முதல் தொடங்குகிறது.

இதேபோல சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை வெறும் ரூ.18,499 க்கு வாங்க முடியும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.28,990 ஆகும். இந்த மாடலுக்கான இஎம்ஐ விருப்பங்கள் ரூ.1047 முதல் தொடங்குகிறது.
ஒருவேளை நீங்கள் சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், சாம்சங்கின் இந்த லாயல்டி திட்டத்தின்கீழ் இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கும்; நினைவூட்டும் வண்ணம் இந்த போனின் அசல் விலை ரூ.35,499 ஆகும். இந்த மாடலுக்கான இஎம்ஐ விருப்பங்கள் ரூ.1485 முதல் தொடங்குகிறது.
இதேபோல சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் வெறும் ரூ.33,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.41,999 ஆகும். இந்த மாடலுக்கான இஎம்ஐ விருப்பங்கள் ரூ.1883 முதல் தொடங்குகிறது.

மேற்கண்ட எல்லா சாம்சங் கேலக்ஸி ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்டு இயங்குகின்றன மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரிகளை பேக் செய்கின்றன. இந்த லாயல்டி திட்டத்தின்கீழ் பழைய சாம்சங் போன்களை லேட்டஸ்ட் மாடல்களாக மாற்ற விரும்புவர்கள் தங்கள் பழைய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் உள்ள மை கேலக்ஸி ஆப் வழியாக இந்த சலுகையை பெறலாம்.
மை கேலக்ஸி ஆப்பில் மேற்கண்ட சலுகையின் பலன்களைக் குறிப்பிடும் பேனர் ஒன்றை காண்பீர்கள். அதன் வழியாக உங்களுடைய பழைய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் ஒரு தனிப்பட்ட குறியீட்டை உருவாக்க வேண்டும். பின்னர் புதிதாக வாங்கிய சாம்சங் கேலக்ஸி ஏ-சீரீஸ் 5 ஸ்மார்ட்போனில் உள்ள மை கேலக்ஸி ஆப்பில் லாக்-இன் செய்ய வேண்டும்.

அங்கே தகுதியான பயனர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் பேனரை பார்க்க முடியும். அந்த பேனரை கிளிக் செய்வதன் மூலம், மை கேலக்ஸி ஆப் ஆனது (லாக்-இன் செய்ய பயன்படுத்திய) வாடிக்கையாளர்களின் மொபைல் நம்பரை சரிபார்த்து, பின்னர் ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ நம்பர் ஆகியவற்றையும் சரிபார்க்கும்.
மை கேலக்ஸி ஆப்பில் நடக்கும் இந்த சரிபார்த்தல் வெற்றிகரமாக முடிந்த பிறகு, அந்த ஆப்பின் கூப்பன் ஜெனரேஷன் மெக்கானிசம் ஆனது உங்களுக்கான கூப்பன் குறியீட்டை உங்களுடனும், சாம்சங் கேர் பிளஸ் உடனும் பகிரும். அதனை தொடர்ந்து 48 மணிநேரத்திற்குள் பாலிசி ஆக்டிவேட் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








