Home
News

கேமரானா என்னான்னு தெரியுமா? 108 எம்பி நோ ஷேக் கேம்! நைட்டோகிராபி வேற! இது Samsung டே!

இந்தியாவில் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி (Samsung Galaxy F54 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன் மிட்-ரேன்ஞ் விலையில் 108 எம்பி நோ ஷேக் (No Shake Camera) கேமரா உடன் வருகிறது.

அதோடு, நைட்டோகிராபி (Nightography), அஸ்ட்ரோலாப்ஸ் (Astrolapse) உள்ளிட்ட ஃபிளாக்ஷிப் போனின் அம்சங்களை கொண்டுள்ளது. இவ்வளவு கம்மியான விலையில் பின்னி எடுக்கும் கேமரா அம்சங்கள் வருவது, இதுவே முதல்முறை என்பதால், சாம்சங் பிரியர்களும், கேமரா பிரியர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த போனின் மற்ற அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

கேமரானா என்னான்னு தெரியுமா? 108 எம்பி நோ ஷேக் கேம்! நைட்டோகிராபி வேற!

சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி அம்சங்கள்: இந்த சாம்சங் போன் ஃபிளாக்ஷிப் போன்களில் வரும் கேமரா அம்சங்களை கொண்டுள்ளது. 108 எம்பி நோ ஷேக் கேமரா (No Shake Camera) உடன் 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் (Ultra Wide Lens) 2 எம்பி மேக்ரோ லென்ஸ் (Macro Lens) வருகிறது.

32 எம்பி செல்பீ கேமரா உள்ளது. மெயின் கேமராவில் நைட்டோகிராபி (Nightography) மற்றும் நோ ஷேக் கேம் அம்சங்கள் உள்ளன. இதன் மூலம் இரவு நேரங்களில் மிகவும் துல்லியமான போட்டோக்களை எடுக்க முடியும். அதேபோல எவ்வளவு ஷேக் (Shake) செய்யப்பட்டு, போட்டோ எடுத்தாலும், கச்சிதமான போக்கஸ் (Focus) கிடைக்கும். சொல்லப்போனால், ஆக்ஷன் படங்களையே, இந்த போனை வைத்து எடுக்கலாம்.

சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side - Mounted Fingerprint Sensor) வருகிறது. இந்த போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் எஸ்அமோலெட் ( sAMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 25W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000 mAh பேட்டரி வருகிறது. ஆண்ட்ராய்டு 13 உடன் எக்ஸிநோஸ் 1380 5என்எம் ( Exynos 1380 5nm) சிப்செட் வருகிறது.

பிரீமியம் டிசைனில் மிட்யோர் ப்ளூ (Meteor Blue) மற்றும் ஸ்டார்டஸ்ட் சில்வர் (Stardust Silver) ஆகிய இரண்டு நிறங்களில் வருகிறது. மொத்தமாக 199 கிராம் எடை உள்ளது. டைப் சி சார்ஜிங் + ஆடியோ போர்ட் வருகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதி உடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனில் 1 டிபி வரையில் மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த போனின் விலையை பொறுத்தவரையில் ரூ.27,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டில் (Flipkart) விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அதோடு ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Unveils Galaxy F54 5G with 108MP No Shake Camera, 6000 mAh Battery Here is Full Specification, Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X