சாம்சங் Galaxy Unpacked 2020 நிகழ்வை லைவ் பார்ப்பது எப்படி?

|

தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் ஒரு முக்கிய தொழில்நுட்ப நிகழ்வை இன்று இரவு திட்டமிட்டுள்ளது. சாம்சங் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் தனது கேலக்ஸி அன்பேக்டு 2020 (Galaxy Unpacked) வெளியீட்டு நிகழ்வை இன்று நிகழ்த்தவுள்ளது. இந்த நேரலை நிகழ்வை எப்படிப் பார்ப்பது? இந்த நிகழ்வின் போது என்ன என்ன சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்ற அனைத்து விபரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

சாம்சங் Galaxy Unpacked 2020 நிகழ்வை லைவ் பார்ப்பது எப்படி?

சாம்சங் நிறுவனம் தனது Galaxy Unpacked 2020 ஈவென்ட் நிகழ்வை இன்று இரவு நிகழ்த்தவுள்ளது. இந்த பிரமாண்டமான நிகழ்வின் போது சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், கேலக்ஸி இசட் போல்ட் 2 ஸ்மார்ட்போன், கேலக்ஸி பட்ஸ் லைவ், கேலக்ஸி வாட்ச் 3, கேலக்ஸி டேப் எஸ் 7 மற்றும் பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிரமாண்டமான சாம்சங் கேலக்ஸி Unpacked 2020 நிகழ்வு சாம்சங்கின் ஆன்லைன் சேனல்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இந்த அறிமுக வெளியீட்டு நிகழ்வு இரவு 7:30 மணி IST தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பு படி, இது சாம்சங் குளோபல் நியூஸ்ரூம், சாம்சங்.காம் மற்றும் சாம்சங் குளோபலின் பேஸ்புக் பக்கம் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இந்த ஆண்டு நடைபெறும் சாம்சங் Galaxy Unpacked 2020 நிகழ்வு என்பது, சாம்சங்கின் முதல் ஆன்லைன் மட்டும் கேலக்ஸி Unpacked நிகழ்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, எனவே இது எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை நாம் பொறுத்திருந்து நேரலையில் தான் காண வேண்டும், புதிய சாதனைகள் பற்றிய விபரங்களைத் தெரிந்துகொள்ளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் சேனலை பாருங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Unpacked 2020: How To Watch And What To Expect From Live Event : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X